இரவுதோறும் பவானி அம்மனைக் காண கருவறைக்குள் வரும் 5 அடி நீள பாம்பு!

நோய் தீர்க்கும் அருள்மிகு பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் வரலாறும், ராஜ மாதங்கி வழிபாட்டு முறைகளும்.
 பவானி அம்மன் | Bhavani Amman and snake
பவானி அம்மன் | Bhavani Amman and snakeAI Image
Updated on
MM strip
MM strip

நோய் தீர்க்கும் தெய்வமாகவும், பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் சக்தி தலமாகவும் விளங்கும் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோவில் ஆன்மிக அன்பர்களை எப்போதுமே ஈர்க்கும் அற்புதத் தலமாகும். கருவறைக்குள் தினமும் வந்து செல்லும் நாகம், சூரிய ஒளி படும் அதிசயத் தருணம், வேப்பிலை நேர்த்திக்கடன் மற்றும் மீனவ மக்களின் ஆன்மிகப் பக்தி என இந்த ஆலயம் பல ரகசியங்களையும் வரலாற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. இத்தலத்தின் வியக்க வைக்கும் ஆன்மிக வரலாற்றையும், வழிபாட்டு முறைகளையும் முழுமையாக அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள ஸ்ரீ பவானி அம்மன் (பெரியபாளையத்தம்மன்) கோவில், சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு அம்மன் சுயம்புவாகத் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவில் நோய் தீர்க்கும் சக்தி, ஆடி மாதத் திருவிழா மற்றும் வேப்பிலை நேர்த்திக்கடன் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.

ராஜ மாதங்கி:

கோவிலுக்குள் நுழைந்தவுடன் விநாயகரை தரிசித்து விட்டு, தனி சன்னதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ சர்வ சந்தோஷ சக்தி மாதங்கி அம்மன் எனப்படும் ராஜ மாதங்கி அம்மனை வணங்கிவிட்டு தான் கருவறையில் வீற்றிருக்கும் பவானி அம்மனை வணங்க வேண்டும் என்பது இங்கு ஐதீகம். குபேரனின் கடைக்கண் பார்வையை பெற்றுத் தருவதால் இவளுக்கு ராஜமாதங்கி என்ற சிறப்பு பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கரத்தில் வீணையும், மறுகரத்தில் கிளியுடனும் காட்சி தரும் இவளை வணங்கிட கலைகளில் வெற்றியையும், வாக்கு வன்மையும் கிடைக்கும். வெள்ளிக்கிழமை தோறும் இவளை வணங்கி வர கலைகளில் மேன்மையும், ராஜபோக வாழ்க்கையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீலலிதாம்பிகையின் கையில் இருக்கும் கரும்பு வில்லே ராஜ மாதங்கியாக உருவெடுத்தது என்று சொல்லப்படுகிறது. இவளை வணங்கிட கல்வி, கலை, ஞானம், வீரம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கலாம்.

வைஷ்ணவி தேவியாக காட்சி தரும் அம்பிகை:

இத்தலத்து அம்மன் ஸ்ரீ கிருஷ்ணரின் சகோதரியாக (யோகமாயையாக) கருதப்பட்டு, கம்சனிடம் இருந்து தப்பி இங்கு அமர்ந்ததாக ஐதீகம் நிலவுகிறது.

கோவில் கருவறை முகப்பில் சங்கு, சக்கரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் தங்கையாக இங்கு வீற்றிருப்பதால் சங்கு சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கணவன் கொடுமைகளிலிருந்து நிவாரணம் கிடைக்க பழையனூர் நீலி அம்மன் வழிபாடு!
 பவானி அம்மன் | Bhavani Amman and snake

மேலும் மூலவரான பவானி அம்மன் வலது கையில் கத்தி, வலது மேல் கையில் சக்கரம், இடது கையில் அமுத கலசத்தையும், இடது மேல் கையில் சங்கும் கொண்டு காட்சி தருகிறாள். சங்கு சக்கரம் கொண்ட வைஷ்ணவியாக வீற்றிருக்கும் இவளுக்கு அருகே தலை மட்டுமே கொண்ட சுயம்புவாக ரேணுகாதேவி அம்சமாக மற்றொரு அன்னை காட்சி தருகிறாள். இவளே தொன்மையான தேவி என்று கூறுகிறார்கள். பவானியின் அருகில் கிருஷ்ணர், நாகதேவர் திருவுருவங்களும் உள்ளன.

சுயம்புவாக காட்சி தரும் இந்த அம்மன், அபிஷேக நேரம் தவிர மற்ற நேரங்களில் சுயம்பு உருவை அம்மனுடைய தலைக் கவசத்தால் மூடி விடுகிறார்கள்.

கோவிலுக்கு அருகிலேயே மிகப்பெரிய புற்றுக் கோவில் உள்ளது. இந்த புற்றுக் கோவிலில் இருந்து தினமும் இரவு பவானி அம்மன் கருவறைக்குள் சுமார் 5 அடி நீளம் உள்ள பாம்பு வந்து செல்வதாகவும், இதனால் காலை பூஜைக்காக கருவறை திறக்கும் சமயம் கதவை நன்கு தட்டி விட்டு சிறிது நேரம் கழித்து தான் அர்ச்சகர்கள் நடையைத் திறக்கிறார்கள்.

கோவில் சிறப்புகள்:

ஆடித் திருவிழா பொதுவாக அம்மன் தலங்களில் 4 அல்லது 5 வாரங்கள் தான் நடைபெறும். ஆனால் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திலோ 14 வாரங்கள் ஆடிப் பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
மேற்கு வங்க திருமணங்களில் மீன் ஏன் முக்கியமானது? ரகசியம் இதோ!
 பவானி அம்மன் | Bhavani Amman and snake

கோவில் உட்பிரகாரத்தில் உள்ள வேப்ப மரமே இக்கோவிலின் தலவிருட்சம் ஆகும். பெரியபாளையம் கோவிலில் கொடிமரம் கிடையாது. அதற்கு பதில் சக்தி மண்டபம் உள்ளது. பொதுவாக கோவில்களில் விழாக்கள் தொடங்கும் பொழுது கொடியேற்றம் நடைபெறும். ஆனால் இத்தலத்திலோ சக்தி மண்டபத்தில் பந்தக்கால் நாட்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மீனவக்குலப் பெண்களின் தாயாக இருப்பவள் பவானி அம்மன். கடலுக்குச் சென்ற தங்கள் கணவன்மார்கள் பாதுகாப்பாக திரும்பி வர பவானியே துணை நிற்பாள் என்பது அவர்களின் நம்பிக்கை.

கடலுக்குச் சென்ற மீனவர்கள் திரும்பி வந்ததும் அவர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வணங்கிச் செல்வது வழக்கம். ஆடிவிழாவின் 6 மற்றும் 7வது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடலோரப் பகுதி மீனவர்கள் ஒன்றாகத் திரண்டு வந்து பவானி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

ஆடிவிழாவின் 10வது வாரம் ஞாயிற்றுக்கிழமை அம்மனின் மீது சூரிய ஒளி படும். இந்த சூரிய வழிபாட்டைக் காண்பதற்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு சூரிய ஒளி வழிபாட்டை பக்தர்கள் காணச் செய்கிறார்கள்.

 பவானி அம்மன் | Bhavani Amman
பவானி அம்மன் | Bhavani AmmanAI Image

சிறப்பு நேர்த்திக்கடன்கள்:

பெரியபாளையம் ஆலய வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது வேப்பஞ்சேலையில் பிரார்த்தனை வழிபாடு செய்வது தான். செவ்வாய், வெள்ளி என்று இல்லாமல் தினமுமே இங்கு வேப்பஞ்சேலை வழிபாடு நடக்கிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அம்மனுக்கு வேப்பஞ்சேலை உடுத்தி, பொங்கல் வைத்து, அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்கின்றனர். ஆடி மாதம் மற்றும் ஆவணியில் கோவிலில் விழாக்கள் கோலாகலமாக நடைபெறும். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.

அங்கப்பிரதட்சணம் காலை 5 மணி முதல் 9 மணி வரையிலும், வேப்பஞ்சேலை நேர்த்திக்கடன் காலை 5 மணி முதல் 12 மணி வரையிலும், மீண்டும் மாலை 4 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் கூழ் வார்த்தல், பொங்கல் வைத்து வழிபடுதல் இங்கு மிகவும் முக்கியமானது.

இதையும் படியுங்கள்:
அம்மனுக்கு அழகழகாய் புடவைகள்... எந்த நிறத்திற்கு என்ன பலன்? தெரிந்து கொள்ளலாமா!
 பவானி அம்மன் | Bhavani Amman and snake

திருவிழாக்கள்:

இங்கு தினம் தினம் திருவிழாக்களும் கோலாகலங்களும் தான். ஆடி மாதம் 14 வாரங்களும், சித்திரா பௌர்ணமி திருநாளும் இங்கு மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

எப்படி செல்வது?

சென்னையில் இருந்து சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெரியபாளையம். சென்னை கோயம்பேடு மற்றும் ரெட் ஹில்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

இக்கட்டுரையை முழுமையாக வாசிப்பதன் மூலம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலின் ஆன்மிக ரகசியங்கள், நேர்த்திக்கடன் முறைகள் மற்றும் வழிபாட்டு வழிமுறைகளைத் தெளிவாக அறிந்து கொண்டு முழுமையான இறை அருளைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com