
முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் உடம்பில் ரத்தம் குறைவாக உள்ளவர்கள், கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள ரத்தம் விருத்தியாகும்.
முருங்கை இலை துளியும், வேப்ப இலை துளியும் சேர்த்து அரைத்து சாப்பிட ஒற்றைத் தலைவலி நீங்கும்.
முருங்கைக் கீரை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வர சுகப்பிரசவம் உண்டாகும்.
முருங்கைக் கீரையை பூண்டுடன் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள பால் சுரப்பு அதிகரிக்கும். உடல்பலமும் ஏற்படும்.
முருங்கை இலையை உருவி விட்டு அதன் ஈர்க்கை மட்டும் எடுத்து மிளகு, சீரகம் சேர்த்து இடித்து ரசம் வைத்து சாப்பிட முதுகுவலி, உடல்வலி குணமாகும்.
வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கைக் கீரை, முருங்கைக் காயை சமையலில் பயன்படுத்த மாலைக்கண் நோய் குணமாகும்.
ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகமாக உற்பத்தி செய்ய முருங்கை கீரை உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தைக் குறைக்கிறது.
பச்சைப் பயிறுடன் முருங்கைப்பூ சேர்த்து கூட்டு செய்து சாப்பிட கண் எரிச்சல் குணமாகும்.
முருங்கைக் கீரையை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட குடலில் ஏற்பட்ட புண்கள் ஆறும்.
பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்வை சரிசெய்கிறது.
வயிற்றுப் பொருமல், உப்புசம் போன்றவற்றை குணமாக்கும்.
ஆண்மைக் குறைவை சரிசெய்கிறது.
பெண்களின் மாதாந்திர சுழற்சியை சரிசெய்து வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.