குட்டி ஸ்டோரி: தேவை உள்ளவரைதான் உறவா?

15 வருடங்களுக்குப் பிறகு சந்தித்த தோழிகள்: கல்பனாவின் நிஜ முகம் என்ன? உறவுகளின் கசப்பான உண்மை!
Next-gen relationship reality
Next-gen relationship realityImage credit: AI
ராமன். செல்வராஜ்

கோவில் நகரம் குடத்தையில் வசித்து வரும் இவர் விலங்கியலில் முதுகலை பட்டமும், வெகுஜன தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். தற்சமயம் EXNORA , 'உலக தமிழர் அறக்கட்டளை' போன்ற அமைப்புகளில் தன் பங்கை ஆற்றி வருகிறார். இவரது இலக்கியத் தொடர்பு என்பது ஒரு கவிதை மூலமாக 'கவிநானூறு' என்கிற இணையதளத்தில் தொடங்கியது. தொடர்ந்து கட்டுரைகளும் வேறுசில தளங்களில் வெளியாகின. செப்டம்பர் -17- 2025 முதல் கல்கி குழுமத்துக்காக சிறுகதைகள், தத்துவங்கள், ஆன்மீக புரிதல்கள் ஆகியவற்றை எழுதி, பகிர்ந்து வருகிறார். இவரது கதை கட்டுரைகளை கல்கி ஆன்லைன் இதழ்களிலும் Motivation, பசுமை/ சுற்றுச்சூழல், மற்றும் கலை கலாச்சாரம், ஆன்மீகம், தத்துவம் ஆகிய பகுதிகளிலும் காணலாம்.

Updated on
MM strip
MM strip

"அவளுக்கு ரொம்ப திமிரு டீ !"

"என்ன பார்த்தும் பார்க்காம போறா?"

"'டிவில' செய்தி வாசிச்சா பெரிய ஸ்டார் என்கிற நினைப்பு போல...."

இப்படி தன்னுடன் படித்த கல்பனா பற்றி மீனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அபிராமி.

15 வருடங்களுக்கு முன்பு கல்பனா, மீனா, அபிராமி மூவரும் ஏழாவது, எட்டாவது வகுப்புகளில் மயிலாப்பூர், பள்ளியில் படித்தவர்கள்.

மீனா தொடர்ந்தாள்...

"அப்படியா? ஒரு நான்கு மாதத்திற்கு முன்பு கல்பனாவை மயிலாப்பூர் பஜாரில் பார்த்தேன்! அங்கே ரொம்ப கூட்டமாக இருந்ததால், தன் காரில் ஏறிக் கொள்ள சொன்னாள். பக்கத்தில் உள்ள பார்க்கில் சென்று இருவரும் அமர்ந்தோம்.

அரை மணி நேரம் அரட்டைக்கு பிறகு Ratna Cafe சென்று டிபன் சாப்பிட்டோம். பேச்சு ரொம்ப இயல்பாக இருந்துச்சு.

எனக்கு அவளை 15 வருடங்கள் பிறகு சந்தித்து பேசியது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு! உனக்கு இப்படி நடந்தது என்று நீ சொல்லும்போது அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இருந்தாலும் கல்பனா வீட்டு அட்ரஸ் மற்றும் செல் நம்பர் என்னிடம் இருக்கிறது. இப்ப நான் செல் எடுத்துட்டு வராததனால வீட்டுல போய் அவளிடம் பேசிட்டு உனக்கு போன் பண்றேன். உன் போன் நம்பர் கொடு," என்று மீனா அபிராமியிடம் கேட்டு வாங்கிக் கொண்டாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை : பக்தியும் போதைதான்!
Next-gen relationship reality

வரும், வரும் என்று அபிராமி காத்துக் கொண்டே இருந்தாள்...

ஆறு மாதங்கள் ஆகிறது இன்னும் எந்த பதிலும் இல்லை....

சொல்லுவதோடு சரி, யாரும் யாரிடமும் பேசியதாக தெரியவில்லை...

ஒருவருடைய உதவி மற்றவர்களுக்கு தேவையில்லாத போது பேச்சிற்கு இடம் இல்லை போல...

இதுதான் நெக்ஸ்ட் ஜென் போல...

logo
Kalki Online
kalkionline.com