மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி 2025 வந்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. 1996 உலகக் கோப்பை கிரிக்கெட்குப் பிறகு பாகிஸ்தான் முதல் முறையாக ஐ.சி.சி நிகழ்வை நடத்துவதால் இந்தப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில், மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1998-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. 2017-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு காரணங்களுக்கான நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த போட்டி தற்போது நடத்தப்பட உள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். அதனால் ஒவ்வொரு அணியினரும் நீயா-நானா? என்று வரிந்து கட்டி நிற்பார்கள்.
இன்று (புதன்கிழமை) கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க மோதலில் ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகள் இதுவரை 118 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 53-ல் நியூசிலாந்தும், 61-ல் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 3ல் முடிவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
அட்டவணை, அணிகள், டெலிகாஸ்ட், லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் பல...
குழுக்கள்:
குரூப் ஏ - பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம்
குரூப் பி - தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து
சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை:
பிப்ரவரி 19-ம்தேதி : பாகிஸ்தான் vs நியூசிலாந்து - கராச்சி, பாகிஸ்தான்
பிப்ரவரி 20-ம்தேதி : பங்களாதேஷ் vs இந்தியா - துபாய்
பிப்ரவரி 21-ம்தேதி : ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா - கராச்சி, பாகிஸ்தான்
பிப்ரவரி 22-ம்தேதி : ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து - லாகூர், பாகிஸ்தான்
பிப்ரவரி 23-ம்தேதி : பாகிஸ்தான் vs இந்தியா - துபாய்
பிப்ரவரி 24-ம்தேதி : பங்களாதேஷ் vs நியூசிலாந்து - ராவல்பிண்டி, பாகிஸ்தான்
பிப்ரவரி 25-ம்தேதி : ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - ராவல்பிண்டி, பாகிஸ்தான்
பிப்ரவரி 26-ம்தேதி : ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து - லாகூர், பாகிஸ்தான்
பிப்ரவரி 27-ம்தேதி : பாகிஸ்தான் vs பங்களாதேஷ் - ராவல்பிண்டி, பாகிஸ்தான்
பிப்ரவரி 28-ம்தேதி : ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா - லாகூர், பாகிஸ்தான்
மார்ச் 1-ம்தேதி : தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து - கராச்சி, பாகிஸ்தான்
மார்ச் 2-ம்தேதி : நியூசிலாந்து vs இந்தியா - துபாய்
மார்ச் 4-ம்தேதி : முதல் அரையிறுதி போட்டி - துபாய்
மார்ச் 5-ம்தேதி : 2-வது அரையிறுதி போட்டி - லாகூர், பாகிஸ்தான்
மார்ச் 9-ம்தேதி : இறுதிப் போட்டி - லாகூர் (இந்தியா தகுதி பெறாவிட்டால் துபாயில் விளையாடும்)
மார்ச் 10-ம்தேதி : ரிசர்வ் நாள்
மற்ற விவரங்கள்:
சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.