
பெண்கள் No சொல்ல வேண்டிய நேரத்தில் No சொல்ல வேண்டும். அதுவும் பணிவாக, கனிவாக! அதுவும் தெளிவாக!!
ஒரு பிரபல தெலுங்கு நடிகர் சரோஜாவை மணம் முடிக்க கேட்டபோது...
M G R தேர்தலில் சீட் கொடுக்கிறேன் என்று கொம்பு சீவியபோது...
மறுமணம் பண்ணிக்கோ என்று தோழிகள் வற்புறுத்தியபோது…
சொந்த படம் எடுக்கலாம் மேடம் என சில நட்புகள் உசுப்பேதிய போது…
குழந்தைகள் இல்லையே, எங்க பிள்ளைகளை தத்து எடுத்துக்குங்க என்று உறவு ஆசை காட்டிய போது…
கன்னடத்தில் படங்களே இல்லையே… பேசாமல் சென்னையில் settlle ஆகி விடுங்க என்று தயாரிப்பாளர்கள் சொன்னபோது…
"No" சொன்னவர் சரோஜா தேவி..
அதனால் நிம்மதியாக ராயல் வாழ்க்கை வாழ்ந்து மறைந்துவிட்டார்.
மூன்றாம் கல்யாணம் பண்ணி.. சொத்து எல்லாம் இழந்த… K R vijaya...
மகனால் நடுத்தெருவுக்கு வந்த மனோரமா - ck Saraswathi
தத்து பிள்ளையால் அனாதையாக இறந்த - V k R…
ஏற்கனவே இருமுறை கல்யாணம் ஆனவரை காதலித்து, சொந்த படம் இயக்கி… குடிக்கு அடிமை ஆகி, கோமாவில் இறந்த சாவித்ரி…
உறவினர்களால் ஏமாற்றப்பட்டு காதலை துறந்து, சந்நியாச வாழ்க்கை வாழும் பேரழகு காஞ்சனா…
சொத்து தகராறில் எல்லா சொத்தையும் கொடுத்துவிட்டு, ஒரு எளிய flat இல் தங்கையுடன் வாழும் சௌகார்…
அரசியலில் புகுந்து, வரவேற்பு பெறாமல் கல்யாணம் இல்லாமல்.. depression kku pona வெண்ணிற ஆடை நிர்மலா…
Toxic காதல்களில் No சொல்ல தெரியாது தற்கொலை செய்த சில்க் ஸ்மிதா… ஷோபா… ஜெயலட்சுமி... விஜி...
அமெரிக்கா வாழ்க்கை என்று போய் மனம் கசந்து வந்த அம்பிகா… சுகன்யா…
மூன்று கல்யாணம் பண்ணி, ஐஸ்வர்யாவை வெளியேற்றி இன்னொரு பெண் குழந்தையை தத்து எடுத்து வெளிய தலைகாட்டாமல் வாழும் லக்ஷ்மி…
நான் ஒக்கலிகர் சமுதாயம்...
காவிரி பிரச்னையில் நான் நடுநிலை…
என்னை வாழ வைத்த தெய்வம் M g r…
எனக்கு முகப்பரு… அம்மை தழும்பு முகத்தில் இருக்கு… அதை மறைக்கவே ஓவர் மேக் அப் போடுகிறேன்…
எனக்கு சிறு வயதில் முடக்கு வாதம் வந்துவிட்டது. என் தாத்தா என்னை வெறுத்தார்.
அதனால் என் நடை கொஞ்சம் பின்னி இருக்கும்.
பொண்ணு கருப்பா இருக்கு தமிழே வரலை… கீச் குரலில் பேசுது… தத்தி நடக்குது… வேண்டாம் என்று m g r இடம் தயாரிப்பாளர்கள் சொன்னார்களாம்.
அந்த பேச்சு வித்தியாசமா இருக்கு.. நடையும் கவர்ச்சியா இருக்கு… ஓகே!" என்று கணித்து.. எதிர்ப்பையும் மீறி தன் சொந்த படத்தில் சரோஜாவை ஒப்பந்தம் செய்து உள்ளார்.
அதற்கு பின்பு சரோஜா தேவிக்கு (நிஜ பெயர் ராதா தேவி) வந்த வாழ்வு!! ராயல் லைஃப்!!
இவர் நடிக்கும் படங்களின் வருமானத்தையெல்லாம் தானே சுருட்டாமல், தங்க வைர நகைகளாகவே வாங்கி குவிப்பாராம் ருத்ரம்மா.
அவர் அணியும் எல்லா நகைகளும் நிஜம்!
அதை அம்மாவே போட்டுவிட்டு அவரே கவனமாக கழட்டி பாதுகாப்பு செய்வாராம்.
அம்மா நல்லதுக்கு சொல்லும் பேச்சை கேட்டு, நடக்கும் பெண்கள் கெட்டுப்போனதாக வரலாறு இல்லை!!
NO சொல்லுங்க பெண்களே!!