
வடக்கிலிருந்து தெற்கே, கிழக்கிலிருந்து மேற்காக, பூசணிக்காய்கள் எல்லா இடங்களிலும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. எனவே பூசணிக்காயை இந்தியாவின் தேசியக் காய் என்கிறார்கள். பூசணி சாகுபடிக்கு மிகவும் வளமான மண் தேவையில்லை. எங்கும் விளையும். விலை அதிகம் இல்லாவிட்டாலும், தரமான பொக்கிஷம் பூசணி.
காய்கறிகளிலேயே மிகுந்த நீர்ச்சத்தும் மருத்துவ குணமும் கொண்டது பூசணிக்காய்தான். அதிலும் வெண்பூசணி கூடுதல் சத்து கொண்டது. வாரம் ஒருமுறை பூசணிக்காய்யை உணவில் சேர்த்துக்கொள்ள அறிவு வளரும் என்கிறது ஆயுர்வேதம். கிட்னியில் படிந்து வளரும் கற்களை கரைத்துவிடும் ஆற்றல் பூசணிக்கு உண்டு. உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், அந்த பிரச்னையை நீக்கவும் உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த காய்கறி பல்வேறு வகையான வைட்டமின்களின் களஞ்சியமாக உள்ளது.
வெள்ளை பூசணிக்காய்சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இந்த பலன்களை பெறலாம். ஹைபர் டென்ஷன் தவிர்க்கப்படுகிறது, வயிற்றில் உள்ள தீங்கிழைக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்கிறது, நரம்பு மண்டல கோளாறுகளை தவிர்க்க உதவுகிறது.
உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் குறைக்கிறது, கல்லீரல் பணியை மேம்படுத்தும், மற்ற உணவுகளால் உருவாக்கப்பட்ட அதிகளவு நச்சுப் பொருட்களை உடலிருந்து வெளியேற்றுகிறது.
நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமன் உள்ளவர்களும் பூசணிக்காய்யை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் கட்டுப்பாட்டில் வைக்கும் அது ஓர் உயர் தரமான சத்துணவு. பூசணிக்காய்யை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போடும் வாய்ப்பு குறைகிறது என்கிறார்கள் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
பீட்டா செல்கள் பழுது ஏற்படுவதால்தான் உடலில் இன்சுலின் சரியாக சுரக்காமல் போகிறது. பூசணிக்காய்யை அடிக்கடி சாப்பிட அதிலுள்ள சத்துக்கள் மூலம் இன்சுலின் உற்பத்தியை சீராக்க முடியும் என்கிறார்கள்.
வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின்ஏ, பி, சி, கால்சியம், இரும்புச்சத்து என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின்கள் சி , பி 1, பி 3, தாதுக்கள், கால்சியம் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இது தவிர, இதில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது, இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதில், உள்ள நீர்சத்து உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக உள்ளது.
வைட்டமின் ஏ நிறைந்த பூசணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண்பார்வை சிறப்பாக இருக்கும். பூசணியை காலை, மாலை என இருவேளையும் ஜூஸ் செய்தும் பருகலாம். இதனால் கண் பார்வை சிறப்பானதாக அமையும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்து இருப்பதால் எலும்பு வலுவடையும், உடல் ஆரோக்கியம் கூடும்.
வெண் பூசணிக்காயின் வெள்ளை கொழுகொழப்பான சேற்று பகுதியை சாறு எடுத்து தினமும் காலை மற்றும் இரவு உணவுக்கு முன் 30 மிகி சாப்பிட்டு வர பெண்களின் அதிக வெள்ளைப் போக்கு சரியாகும். மூன்று மாதங்கள் சாப்பிட வேண்டும். பெண்களின் கருப்பை வீக்கம் குறைக்கும் இதனால் கருப்பை அகற்றும் நிலை வராது.
புற்றுநோய் நோய்க்கு காரணமான செல்களை அழிக்கும் பொருட்களில் ஒன்று "பரப்பியோனிக் அமிலம்" இது பூசணிக்காயில் உள்ளதாக மலேசியாவின் செயின்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே பூசணிக்காய் சாப்பிட்டால் புற்றுநோய்யை தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பூசணி விதைகள் தைராய்டு சீராக செயல்பட உதவுகிறது. இதில் மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. , இவைகள் தைராய்டு ஹார்மோன் தொகுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பூசணி விதைகளை வழக்கமாக உட்கொள்வது சீரான தைராய்டு செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
உடல் சூட்டை தணிக்க உதவும். இரத்தம் சளியுடன் இருமும் நிலை மாற்றும் ஆற்றல் உடையது. வெண் பூசணிக்காயினை வாரம் ஒருமுறை அல்லது மாதம் மூன்று முறையாவது சாப்பிட வேண்டும். இதில் நார்ச்சத்து உள்ளது, இது அஜீரணம், மலச்சிக்கல் அல்லது பிற வயிற்று பிரச்னைகளை போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கல்லீரலுக்கு நல்லது. வெப்பத்தை தாங்கும்.
உடல் மெலிந்தவர்கள் பூசணிக்காய் சாப்பிட சதை பிடிக்கும், குண்டானவர்கள் இதை அளவுடன் சாப்பிட வேண்டும். இதில் வைட்டமின் சி, ஏ யும் நிறைய உள்ளதால். வயிறு மந்தம், பித்த கோளாறு, ஜீரண கோளாறு உள்ளவர்கள் தேங்காயுடன் பூசணிக்காய் கூட்டு செய்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.