தொடர்கதை: பச்சைக்கலர் துண்டு... அத்தியாயம் 2

27 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட கிராமத்து ரகசியமும் பச்சைத் துண்டு மர்மமும் நிறைந்த சுவாரஸ்யமான தொடர்கதை
Pachaicolour Thundu - Tamil Serial Story
Pachaicolour Thundu - Tamil Serial StoryImage credit: Chatgpt
நாமக்கல் எம்.வேலு

கார்ப்பொரேஷன் வங்கியில் எழுத்தராக சேர்ந்து உதவிப் பொது மேலாளராக ஓய்வு பெற்றேன். 1988ல் நாமக்கல் கிளையில் இருக்கும்போது எழுத ஆரம்பித்து இதுவரை 200 கதைகளுக்கும் மேலாக எழுதியுள்ளேன். தினமலர்-வாரமலர், கதைமலர், தீபாவளிமலர், குமுதம், விகடன், குங்குமம், சாவி, மற்றும் கல்கி, மங்கையர்மலர், கோகுலம், சஹானா இணைய இதழ்களிலும் எழுதி உள்ளேன். தினமலர்-வாரமலரிலும் மங்கையர்மலர் - ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டியிலும், சஹானா இணைய இதழிலும், அன்னை குருபாக்கியம் நினைவு சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளேன்.

Updated on: 
MM strip
MM strip

தொடர்கதை: பச்சைக்கலர் துண்டு... - அத்தியாயம் 2

"ஐயா... பண்ணைக்காரர் ஊர்லையே இல்லையாமுங்க... கிழக்கேப் போற பஸ் எதுலயோ ஏறிப் போனதா, ஒரு அம்மா சொல்லுச்சுங்க..." என்றான் சேதி சொல்லப்போய் திரும்பி வந்த வெட்டியான்.

"என்னப்பா இது... மூணு பட்டயதாரும் இருந்தாகணுமே பஞ்சாயத்துல..."

புகார் நடந்துகொண்டிருக்கும்போதே அவருக்கு செய்தி போய்விட, யாருக்கும் தெரியாமல் உடனே அவர் வெளியூர் கிளம்பிவிட்டது தனிக்கதை.     

"தன் பையன் மேலேயே புகார்னா அவரும் எப்படிதான் உட்கார்ந்து விசாரிப்பார்... நெஞ்சு குத்துமில்லையா... அதான் ஓடிட்டார்போல..." என்றான் ஒருவன்.

"ஆமாமா... ஒரு கதை சொல்றேன் கேளுங்க... அந்தக் காலத்துல மனுநீதிச் சோழன்... மனுநீதிச் சோழன்னு ஒரு ராஜா இருந்தார்..." என்று ஆரம்பித்தார் ஒரு ஆள்.

"ஒருத்தரா... ரெண்டு பேரா..." இன்னொருவன் கிண்டலடித்தான்.

"அட குசும்பு பேசாதீங்கப்பா... கதை சொன்னா கதையை மட்டும் கேளுங்க... இப்போ என்ன... நான் மேலே சொல்லட்டுமா வேண்டாமா...?"

"அட இருங்கப்பா... அவருதான் சுவாரசியமா சொல்றாரில்லே... ஏன் குறுக்கால ஓட்டறீங்க...? நீ சொல்லுண்ணே..."

Loading content, please wait...