சிறுகதை: தங்கக் கம்மல்!

கதைப் பொங்கல் 2026
Family
FamilyImg credit: AI Image
Published on
mangayar malar strip
mangayar malar strip

இப்போது தங்கம் விற்கும் விலையில் பழைய நிகழ்வு ஒன்று சுருதியின் மனதில் நிழலாடியது...

“அம்மா.. அவருக்கு நாளைக்கு சம்பளம் வந்ததும், பணத்தை போட்டுவிட சொல்றேம்மா..!” என்று தனது அம்மாவிடம் போனில் பேசிவிட்டு, மெத்தையில் குழந்தையிடம் விளையாடிக்கொண்டிருந்த கணவனிடம் சென்று, “என்னங்க... சொன்னமாதிரியே நாளைக்கே கோயிலுக்குப் போயிடுவோம்ங்க..!” என்றாள் சுருதி.

முருகனும் “சரி நாளைக்கே போவோம்...!” என்றார்.

அப்பா கூறுவதைக் கேட்டு, பக்கத்தில் உட்கார்ந்திருந்த மகளான பிரியா சந்தோஷத்தில் “ஐ..ஜாலி..ஜாலி..!” என்றாள்.

அடுத்தநாள் காலையில், புல்லட்டில் மூவரும் கிளம்பி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குப் போனபோது முன்னாடி உட்கார்ந்து இருந்த பிரியா, “அப்பா எனக்கு பொம்மை வேணும்... அப்புறம் கலர் கண்ணாடியும் வேணும்பா...!” என்றாள்.

மகள் கூறுவதைக் கேட்ட முருகன், “ஓ.கே செல்லம்... அப்பா உனக்கு வாங்கித் தரேன்!”

பின்னாடி உட்கார்ந்திருந்த சுருதி நக்கலாக, “ஏங்க இந்தப் பிள்ளைய கோயிலியே விட்டுட்டு வந்துருவோம். நமக்கும் செலவு மிச்சமாகுமில்லே...!”

“அப்பா என்னைய விட்டுடுவியா... சொல்லு!” என்ற கணீர் குரலோடு மகள் தனது கையை அழுத்திப் பிடிப்பதைப் பார்த்த முருகன், “நீ என்னோட தங்கக் குட்டிம்மா. உன்னையப் போயி விடுவேனா? உங்க அம்மாவைத்தான் விடணும்...!”

அப்பா சொன்னதைக் கேட்ட பிரியா சிரித்தாள்.

கோயிலுக்கு அருகில் முருகன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, மூவரும் கோயிலின் முகப்புத் தூண்களுக்கு இடையேயுள்ள படிக்கட்டுகளில் மெதுவாக இறங்கி நடந்து சென்றார்கள்.

இதையும் படியுங்கள்:
ஹேண்ட் பேக் முதன்முதலில் ஆண்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டதா?
Family

இரண்டு பக்கமும் பொம்மை, வளையல், தின்பண்டம் போன்ற கடைகளாக இருந்தன. இதைப் பார்த்து பிரியா, “அது வேணும், இது வேணும்” என்றதும், “பிரியா குட்டி... சாமி கும்பிட்டு வரும்போது வாங்கிக்கிலாம்!” என்றபடி முருகன் சமாதானப்படுத்தினார்.

முருகன், சாமி கும்பிடுவதற்கு பூ, பழம், தேங்காய் அடங்கிய அர்ச்சனைக் கூடையை 500 ரூபாய் கொடுத்து வாங்கினார். கடைக்காரர் மீதம் 300 ரூபாயைக் கொடுக்கும்போது, முருகனுக்கு ஒரு போன் வந்தது.

மீதி பணத்தை வாங்கி பக்கத்தில் இருந்த மகளிடம் கொடுத்து, போனை எடுத்துப் பேசினார். சுருதி பக்கத்துக் கடையில் நெய் விளக்குகளை வாங்கி, கோயிலுக்குள் சென்று இருக்கன்குடி மாரியம்மனை தரிசனம் செய்து முடித்துவிட்டு, பிராகாரத்திற்கு வெளியே வந்து அமர்ந்தனர்.

அவர்களைச் சுற்றி பல பேர்கள் குடும்பம் குடும்பமாகவும், கணவன், மனைவி அவர்களின் குழந்தைகளோடும், சில பேர் பிரசாதத்தைச் சாப்பிட்டுக்கொண்டும், சில பேர் செல்ஃபி எடுத்துக்கொண்டும் உட்கார்ந்திருந்தனர்.

யாசகர்கள் (பிச்சைக்காரர்கள்) படியோரத்தில் உட்கார்ந்து, “அம்மா தாயே..!” என்று சொல்வதும், இதைப் பார்த்து ஒரு சிலர் யாசகர் (பிச்சைக்காரர்) களுக்கு சில்லரைக் காசுகளைப் போட்டு செல்வதும் என்றிருந்தார்கள். இதனைக் கூர்ந்துக் கவனித்துக்கொண்டிருந்த பிரியா, என்ன நினைத்தாளோ..? திடீரென்று ஃபேண்ட் பாக்கெட்டில் இருந்த அப்பா கொடுத்த மூன்று 100 ரூபாய் நோட்டுகளை எடுத்து, மூன்று யாசகரின் தட்டில் போட்டுவிட்டாள்.

இதையும் படியுங்கள்:
நரை முடிக்கு குட்பை! நரைத்த முடியைக் கூட கருப்பாக மாற்றும் 'மிஸ்டரி' உணவுகள்!
Family

இதைப் பார்த்த சுருதி, மகளை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடக்க, "பின்னாடியே என்ன ஆச்சு?" என்று தெரியாமல் முருகனும் சென்றார்.

சிறிது தூரம் சென்றபிறகு, “ஏண்டி பிச்சைக்காரங்களுக்கு 300 ரூபாய் போடுறது...! மனசாட்சி இல்லையாடி?” என்று அம்மா திட்டுவதைக் கேட்டு, பிரியா ஒன்றும் பேசாமல் திருதிருவென்று முழித்து நின்றாள்.

சுருதி, முருகனிடம் நடந்த விஷயத்தைக் கூறினாள்.

“சரி விடு... சின்ன புள்ளதானே!” என்றபடி திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்த தம் மகளை கன்னத்தில் முத்தமிட்டு தூக்கிக்கொண்டு நடந்தார் முருகன். அதோடு மகள் கேட்ட விளையாட்டுச் சாமான்களையும் வாங்கிக் கொடுத்தார்.

வளையல் கடையில், சுருதி வளையல் எடுத்துக் கொண்டிருந்தபோது, கடைக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த யாசகப் பெண்மணி ஒருவர் தனது பிள்ளைக்கு ஜிலேபியை ஊட்டுவதைப் பார்த்தாள் பிரியா. அப்பாவின் கையைப் பிடித்து, அவர்களைக் கைக் காட்டி, “அப்பா எனக்கும் அது வாங்கித்தா..!” என்றாள்.

முருகன் மகளுக்கு ஜிலேபியை வாங்கிக் கொடுத்தார். பிரியாவோ சந்தோஷமாக ருசித்துச் சாப்பிட்டாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பக்கா பிளான்!
Family

இதைப் பார்த்த சுருதி, “கண்டவங்க திங்கிறது எல்லாம் கேக்குது பாரு. இதெல்லாம் ஒரு புள்ளையா...?” என்று மனதிற்குள் நினைத்தபடி, “சரிங்க வளையல் எடுத்தாச்சு... கிளம்புவோமா?” என்றாள்.

“சரி, கிளம்புவோம். என் தங்கக் குட்டி பிரியாவுக்கும் வளையல் எடுத்துட்டியா...?”

சுருதி சலிப்போடும் நக்கலோடும், “அதெல்லாம் எடுத்தாச்சு அந்த வாயாடிக்கு..!” என்றபடி தமது கைப்பையில் இருந்த செல்போனை எடுத்துப் பார்த்தாள், அவருடைய அம்மா ஐந்து தடவை போன் செய்து இருப்பது தெரிந்தது.

உடனே அம்மாவிற்கு போன் செய்து பேசினாள், “ஏங்க.. இந்த மாசம் செலவுக்கு அம்மா காசு கேட்டாங்க!”

“சரிம்மா... இத முதல்லயே சொல்லமாட்டியா? போன தடவை மாதிரியே பத்து ரூபாய் அனுப்பினா போதுமா... இல்லே கூட அனுப்புவா..?” – முருகன்.

“கிண்டல் வேணாங்க...பத்தாயிரமே போதும்!” – சுருதி.

“சரி, அத்தை நம்பருக்கே அனுப்பிடறேன்..!” என்றபடி முருகன் 10,000 ரூபாயை அத்தை போனுக்கு அனுப்பி, சுருதி, “அத்தைக்கு அனுப்பிவிட்டேன்.”

இதையும் படியுங்கள்:
'காதல்'னா என்னங்க?
Family

கோயிலை விட்டு வெளியே வந்து முருகன் புல்லட் வண்டியில் தனக்கு முன்னால் மகளைத் தூக்கி வண்டியில் உட்கார வைத்தவுடன், சட்டையில் மாட்டியிருந்த கலர் கண்ணாடியைப் பிரியா எடுத்து போட்டுக்கொண்டதைப் பார்த்த முருகன் அவளின் இந்தச் செய்கையை ரசித்தார்.

புல்லட்டில் சென்றுகொண்டிருந்தபோது, மகளின் இடது பக்க காதிலுள்ள கம்மல் இல்லாததைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த முருகன் வண்டியை சாலையோரத்தில் இருந்த, புளிய மரத்தின் நிழலில் ஓரமாக நிறுத்தினார்.

கம்மல் காணாமல் போனதைக் கண்டு கோபமடைந்த சுருதி, “எங்கடி போட்ட..! கம்மல்ல.. கீழே விழுகிறது கூடவாத் தெரியாம மெத்தனமா இருக்குறது! என்று பிரியாவை பார்த்துத் திட்டினாள்.

கண்ணைக் கசக்கியபடி ஒன்றும் தெரியாததுபோல் பிரியா நின்றாள்.

“பிரியா குட்டி.. இங்க பாரு, அழாதம்மா.. சரி..சரி” என்றபடி முருகன் மகளின் கண்ணீரைத் துடைத்து விடுவதைப் பார்த்து,

கோபமான சுருதி, “இங்க பாருங்க நீங்க கொடுக்கிற செல்லத்தாலதான் இப்படி எனக்கென்னனு இருக்கா..? இதெல்லாம் சரியில்லங்க.. இது எங்க போய் முடியப்போகுதோ..?” என்றாள்.

முருகன் பொறுமையாக மகளிடம், “கம்மல் எங்கம்மா?” என்று கேட்டார். பிரியாவோ அழுதபடி, “அப்பா எப்படி காணாமப் போச்சுன்னு தெரியலப்பா..!” என்றபடி சொன்னதையே சொன்னாள்.

இதையும் படியுங்கள்:
கூன் முதுகு முதல் மார்பக வலி வரை... பெண் குழந்தைகளுக்கு தயக்கத்தைப் போக்க சரியான உள்ளாடை ஏன் முக்கியம்?
Family

முருகன் செல்போனில் மணியைப் பார்த்தார். மணி 12:45 ஆகியிருந்தது. சம்பளப் பணம் 1,70,040 கிரெடிட் ஆனதாக குறுஞ்செய்தி வந்திருந்தது.

முருகனோ, “சரி, ஓ.கே... என்ன பண்றது? வாங்க போவோம்...”

பைக்கில் போகும்போது கையில் இருந்த கண்ணாடியை மீண்டும் பிரியா போட்டுக்கொண்டதைப் பார்த்த முருகன் சிரித்தபடி வண்டியை ஓட்டினார்.

மகளின் தங்கக் கம்மல் தொலைந்த விரக்தியில் சுருதி அமைதியாக பைக்கில் வந்தார்.

சாத்தூரை அடைந்ததும், முருகன் லாலா கடைக்குச் சென்று அல்வா, பூந்தி, மிக்சர் என்று மகளுக்குப் பிடித்த தின்பண்டங்களை வாங்கிக்கொண்டும், அதோடு பக்கத்தில் இருந்த கண்ணன் ஹோட்டலில் மூன்று நெய் சோறு பொட்டலத்தையும், தொட்டுக்க பன்னீர் பட்டர் மசாலாவையும் வாங்கினார்.

வீட்டிற்கு வந்ததும், மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டு முடித்துவிட்டு சோபாவில் உட்கார்ந்திருந்த முருகன், சுருதியையும் பிரியாவையும் கண்ணை மூடிக்கொள்ளுமாறு சொன்னார்.

என்னவென்று தெரியாமல் குழப்பத்தோடு சுருதியும், பிரியாவும் கண்ணை மூடிக்கொண்டனர்.

முருகன் தமது சட்டை பையில் இருந்த தங்கக் கம்மலை வெளியே எடுத்து, கையில் வைத்தபடி நீட்டினார்.

இதையும் படியுங்கள்:
பூஜை அறையில் சாமி படங்கள் எதைப் பார்த்தபடி இருக்க வேண்டும்? பலரும் செய்யும் பெரிய தவறு!
Family

முருகன் அவர்களின் கண்களை திறக்கச் சொன்னவுடன், கண்களைத் திறந்து பார்த்த சுருதிக்கும், பிரியாவிற்கும் ஆச்சரியம் தாங்கவில்லை..!

“பிரியா.. ஜிலேபி சாப்பிட்ற ஆர்வத்துல கம்மல் கீழ விழுந்ததைக் கண்டுக்கல.. நான்தான் கீழ விழுந்த கம்மலை எடுத்து பாக்கெட்டல பத்திரமா வச்சுக்கிட்டேன்..!” என்ற பிளாஷ்பேக்கை முருகன் சொல்லியபடி மகளின் காதில் அந்தத் தங்கக் கம்மலை போட்டுவிட்டார்.

“அப்பாடா நல்லபடியா கம்மலு நம்மகிட்டயே கிடைச்சிருச்சே..!” என்றபடி நிம்மதி பெருமூச்சு விட்டபடியே பிரியாவைக் கொஞ்சினாள் சுருதி.

மகளின் மழலைத்தனமான தானமும், தந்தையின் நிதானமான அன்பும் சேர்ந்து அந்தத் தங்கத்தை விட அதிக மதிப்பைப் பெற்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com