இதோ பயனுள்ள சமையல் குறிப்புகள் உங்களுக்காக!

இதோ பயனுள்ள சமையல் குறிப்புகள் உங்களுக்காக!

கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

ருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.

மையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள் களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

ரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.

புளிக்குழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.

றைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

ண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்

காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

வா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

வா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

யிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

யிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.

வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.

ழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.

நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

டியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்

பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com