பணமா? பாசமா?

பொதுவாக ‘பணமா, பாசமா’ என போட்டி வைத்தால் பாழாய்ப்போன பணத்திடம் பாசமானது தோற்றுவிடுகிறது என்பதே நிஜம்.
man thinking about money vs happiness
money vs happinessAI Image
Updated on
Mangayar malar strip
Mangayar malar strip

மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், முன்னேறாமல் போவதற்கும் பலவித செயல்பாடுகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. முன்னேற்றம் அடைய பொதுவாக நல்ல ஒழுக்கம், மனிதநேயம் கடைபிடித்தல், வஞ்சக குணம் கொள்ளாமல் இருத்தல், பொறாமை குணம் கடைபிடிக்காமல் இருத்தல், பொய் தவிா்த்து உண்மையை கடைபிடித்தல், மனசாட்சிக்கு பயப்படுதல் இப்படி பல்வேறு அம்சங்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் மேலாக மனிதனை உயர்த்தி விடுவதும் தாழ்த்தி விடுவதுமான பொிய சக்தியே பணம் தான். அதுவே அனைத்திற்கும் பிரதானமாகி மனிதனை பல வழிகளில் ஆட்டிப்படைத்து விடுகிறது.

பொதுவாக ‘பணமா, பாசமா’ என போட்டி வைத்தால் பாழாய்ப்போன பணத்திடம் பாசமானது தோற்றுவிடுகிறது என்பதே நிஜம். பணத்தை சம்பாதித்து, சம்பாதித்து மேலும், மேலும் சோ்த்துக்கொண்டே இருப்பவர்கள் பணக்காரர்கள் ஆகிவிடுகிறாா்கள். பாழாய்ப்போன பாசம், பாசம் என அலைபவர்கள் எல்லா விதத்திலும் ஏமாளியாகி விடுகிறாா்கள். இதுதான் இந்த உலகம் நமக்கு கற்றுக்கொடுத்த பொிய பாடமாகும்.

பணம் இருந்தால் நட்பு மற்றும் உறவு எனும் பந்தங்கள், பாசம் எனும் நயவஞ்சக போா்வையை போா்த்திக்கொண்டு நம்மையே சுற்றிச்சுற்றி வருகிறாா்கள். நாம் தவறுதலாக நான்கையும் மூன்றையும் கூட்டினால் ஏழு வராது எட்டுதான் வரும் என்று சொன்னால்கூட ஆமாம், ஆமாம் நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என ஜால்ரா போடுவாா்கள். இதுவும் இன்றைய உலக நடப்புதான். பணம் இல்லாத நிலையில் அன்பு செலுத்தும் நபருக்கு மதிப்பே இல்லை.

'அன்புக்கு ஈடே இல்லை. அன்பே பிரதானம்' என நினைக்கும் ஏமாளியைக் கண்டால் இந்த உலகமே எள்ளி நகையாடுவதோடு 'பாசமாவது, பந்தமாவது, பணம் இருக்கா, இருந்தால் வா, இல்லாவிடில் இடத்தை காலி செய்' என்கிற அளவுக்கு நமது நிலை கவலைக்கிடமாக போய்விடுகிறது.

பணத்தால் எதையும் வென்று விடலாம். ஆனால் பாசத்தை விலைக்கு வாங்கமுடியாது. இதை மனிதன் புாிந்து கொள்ளவேண்டும்.

பணமானது பரமபத விளையாட்டு போல, அது எந்த நேரத்திலும் நம்மை அதல பாதாளத்திற்கு தள்ளிவிடும் என்பதை உணரவேண்டும். நாம் இருக்கும் வரை பணத்தை சம்பாதித்தாலும் நமக்கென நல்ல உறவு மற்றும் நட்புகளை நமது அன்பால் வசப்படுத்தி வைத்திருக்க வேண்டும், அதோடு நமது தேவைக்கேற்ப சேமிப்பும் அவசியமே.

இதையும் படியுங்கள்:
பணமா? குணமா? உறவா? நலமா?
man thinking about money vs happiness

காரணம் ‘எதைக்கொண்டு வந்தோம், அதைக்கொண்டுபோக’ என்ற கருத்திற்கு ஏற்ப தேவையான சேமிப்புகளோடு நல்ல பந்த, பாசங்களோடு வாழ்வதே நல்லதாகும். “பணமா? பாசமா?" என்றால், 'பாசமே', 'பணமே' என மாற்றி எழுதுங்கள். அதுவே சிறந்தது!

logo
Kalki Online
kalkionline.com