நகைகள் அணிவதால் என்ன பலன்?அறிவோமா?

Ornament
Ornament
Published on

நாம் அணிவது தங்கமோ வெள்ளியோ எதுவாக இருந்தாலும் அந்த ஆபரணம் என்பது நம் உடலில் முக்கிய வர்ம புள்ளிகளைத் தூண்டி உடலின் இயக்கத்தை சீராக்கிவிடுகிறது, நோய் வராமல் காக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். நாம் அணியும் நகையால் என்ன பலன் என்பதை பார்ப்போம்.

காதணி:

தோடு என்பது காதில் அணியும் ஆபரணம். பெண்கள் அனைவரும் அணியும் ஆபரணத்தை ஆண்களின் ஒரு பிரிவினர் அணிவார்கள். காது குத்துதல் என்பது தமிழ் சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காக கொண்டாடப்படுகிறது.

காது மடலில் துவாரமிட்டு காதணியை அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்துவது தான். மூளையின் செயல் திறனும் இதனால் அதிகரிக்கும். ஜீரணக் கோளாறு சரியாகும்

வளையல்:

வளையல் என்பது பாரம்பரிய அணிகலனாகும். தங்கம், கண்ணாடி வளையல் ஆரம்ப காலத்தில் அணிந்தாலும் தற்போது பிளாஸ்டிக்கும் அதிகரித்துள்ளது.

வளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன்களின் குறைபாடுகளை களைவதாகும். கர்ப்பமான பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் வளைகாப்பு சடங்கு பாரம்பரியத்தில் முக்கியம் பெறுகிறது . கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கவும், உடல் சூடு தணியவும், இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் பணியை வளையல்கள் செய்கின்றன . வளையல் அணிவதால் சுவாசப் பாதை, அலர்ஜி, ஆஸ்துமா போன்றவை குறையும். நன்றாக தூக்கம் வரும். மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்கள் அணிவதால் மார்புக்கு மத்தியில் ரத்த ஓட்டத்தில் சீராக வைத்திருக்க முடியும்.

கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகிறது.

நெற்றி சுட்டி அணிவதால் தலைவலி சைனஸ் பிரச்சனைகள் சரியாகிறது. சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்றுப் பகுதிகள் வலுவடையும்.

அரைஞாண் கொடி: சிறு குழந்தையாக இருக்கும்போது இடுப்பில் அரைஞாண் கொடி அணிவிப்பது வழக்கம்.

மலட்டு தன்மை நீக்கவும் உடல் சூட்டை குறைக்கவும் அரைஞாண் கொடி பயன்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இல்லற வாழ்வில் இணக்கம் மலர... ஜப்பானியர்களின் 5 அற்புத வழிகள்!
Ornament

மெட்டி:

மெட்டி திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும். பெண்களின் கருப்பையைத் தூண்டி விடும் முக்கிய நரம்புகள் கால் விரல்களில் இருக்கின்றன. கர்ப்பத்தின் போது ஏற்படும் மயக்கம், வாந்தி, பசியின்மை போன்றவற்றை கட்டுப்படுத்தவும். கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி உதவுகிறது.

வெள்ளியில் இருக்கும் ஒரு வித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கிறது. பெண்கள் நடக்கும்போது பூமியுடன் பதிந்து விரலை மெட்டி அழுத்துவதால் கர்ப்பிணிப் பெண்களின் உடல் உபாதைகள் குறைகிறது.

கொலுசு போலவே மெட்டியையும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும் .

மோதிரம்:

விரல்களில் அணியும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், முழுமையான பேச்சு திறனுக்கும் நல்ல குரல் வளத்துக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதய கோளாறுகள், வயிற்று கோளாறுகள் நீங்கும் என நம்பிக்கை உண்டு.

மூக்குத்தி:

இரண்டு பக்கங்களிலும் அல்லது வலது பக்க மூக்கு மட்டுமே மூக்குத்தி அணிவது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம்.

பெண்களின் இடதுபுற மூக்கில் குத்தக்கூடிய மூக்குத்தி, வலதுபுற மூளையையும் , வலது புறம் மூக்கில் குத்தும் மூக்குத்தி இடது புறம் மூளையையும் சமநிலைப்படுத்த கூடியதாக உள்ளது.

மூக்கு மடலில் குத்தப்படும் துவாரம் ஒற்றைத் தலைவலி, நரம்பு நோய்கள், உளச்சோர்வு போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

நகைகள் அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை. அது நமது ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நம் முன்னோர்கள்.

நன்றி: நகைகளின் ஆரோக்கியம் நூலிலிருந்து

இதையும் படியுங்கள்:
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை தவிடு பொடியாக்கிய இந்திய ராணுவம்! 
Ornament

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com