வைரல் ஆன மும்பை மாம்ஸ் வட பாவ் - பெண்களுக்கு ஒரு நம்பிக்கை கீற்று!

mother of Ishika Tanmehar's
mother of Ishika Tanmehar's
Published on
mangayar malar strip

மும்பை பெரு நகரம் ஒரு வணிக நகரமாகும். பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பல பேர் இங்கே… தொழிலாளர்கள் பணியாளர்கள் மற்றும் பணக்காரர்களுக்கு ஓடிக் கொண்டிருப்பது இந்த நகரத்தின் சிறப்பு.

மக்கள் தொகை அதிகம் உள்ள இங்கு பெரும் பணக்காரர்கள் மட்டும் வசிப்பதில்லை. நடுத்தர மற்றும் ஏழை மக்களும் இங்கே பல்லாயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை வளமாக்க பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கே, நடைபாதை சிற்றுண்டி கடைகள் அதிகம். குறிப்பாக பாவ் பஜ்ஜி, வட பாவ், பானி பூரி, கச்சோரி மற்றும் சாட் வகைகள் அதிகம். இங்குதான் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள்.

இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்துபவர்கள் முன்னேறுகிறார்கள் வாழ்க்கையில். அப்படி ஒரு ஸ்டால் தான் மாம்ஸ் வடா பாவ்.

இந்த கடை ஆரம்பித்து பதினோரு ஆண்டுகள் ஆகின்றன. இந்த கடையை ஆரம்பித்தவர் ஒரு பெண்மணி. இவர் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றவர்.

அவர் பெரிய அளவில் கல்வி பயிலவில்லை என்றாலும், இவருக்கு ஐந்து மொழிகள் பேச தெரியும்.

அவரின் வடா பாவ் கடை பி.எம்.சி மருத்துவமனைக்கு வெளியே அமைந்துள்ளது.

ஆரம்ப கால கட்டத்தில் அவரது கடை சேதப்படுத்தப்பட்டும், கடையில் உள்ள பொருட்கள் களவாடப்படும் பல சோதனைகள் இருந்தன. அவற்றை எல்லாம் அவர் கடந்து வெற்றிகரமாக கடையை நடத்தி வருகிறார்.

இவர் அனைவரிடமும் மென்மையாகவும், அன்பாகவும் பழகுவதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. அவருக்கு மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, மற்றும் சிறிய அளவில் ஆங்கிலம் தெரிந்து வைத்திருக்கிறார்.

இவர் புத்திக்கூர்மை உள்ளவராகவும், முகத்தில் எப்பொழுதும் புன்னகை ததும்பவராகவும் இருக்கிறார்.

இவரின் கடையைப் பற்றி அவரின் மகள் இஷிகா தன்மெஹர் தன்னுடைய லிங்க்ட்இன் பக்கத்தில் தனது தாயாரை மிகவும் பாராட்டி வணங்கி சில பதிவுகளை செய்துள்ளார். அந்த பதிவுகள் வலைத்தளத்தில் வைரலாகி உள்ளன.

இதையும் படியுங்கள்:
அனுபவ சமையல்காரரின் ருசியான சமையல் டிப்ஸ்!
mother of Ishika Tanmehar's

எனது அம்மா பி.எம்.சி. மருத்துவமனைக்கு வெளியே வடா பாவ் கடை வைத்துள்ளதாகவும், அவரது தந்தை அந்த மருத்துவமனையில் பணியாளராக வேலை செய்வதாலும், போட்டி பொறாமையால் பல்வேறு இன்னல்கள் தனது தாயார் அனுபவித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இன்னல்கள் பல இருந்தாலும் இன்முகத்தோடு தன் தாயார் அனைவருக்கும் வடா பாவ் தரமாக ருசியாக தருவதில் தான் பெருமை அடைவதாக கூறி உள்ளார்.

இவருடைய பதிவைப் பார்த்தவர்கள். 'பெருமைக்குரிய பெண்மணியின் மகள்' எனவும், சிறந்த பெண் தொழில் முனைவோர் தாயின் மகள் என்றும், லட்சிய மற்றும் சக்தி வாய்ந்த பெண்மணியின் மகள் என்றும் பாராட்டி உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சிவப்பரிசி இனிப்பு கொழுக்கட்டையும் காரப் புட்டும்!
mother of Ishika Tanmehar's

இஷிகா தன்மெஹரின் லிங்க்ட் இன் பதிவு தனது தாயாரை பாராட்டுவது மட்டுமே நோக்கமல்ல என்றும், பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், தொழில் முனைவோருக்கான நம்பிக்கையை ஊட்டுவதாக அமைவதற்காகவே என்றும் ஆணித்தரமாக பதிவிட்டுள்ளார்.

சிங்கப் பெண் இவள் தானோ சிறக்கட்டுமே அவர் வாழ்வு...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com