

இந்த கட்டுரை வீட்டிலேயே தேன் (honey) அசலா போலியா என்பதை அறிய 5 எளிய சோதனைகளை விளக்குகிறது. நீர்ச் சோதனை, தீக்குச்சி சோதனை, விரல் சோதனை, காகிதம்/துணி சோதனை, தேனீக் கூடு வடிவச் சோதனை மூலம் கலப்பட தேனைத் தவிர்க்கலாம். இயற்கைத் தேன் (honey) சில மாதங்களில் உறைதல் சாதாரணம் என்றும், அதிக வெப்பத்தில் காய்ச்சும் தொழிற்சாலை தேன் சத்துக்களை இழக்கும் என்றும் எச்சரிக்கிறது.
தேன் (honey) என்பது இயற்கை நமக்கு அளித்த மிகச்சிறந்த அமிர்தம். ஆனால், இன்றைக்குச் சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான தேன்களில் சர்க்கரை பாகு, குளுக்கோஸ் சிதைவு (High Fructose Corn Syrup) போன்றவை கலக்கப்பட்டுப் போலித் தேனாக விற்பனை செய்யப்படுகின்றன.
அசல் தேனுக்கும், போலித் தேனுக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் அதை வீட்டில் சுலபமாகக் கண்டறியும் வழிகள் இதோ:
1. அசல் தேனின் பண்புகள் vs போலித் தேனின் பண்புகள்:
அசல் தேன்: இதன் பாகுத் தன்மை அடர்த்தியாக இருக்கும். தொட்டால் பிசுபிசுப்பு குறைவாக இருக்கும். இதன் வாசனை என்று பார்த்தால் பூக்களின் லேசான நறுமணம் மற்றும் இயற்கை தேனின் மனம் வீசும். குளிர்காலத்தில் இந்த அசல் தேனில் அடியில் கிரிஸ்டல் போல உறையும். இது இயற்கையானது
இதன் சுவை சாப்பிட்டவுடன் தொண்டையில் லேசான கார்ப்பு அல்லது எரிச்சல் உணர்வு வந்து மறைந்துவிடும். இதுதான் அசல் தேனின் பண்புகள்.
போலித்தேனின் பண்புகள்: போலித் தேனின் பாகுத்தன்மை நீர்த்து போய் இருக்கும். தொட்டால் பிசுபிசுப்பு அதிகமாக இருக்கும். இதன் வாசனை என்று பார்த்தால் வெறும் சர்க்கரை பாகு அல்லது எந்த வாசனை திரவிய மணமும் இருக்காது. குளிர் காலத்தில் உறையவே உரையாது; அடியில் சர்க்கரை போல தனியாக படியும்.மேலும், இதன் சுவை என்று பார்த்தால் சாப்பிட்டவுடன் தொண்டையில் வெறும் இனிப்பு சுவை மட்டுமே நீண்ட நேரம் இருக்கும். இதுதான் போலித்தேனின் பண்புகள்.
2. வீட்டில் அசல் தேனைக் கண்டறிய 5 எளிய சோதனைகள்:
1) நீர்ச் சோதனை (Water Test):
ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு துளி தேனை விடவேண்டும் அந்தத் தேன் அசல் தேன் என்றால் கரையாமல் நேராகக் கீழே சென்று டம்ளரின் அடியில் தங்க வடிவில் படியும்.
போலித் தேன் என்றால் தண்ணீரில் இறங்கும் போதே கரைந்துவிடும்.
2) தீக் குச்சி சோதனை (Matchstick Test):
ஒரு தீக்குச்சியின் மருந்துப் பகுதியில் லேசாகத் தேனைத் தொட்டுக் கொண்டு அதைத் தீப்பெட்டியில் உரசிக் கொளுத்தவேண்டும்.
அசல் தேன் என்றால் தீக்குச்சி உடனடியாக எரியும். காரணம் அசல் தேனில் நீர்ச்சத்து இருக்காது என்பதால் தான்.
போலி தேன்: 'புஸ்' என்ற சத்தத்துடன் எரியாது அல்லது அணைந்துவிடும். காரணம் போலி தேனில் இருக்கும் கலப்பட நீரின் காரணமாகத்தான்.
3) விரல் சோதனை (Thumb Test):
ஆள்காட்டி விரலில் ஒரு துளி தேனை வைத்தால் அது விரலை விட்டு வழிந்தோடாமல் ஒரே இடத்தில் கெட்டியாக நிற்கும். அப்படி நின்றால் அது அசல் தேன் என்று அர்த்தம்.
போலி தேன்: விரலில் வைத்த சர்க்கரை பாகு விரலின் பக்கவாட்டில் வழிந்துவிடும் இதிலிருந்து போலித்தேன் என்பதை கண்டுபிடித்து விடலாம்.
4) காகிதம் / துணி சோதனை (Paper Test):
ஒரு பிளாட்டிங் பேப்பர் (Plotting Paper) அல்லது வெள்ளைத் துணியில் ஒரு துளி தேனை விட்டால் அது அசல் தேன் என்றால் காகிதத்தின் பின்புறம் ஊடுருவி ஈரமாகாது, துணியிலும் கறை படியாது.
போலி தேன்: காகிதம் உடனடியாக அந்த நீரை உறிஞ்சி ஈரமாகிவிடும்.
5) தேனீக் கூடு வடிவச் சோதனை (Memory Test):
ஒரு தட்டில் கொஞ்சம் தேனை ஊற்றி, அதன் மேல் சிறிதளவு தண்ணீரை ஊற்றி தட்டை மெதுவாக வட்டவடிவமாகச் சுழற்ற வேண்டும். அப்படி சுழற்றும்போது அசல் தேன் என்றால் தேன் தண்ணீருடன் கரையாமல், தட்டின் அடியில் தேனீக் கூடு (Hexagon/Honeycomb pattern) போன்ற அழகிய வடிவத்தை உருவாக்கும். அதை வைத்து அசல் தேனை கண்டுபிடித்து விடலாம்.
முக்கியக் குறிப்பு:
இயற்கைத் தேன் (honey) சில மாதங்களில் உறையும் (Crystallize ஆகும்). இது கலப்படம் அல்ல; அது அசல் தேனின் இயல்பு. தேன் உறையாமல் எப்போதும் பளிங்கு போல திரவமாகவே இருக்க வேண்டும் என்பதற்காகப் பெருநிறுவனங்கள் அதை அதிக வெப்பத்தில் காய்ச்சுகின்றன (Pasteurization). இதனால் தேனில் உள்ள சத்துக்கள் அழிகின்றன. எனவே, கிராமப்புறங்களில் நேரடியாக எடுக்கப்படும் தேனை வாங்குவது மிகவும் நல்லது! அல்லது மேலே குறிப்பிட்ட சில சோதனைகளை செய்து வாங்கலாம்.
போலியான கலப்படத் தேனைத் தவிர்த்து உண்மையான தேனை அடையாளம் காணும் திறனைப் பெறுவதன் மூலம், உணவு நச்சுக்களில் இருந்து விடுபடலாம்.