தொடர்கதை: பச்சைக்கலர் துண்டு... அத்தியாயம் 3

27 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட கிராமத்து ரகசியமும் பச்சைத் துண்டு மர்மமும் நிறைந்த சுவாரஸ்யமான தொடர்கதை
Pachaicolour Thundu - Tamil Serial Story
Pachaicolour Thundu - Tamil Serial StoryImage credit: Chatgpt
நாமக்கல் எம்.வேலு

கார்ப்பொரேஷன் வங்கியில் எழுத்தராக சேர்ந்து உதவிப் பொது மேலாளராக ஓய்வு பெற்றேன். 1988ல் நாமக்கல் கிளையில் இருக்கும்போது எழுத ஆரம்பித்து இதுவரை 200 கதைகளுக்கும் மேலாக எழுதியுள்ளேன். தினமலர்-வாரமலர், கதைமலர், தீபாவளிமலர், குமுதம், விகடன், குங்குமம், சாவி, மற்றும் கல்கி, மங்கையர்மலர், கோகுலம், சஹானா இணைய இதழ்களிலும் எழுதி உள்ளேன். தினமலர்-வாரமலரிலும் மங்கையர்மலர் - ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டியிலும், சஹானா இணைய இதழிலும், அன்னை குருபாக்கியம் நினைவு சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளேன்.

Updated on: 
MM strip
MM strip

தொடர்கதை: பச்சைக்கலர் துண்டு... - அத்தியாயம் 3

கூட்டமே ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்க, அவள் வெளியே எடுத்தது ஒரு பச்சைக் கலர் துண்டை. அதைப்பார்த்துதான் எல்லோரும் வாயைப் பிளந்தார்கள்.

"இது, அந்த இடத்துல இருந்து எடுத்ததுங்க இது..." என்றாள்.

"ஆமா... ஊர்லையே சின்னக்கருப்பன் மட்டும்தான் பச்சைத் துண்டு போட்டிருப்பான்..." என்று ஒப்புக்கொண்ட பெரியப்பணி சின்னக்கருப்பன் பக்கம் திரும்பி, "ஏன்பா... இப்போ சொல்லு... இது உன் துண்டுதானே..." என்று கேட்டார்.

கொஞ்சம் திகைத்துப்போன சின்னக்கருப்பன், "ஆ... ஆமாங்க... ஆனா இது எப்படி... அவங்க கைக்கு போச்சுன்னு தெரியலையே..." என்று தடுமாறினான்.

பத்து நிமிடங்கள் கூட்டத்தில் சலசலப்பு.

"சரிப்பா சத்தம் போடாதீங்க..." என்று சலசலப்பு வந்தப்பக்கம் பாரதத் சத்தம் போட்டவர், கூட்டத்தைப் பார்த்து, "சரி... சரோஜா கொடுத்த புகார் ஊர்ஜிதமாகிடுச்சு..." என்றுவிட்டு, சின்னக்கருப்பன் பக்கம் திரும்பி, "இந்தாப்பா சின்னக்கருப்பா... நீ இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாகனும்... யாரப்பா அங்கே... அம்மன் கழுத்துல கிடக்கற மஞ்சச்சரடை அவிழ்த்துக்கிட்டு வா..." என்றுவிட்டு எழுந்தார்.

"ஏன்பா... ரொம்ப நாளா என் மண்டையைக் குடைஞ்சிட்டிருக்கற அந்த கேள்விக்கு இப்போவாவது பதில் சொல்லேன்..."

"எந்தக் கேள்வி..."

Loading content, please wait...