மேக்கப்போட தூங்கிடாதீங்க... இந்த 10 விஷயம் முக்கியமுங்க!

Skincare
Skincare
Published on

பெண்கள் ஒப்பனை செய்து கொள்வதை விரும்புவார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் படுக்கைக்குச் செல்லும் முன் மேக்கப் போடும் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் முறையாக மேக்கப்பை அகற்றிவிட்டு தான் தூங்க வேண்டும். ஏன் என்பதற்கான 10 காரணங்களை பார்ப்போம்:

1. முகப்பரு, கரும்புள்ளிகள்:

முகத்திற்கு மேக்கப் செய்து கொண்டு நாள் முழுவதும் வெளியில் செல்லும்போது, அழுக்கு, எண்ணெய் மற்றும் சுற்றுச்சூழல் மாசுகள் அனைத்தும் முகத்தில் படியும். வீட்டிற்கு வந்து மேக்கப்பை அகற்றாமல் தூங்கச் சென்றால், அது முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் பிற சரும குறைபாடுகள் ஏற்பட வழி வகுக்கும். முறையாக மேக்கப்பை அகற்றி சுத்தப்படுத்தும் போதுதான் முகத்தில் இருக்கும் சருமம் சுதந்திரமாக சுவாசிக்க முடியும்.

2. புதுப்பித்தலுக்கு இடையூறு:

உறங்கும் போது, நமது சருமம் முக்கியமான பழுது மற்றும் மீள் உருவாக்கம் போன்ற செயல்முறைகளுக்கு உட்படுகிறது. மேக்கப்பை அகற்றாமல் விட்டால் அது இயற்கையான புதுப்பித்தலுக்கு இடையூறாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மேக்கப் ரிமூவர் பயன்படுத்தும்போது நாம் கவனிக்க வேண்டியவை!
Skincare

3. கண் தொற்று நோய்கள்:

கண்களில் போடப்பட்டிருக்கும் மஸ்காரா, ஐ லைனர், காஜல் போன்ற அலங்காரங்களை அகற்றாமல் விட்டு விடும்போது கண்கள் சிவப்பதற்கும் எரிச்சலுக்கும் கண் தொற்று நோய்களுக்கும் வழிவகுக்கும். மஸ்காரா மற்றும் ஐலைனர் போன்ற தயாரிப்புகள் காலப்போக்கில் பாக்டீரியாவை அப்படியே கண்களில் தங்கச் செய்துவிடும்.

4. முன்கூட்டிய முதுமையைத் தடுக்கிறது:

ஒப்பனை, சருமத்தில் ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளை முகத்திலேயே தங்க வைக்கும். இது செல்லுலார் சேதம் மற்றும் விரைவான முதுமைக்கு காரணமாக அமைந்து விடும். முகத்தை சுத்தம் செய்வதால் தீங்கு விளைவிக்கும் துகள்களை நீக்கி சருமத்தின் இளமை தோற்றத்தை தக்க வைக்க முடியும். மேலும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களின் வளர்ச்சியும் மேக்கப்பை அகற்றும் போது குறைக்கிறது.

5. சரும நீரேற்றப் பராமரிப்பு:

மேக்கப்புடன் தூங்கும் போது சருமம் வறண்டு மந்தமாக மாறிவிடும். பெரும்பாலான மேக்கப் சாதனங்களில் சருமத்திலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடிய பொருள்கள் உள்ளன. மேக்கப்பை அகற்றுவது, இயற்கையான ஈரப்பதத்தை தக்க வைத்து ஆரோக்கியமான நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
மேக்கப் போடும்போது செய்யக்கூடாத தவறுகள்! 
Skincare

6. தோல் அமைப்பு மேம்படுதல்:

மேக்கப்பை அகற்றத் தவறும் போது சருமத்தின் மேற்பரப்பில் பாதிப்புகள் ஏற்பட்டு சீரற்ற சரும அமைப்பு உருவாகும். முகத்தை சுத்தப்படுத்தி தூங்கும் போது அது இறந்த சரும செல்களை அகற்றி செல்களை ஊக்குவித்து மென்மையான அமைப்பை பராமரிக்க உதவுகிறது.

7. சருமத்தின் அமைப்பில் பாதிப்பு:

முகத்திற்கு பயன்படுத்தப்படும் சீரம், கிரீம்கள் மாயசரைசர்கள் போன்றவை அகற்றப்படாமல் இருக்கும் போது அவை சருமத்தில் ஊடுருவி சருமத்தின் இயற்கையான அமைப்பை பாதிக்கும்.

8. முகச் சுருக்கங்கள் கோடுகள்:

முகத்தை சுத்தமாக கழுவி தூங்கும்போது பிரகாசமான நிறத்தில் இருக்கும். முகத்தை கழுவாமல் தூங்கும்போது ஒரே இரவில் முகத்தில் சுருக்கங்கள் கோடுகள் போன்றவை உருவாகிவிடும். இதனால் காலையில் எழுந்ததும் முகம் மந்தமாகவும் சோர்வாகவும் காணப்படும். மேக்கப்பை அகற்றி விட்டால் சருமம் புத்துணர்ச்சியுடனும் துடிப்புடனும் இருக்கும்.

9. வீக்கம் மற்றும் ஒவ்வாமை:

சில ஒப்பனைப் பொருள்கள் ஒவ்வாமை எதிர் வினைகளை ஏற்படுத்தலாம் அல்லது உணர்திறன் வாய்ந்த சருமத்தை எரிச்சல் அடையச் செய்யலாம். இது வீக்கம் மற்றும் முகச்சிவப்பிற்கு வழிவகுக்கும். இரவில் மேக்கப்பை அகற்றினால் இந்த அபாயங்களை தடுக்கலாம்.

10. ஆரோக்கியமான சரும பராமரிப்பு:

முறையாக மேக்கப்பை அகற்றுவது நல்ல சரும பராமரிப்பு பழக்கங்களுக்கு அடித்தளமாக அமைகிறது. சருமத்தை பராமரிப்பது நிலைத் தன்மையை ஊக்குவிக்கிறது. நீண்டகால ஆரோக்கியத்திற்கும் அவசியமாக அமைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com