குட்டி ஸ்டோரி: கண்ணாளனே!

marriage in 2073 tamil short story
marriage in 2073!credit AI Image
Updated on
MM strip
MM strip

ஆண்டு 2073.

தொடுதிரையில் மணமகன்களின் புகைப்படங்களையும் விவரங்களையும் ஆராய்ந்து கொண்டிருந்த ரிச்சா, ஒரு கணம் திரும்பி அருகில் அமர்ந்திருந்த தன் அம்மாவை அழைத்தாள். லூசி, ரிச்சாவின் அப்பாவிற்கு நான்காவது மனைவி; லூசிக்கு ரிச்சாவின் அப்பா ஐந்தாவது கணவர்.

"என்ன ரிச்சா?"

"இந்த பையனைப் பாருங்க..." தொடுதிரை மேசையை அம்மா லூசியின் பக்கம் திருப்பினாள் ரிச்சா. "இவன் பேரு ரூம். வயது இருபத்தியெட்டு. இந்தப் பையனுக்கு நாலு கேர்ள் பிரண்ட்ஸ் இருக்காங்களாம்...

இரண்டு பொண்ணுங்களை மேரேஜ் பண்ணி டைவர்ஸ் செய்திருக்கான்..." என்று ரிச்சா சொல்லச் சொல்லத் தலையாட்டினாள் லூசி.

"தினம் இரண்டு லிட்டர் பீர் குடிப்பானாம்... பத்து பாக்கெட் சிகரெட் பிடிப்பானாம்..."

"அப்புறம்?"

"ஒரு வருஷம் 'லைஃப் கேரண்டி' கொடுக்கிறான். அப்பா, அம்மாவுக்குப் பத்து பைசா செலவு பண்ண மாட்டானாம்... சேலரி முழுசும் அவனுக்காக மட்டுமே செலவு பண்ணுவானாம்!"

"ஓகே டியர்! ரொம்ப நல்ல பையனா தெரியறான். நீ முடிவு பண்ணிட்டு சொல்லு, நான் டாட்கிட்ட பேசிக்கிறேன். அப்புறம்

இதையும் படியுங்கள்:
வல்லாரையும் குப்புசாமியும்...
marriage in 2073 tamil short story

மறக்காம உன்னோட முன்னாள் ஹஸ்பெண்ட்ஸ் மூணு பேருக்கும், நாலு பாய்பிரண்ட்ஸ்க்கும் மெசேஜ் பண்ணிடு!" லூசி சொல்ல, ரிச்சா பலமாகத் தலையாட்டினாள்.

logo
Kalki Online
kalkionline.com