
தற்போது பெண்கள் பல துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். Information and communication technology (ICT) என்ற பிரிவிலும் உலக அளவில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் அதிக இளம்பெண்களை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டும் ஒரு வளமான வரலாற்றை சர்வதேச ஐசிசி பெண்கள் தினம் கொண்டுள்ளது. இந்த நாள் 2014 ஆம் ஆண்டு சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியத்தின் 70 வது முழு அதிகாரத் தீர்மானத்தால் தொடங்கப்பட்டது.
ஆண்கள் அதிக அளவில் பணிபுரியும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பெண்கள் சக்தி வாய்ந்த பணியாளர்களாக மாறவும், தங்கள் பணியை சிறப்பாக செய்யவும், பாலின பாகுபாடுகளை குறைத்து, பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் வெளிப்பாடே இந்த நாளைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும்.
தகவல் தொடர்பு தொழில்நுட்ப உலகை எப்படி அணுகுவது, பெண்களின் பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்கிறது. சமமான டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளை ஆதரிக்கிறது. தொழில் நுட்பம் தொடர்பான துறைகளில் பெண்கள் ஈடுபடுவதை தடுக்கும் எதிர்மறையான ஸ்டீரியோ டைப் சவால்களை சரி செய்கிறது.
பெண்கள் பங்களிப்பு மற்றும் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்த துறையான ஐ.சி.டி யில் உலகெங்கிலும் உள்ள இளம் பெண்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் கணினி மற்றும் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியில் பெண்கள் ஈடுபடுவதை இந்த நாள் வலியுறுத்துகிறது.
கணினிகள், கோடிங் மற்றும் இணையம் பற்றி கற்றுக் கொள்வதையும், கலை மற்றும் வடிவமைப்பு முதல் அறிவியல் மற்றும் வணிகம் வரை பெண்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு தொழிலும் அவர்களுக்கு உதவும் என்பதை உணர்த்துவதையும் இந்த நாள் வலியுறுத்துகிறது.
தொழில்நுட்பத் திறன்கள் உள்ள பெண்கள் மிகவும் சுதந்திரமாகவும் எதிர்கால வேலைகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது. தொழில் நுட்பத் துறைகளில் அதிக அளவில் பெண்கள் பணிபுரியும்போது பணியிடங்களில் அனைவருக்கும் நியாயமான சமமான மற்றும் சமநிலையான சூழ்நிலைகள் வழங்குவதை உறுதி செய்கிறது.
ரோபோக்களை உருவாக்குவது அல்லது செயலிகளை உருவாக்குவது போன்ற தொழில்நுட்பத்தில் பெண்கள் ஈடுபட்டால் அவர்கள் அவற்றை இன்னும் சிறப்பாக செய்வார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். அவர்கள் புதிய யோசனைகளையும் பல்வேறு சிந்தனை முறைகளையும் கொண்டு செயல்படுவார்கள். அதிக படைப்பாற்றலுக்கும் பிரச்னைக்கான சிறந்த தீர்வுகளுக்கும் வழிவகுக்கும்.
இந்த நாள் பெண்கள் புதிய திறன்களை கற்றுக் கொள்ளவும், வழிகாட்டிகளை சந்திக்கவும், உதவித் தொகைகள் அல்லது தொழில்நுட்பத்தில் வேலை வாய்ப்புகள் போன்றவற்றை அறியவும் பல நிகழ்வுகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. இதனால் பெண்கள் தொழில்நுட்பத் துறையில் சிறந்த தலைவர்களாக மாறலாம்.