சஷ்டியப்த பூர்த்தி முதல் சதமானம் வரை: கொண்டாட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை பாடம்!

60, 70, 80, 90, மற்றும் 100 போன்ற வயதுகளை எதற்காக இவ்வளவு கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்? கொண்டாட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை பாடம் என்ன...? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க..
sastiyathapoorthi to Shatamanam
sastiyathapoorthi to ShatamanamAI Image
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on
MM strip
MM strip

60, 70, 80, 90, மற்றும் 100 - இந்த ஐவகை வயதுகளை மிக ஆடம்பரமாகக் கொண்டாடும் ஒரு பாரம்பரிய பழக்கம் இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ளது.

60, 70, 80, 90, மற்றும் 100 போன்ற வயதுகளை எதற்காக இவ்வளவு கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்? காரணம் என்ன...? என்று ஊர்ப்பக்கம் போயிருக்கையில், கற்றறிந்த வயதான குருக்கள் ஒருவரிடம் கேட்டேன்.

அவர் சற்றே யோசித்துவிட்டு, "மகாபாரதத்தில் வரும் யயாதி மன்னனை உதாரணமாக கூறினார். யயாதி மன்னன் அதிகாரம், இன்பம், வெற்றி என அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்தான். ஆனால், முதுமை திடீரென வந்தபோது, ​​அது அவனை ஆழமாக உலுக்கியது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, அவன் ஒரு உண்மையை உணர்ந்தான்.

*இன்பங்களுக்கு எல்லைகள் உண்டு, ஆனால் ஆசைகளுக்கு இல்லை*

இதையும் படியுங்கள்:
‘நவதி விழா’ பற்றித் தெரிந்து கொள்ளுவோமா?
sastiyathapoorthi to Shatamanam

“இந்த உணர்தல் அவனது வாழ்க்கையை மாற்றியது. அவன் முதுமையை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் ஐந்து அகத் திருப்புமுனைகள் உள்ளன என்றும், அவை வயதை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, மாறாகப் புரிதலை அடிப்படையாகக் கொண்டவை என்றும் உணர்ந்தான்" என்று முடித்த குருக்கள், மேலும் சிலவற்றைக் கூறினார்.

ஐந்து அகத் திருப்புமுனைகளும், இந்தியக் கலாச்சாரத்தில் உள்ள 60, 70, 80, 90, மற்றும் 100 வயது என்ற பாரம்பரிய மைல்கற்களுடன் பொருந்துகின்றன.

60 – சஷ்டி (சஷ்டிபூர்த்தி) (மாறும் முன்னுரிமைகள்)

மனம் சேகரிப்பிலிருந்து புரிதலுக்குத் திரும்புகிறது. முன்னுரிமைகளில் மாற்றம் நிகழ ஆரம்பிக்கிறது.

“இன்னும் எவ்வளவு என்னால் பெற முடியும்?” என்ற கேள்விக்குப் பதிலாக “இப்போது உண்மையில் எது முக்கியம்?” என்ற கேள்வி எழுகிறது. ஆரவாரம், பாராட்டு மற்றும் புற அங்கீகாரத்திற்கான தேவை குறைகிறது. லட்சியத்தை விஞ்சும் முதிர்ச்சி உருவாகிறது.

70 – பீமரத சாந்தி (அமைதியே பலம்)

தன்னை நிரூபிப்பதை விட அமைதியாக செயல்படுவது அதிக சக்தி வாய்ந்ததாக உணரப்படுகிறது. வாத- விவாதங்களில் வெற்றி பெறுவதை விட, உறவுகளைப் பேணுவதே முக்கியம் எனத் தோன்றுகிறது.

80 – சதாபிஷேகம் (மருந்தாகும் இருப்பு)

அநேகர், ஆலோசனைக்காக மட்டும் வராமல், வாழ்க்கையை வாழவும், புரிந்துகொள்ளவும், நிறைவு செய்யவும் முடியும் என்ற ஆழமான ஒரு உறுதியைத் தேடி வருகிறார்கள். வணங்கி ஆசீர்வாதம் பெறுகின்றர்.

90 – நவதி (அமைதியாக கரையும் அகங்காரம்)

அகங்காரம் அமைதியாக ஓய்வு பெற்று, மற்றவர்களைத் திருத்த வேண்டும், உங்கள் கருத்துக்களை இறுகப் பற்றிக் கொள்ளவேண்டும் என்கிற தேவை மறைந்து போகிறது. உள்ளுக்குள் ஒரு மென்மையான அமைதி குடியேறுகிறது.

100 – சதமானம் (முழுமையடையும் வாழ்க்கை)

வாழ்க்கை தனிப்பட்ட கதைகளைக் கடந்து செல்கிறது. 100 வயதை அடைகையில், வாழ்க்கையின் பரந்த சித்திரம் தெளிவாகத் தெரியும். அன்பு மட்டுமே முக்கியமானது மற்றும் வாழ்க்கை எப்போதும் ஒரு மர்மமான, கருணையுள்ள சக்தியால் வழிநடத்தப்பட்டது என்பதும் உணரப்படுகிறது.

நமது ஞானிகள், வயதை மட்டும் கொண்டாடவில்லை -

அந்த வயதோடு வரும் அக மாற்றத்தையே அவர்கள் கொண்டாடினார்கள்.

இதையும் படியுங்கள்:
சில ஆன்மிக சந்தேகங்களும் அறிய வேண்டிய அற்புத பதில்களும்!
sastiyathapoorthi to Shatamanam

வருடம் ஒன்று போனால், வயதும் ஒன்று ஏறுகிறது. வாழ்க்கையில் இன்னும் தூய்மையானவராகவும், ஞானம் மிக்கவராகவும், மென்மையானவராகவும் மாறுவதை, வயது குறிக்கிறது என்பதில் சந்தேகமே கிடையாது.

logo
Kalki Online
kalkionline.com