சிறுகதை: Judge அம்மா தீர்ப்பு!

கதைப் பொங்கல் 2026
Couple in court
Couple in courtAI Image
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

வினோத் சீக்கிரமாக எழுந்து குளித்து விட்டு தெருமுனை கடையில் இரண்டு இட்லியை வாங்கி சாப்பிட்டு, வேக வேகமாக ஒரு ஆட்டோவை பிடித்து கோர்ட் வாசலில் வந்திறங்கினான். மது முதலிலேயே வந்து வெயிட் பண்ணி கொண்டிருந்தாள். இரண்டு பேருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. முதல் ஒரு வருடம் நன்றாக தான் இருந்தார்கள். யார் கண் பட்டதோ தெரியாது இரண்டு பேருக்கும் நடுவில் கருத்து வேறுபாடு உண்டானது.

இருவருக்கும் இடையே என்ன பிரச்னை என்றே சரியாக தெரியவில்லை. இரண்டு பெற்றோர்களும் எடுத்து சொல்லியும் கேட்காமல் இருவரும் இதோ கோர்ட் வாசலில் நின்று கொண்டிருக்கிறார்கள். Judge அம்மா இவர்களுடைய கேஸ் பைலை படித்து விட்டு இருவரையும் உள்ளே அழைத்தார்.

முதலில் வினோத்தை விசாரிக்க ஆரம்பித்தார். "சொல்லுங்க வினோத். என்ன பிரச்னை? எதுக்கு டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணியிருக்கீங்க?"

"மேடம், இவ கூட இனி என்னால வாழ முடியாது."

"அப்படி சொன்னா என்ன அர்த்தம். கோர்ட்ல வந்துட்டு முடியும் முடியாது என்று மொட்டையா சொன்னா ஒத்துக் கொள்ள முடியாது Mr. Vinodh. பூரா தெளிவாக ஏன் என்ற விளக்கத்தை சொல்லுங்க."

"மேடம், அவ ஒரு psycho. இனி என்னால முடியாது, அவ்வளவு தான். Please இதுக்கு மேலே எதையும் என்கிட்ட கேக்காதிங்க."

Judge மேடம் அவனை முறைத்து விட்டு, "சரி இப்ப உங்க மனைவியை விசாரிக்க போறேன். நீங்கள் வாயை திறக்க கூடாது," என்றார்.

பிறகு மதுவை பார்த்து, "எம்மா என்ன தான் பிரச்னை உங்க இரண்டு பேருக்கு நடுவில்? நீயாவது வாயை திறந்து உண்மையை சொல்லுமா!"

"மேடம், அவர் தான் என்னை psycho என்று சொல்லி விட்டாரே, இதுக்கு மேல நான் என்ன சொல்லனும்? நான் தான் பைத்தியமாச்சே!"

"இங்க பாருங்க Mrs. Madhu, நான் ரொம்ப பொறுமையா இருக்கேன். எனக்கு கோவம் வந்தா அவ்வளவு தான். தயவு செய்து பிரச்னை என்ன என்று சொல்லுங்க..."

"மேடம், பிரச்னை என்று எதுவுமே இல்லை. போன வருஷம் இவர் அவரோட பிரெண்டு ஒருத்தர் சொன்னார் என்று ஒரு ஜோசியரை போய் பார்த்தார். அவர் இவரிடம், 'உங்கள் ஜாதகத்தின் படி இன்னும் இரண்டு வருடத்திற்குள் உங்களுக்கு இரண்டாவது கல்யாணம் நடக்கும்' என்று கூறி விட்டார்.

Judge அம்மா வினோத்தை பார்த்து முறைத்தபடியே, "அப்புறம் என்ன ஆச்சு?" என்று கேட்டார்.

"அதை கேட்டதிலிருந்து என்னை ரொம்ப torture பண்ணிட்டார் மேடம். தேவையில்லாம பிரச்னைகளை உருவாக்கி இவர் பண்ற torture ல நான் பொறுமை இழந்து almost பைத்தியமாயிட்டேன். நீங்க டைவர்ஸ் கொடுத்திடுங்க மேடம். என்னையே எனக்கு கன்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு என் நிலைமை மோசமாகி விட்டது. அவர் வேற கல்யாணம் பண்ணிக் கொள்ளட்டும்!" என்று கண்ணீர் பெருகியபடியே சொன்னாள்.

Judge அம்மா பிறகு மதுவிடம் ஒரு மனநல மருத்துவரின் விலாசத்தை கொடுத்து, "நீ இந்த மருத்துவரை கன்சல்ட் பண்ணி விட்டு அவர் என்ன எழுதி கொடுக்கிறாரோ அதை எடுத்து கொண்டு அடுத்த வாரம் என்னை வந்து பார்!" என்றார். வினோத்திடமும் அதே நாளில் வருமாறு கூறினார்.

ஒரு வாரம் கழித்து இருவரும் வந்தார்கள். இருவரையும் judge அம்மா அழைத்தார். மது மிகவும் சோர்ந்து போய் வாடிப் போய் இருந்தாள். அவளுக்கு மருத்துவர் சில தூக்க மாத்திரைகளை உட்கொள்ள பரிந்துரைத்திருக்கிறார். அந்த மருந்துகளின் விளைவாக மயக்க நிலையிலேயே இருந்தாள். Judge அம்மாவிற்கு மருத்துவர் முதலிலேயே மனநோயின் நிலை, என்ன காரணம் போன்ற எல்லா விளக்கத்தையும் call செய்து கூறி விட்டார்.

Judge மேடம் வினோத்திடம், "Mr. Vinodh நீங்க சொன்னது சரி தான். டாக்டர் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லி விட்டார். மதுவிற்கு depression ரொம்ப சீரியஸாக இருக்கு," என்றாள்.

உடனே அவன் ஜோராக, "பார்த்தீங்களா மேடம், நான் சொன்னது உண்மை தானே!" என்றான்.

"ஹலோ Mr... wait, என்ன நீங்க சரியா சொன்னீங்க? டாக்டர் அந்த depression -கான காரணத்தையும் சொல்லிட்டாங்க ஓகே? ரொம்ப குதிக்காதிங்க. உங்களோட அத்து மீறிய சித்ரவதை தான் அதற்கு காரணம்."

"நான் ஒன்னும் பண்ணல மேடம். எப்ப அவ பைத்தியம் என்று கன்ஃபார்ம் ஆயிடுத்தோ, எனக்கு டைவர்ஸ் கொடுத்திடுங்க."

"ஓகே Mr, உங்க இஷ்டபடியே டைவர்ஸ் கொடுக்கிறேன்... but with one condition," என்றார் மேடம்.

"ஓகே மேடம், எனக்கு சம்மதம்" என்று ஜோராக தலை ஆட்டினான் வினோத்.

இவை எதையுமே கண்டும் காணாதது போல மயக்கத்திலேயே இருந்தாள் மது. மேடம் பியூனிடம் வெளியே இருக்கும் ஒரு நபரின் பெயரை குறிப்பிட்டு கூட்டி வரச் சொன்னார். அவரும் வந்தார்.

மேடம் அவரை காண்பித்து, வினோத்திடம், "இவரும் இவர் மனைவியும் இதே டைவர்ஸ் கேஸிற்காக தான் வந்திருக்கிறார்கள்," என்றார்.

வினோத், 'so நான் என்ன பண்ணனும்?' என்று கேட்பது போல் ஸைலன்ட்டாக மறைமுகமாக முகபாவனைலையில் காண்பித்தார்.

"புரியுது, Mr. Vinodh, உங்களுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்று தானே நினைக்கிறீர்கள்?"

"இவருடைய கேஸில் இவர் அப்பாவி. உங்களைப் போல இவருடைய மனைவி இவரை torture செய்திருக்கிறாள். எதற்காக செய்தாள் என்ற உண்மையை கூட இந்த பரிதாபமானவர் கூற வில்லை. உங்கள் மனைவியைப் போலவே இவரும் கடுமையான depression க்கு உள்ளாகி இருக்கிறார்..."

"So? நான் என்ன‌ பண்ணனும் மேடம். எதுக்கு அவர் பிரச்னையை என்கிட்ட சொல்றீங்க? அவருக்கு டைவர்ஸ் கொடுங்க, இல்ல

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கல்யாண ஓடை!
Couple in court

கொடுக்காம போங்க. why should I bother about him madam?" என்று ஜோராக கத்தினான் வினோத்.

"நீங்க ஒன்றும் செய்ய வேண்டாம். நான் சொல்கிற கன்டீஷனுக்கு ஒத்துகிட்டா உங்களுக்கும் இவருக்கும் டைவர்ஸ் கொடுத்து விடுவேன்!" என்று சொன்னார் மேடம் அவர்கள்.

"சொல்லுங்க...," என்றான் வினோத்.

"ஒன்னுமில்லை, its very simple. நீங்களும் இவரோட மனைவியும் ஒரே மாதிரி குணத்தை கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இருவரால் மனநிலை பாதிக்க பட்டவர்கள் இவரும் உங்கள் மனைவியும்...

"So...So..? என்ன சொல்ல வர்றீங்க மேடம்??"

"உங்க இரண்டு குடும்பத்திற்கும் விவாகரத்திற்கு sanction பண்ணிடறேன். அதுக்கப்புறம் நானே, உங்களோட இவர் மனைவிக்கும், இவரோட மதுவிற்கும் திருமணத்தை நடத்தி வைக்க போகிறேன். This is my plan and condition."

"மேடம், This is not fair, நீங்க மதுவிற்கு யாருடனாவது கல்யாணம் பண்ணி வைங்க. அது எனக்கு சம்பந்தமில்லாத விஷயம், but i wont accept to marry any unknown person madam."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நாடும் நாட்டு மக்களும்!
Couple in court

"முன்ன பின்ன தெரியாத பழக்கமில்லாத ஒருத்தரை நான் எந்த நம்பிக்கையில் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்" என்று பேய் பிடித்தவன் போல் மிரண்டு உடம்பெல்லாம் வியர்த்து போக நடுங்கி கொண்டே கேட்டான் வினோத்.

"Exactly Vinodh, you are correct, now I am coming to my point, okay? எந்த வித தொடர்பும் அறிமுகமும் இல்லாத ஒருவரை திருமணம் செய்ய நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை. யாரோ ஒருவரை அறிமுகமில்லாமல் பெற்றோர்கள் விசாரிக்காமல் எப்படி நம்பி செய்து கொள்வது என்று தானே காரணம்?"

"ஆமாம் மேடம், எல்லாம் புரிந்தவர்கள் நீங்கள். பிறகு எதற்காக இப்படி செய்ய நினைத்தீர்கள்?"

"இப்ப தான் நீங்க என் வழிக்கு வந்திருக்கிறீர்கள் வினோத். அப்ப, நீங்க மட்டும் யாரோ ஒரு ஜோசியர் நாலு கட்டத்தை பார்த்து நாலு விதமா சொன்னதை ஏன் நம்பினீங்க? அவருக்கு என்ன தெரியும் உங்க மனைவியை பற்றி சொல்லுங்க? அனாவசியமாக சண்டை போட்டு அந்த பெண் வாழ்க்கையையே சீரழிச்சிட்டீங்க!"

இதையும் படியுங்கள்:
'காதல்'னா என்னங்க?
Couple in court

"மேடம்..மேடம்.. நான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க" என்று அவர்களின் காலை பிடித்து கதறினான் வினோத்.

"ஓகே, ஓகே எழுந்திருப்பா."

"By the way இவர் என்னோட கார் டிரைவர், Mr. Ashok, he is a nice gentleman. இவர் நான் சொன்னதனாலே just நடித்தார். அவ்வளவுதான். பயப்படாதீங்க, உங்க மது உங்களுக்குதான்!" என்று அவன் தோளை தட்டி கொடுத்து சொன்னார் மேடம்.

வினோத் டிரைவரிடமும் கை கூப்பி நன்றி சொன்னான். அழுது கொண்டே மதுவிடம் சென்று அவளை கட்டித் தழுவிக் கொண்டான்.

இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த judge அம்மா அஷோக்கிடம், "அஷோக் வாங்க போகலாம். நம்ம வேலை ஆயாச்சு, இரண்டு மலரும் சேர்ந்தாச்சு. இனி ஆசை தீர உரசிக் கொள்ளட்டும்" என்று புன்னகைத்து கொண்டே கூறி விட்டு வெளியே சென்றார்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com