
செம்பூர் லோக்கல் ட்ரெயின் ஃப்ரெண்ட் பங்கஜம் வீட்டில் சமீபத்தில் ஒரு கெட்-டு-கெதர் நிகழ்வு எதற்காக..?
செம்பூர் லோக்கல் ட்ரெயின் ஃப்ரெண்ட்ஸ்களுடன், 35 வருட நட்பினைக் கொண்டாடத்தான் இந்த Get together நிகழ்வு. டோக்ளா, காண்ட்வி போன்ற Starters உடன் ஆரம்பித்து, பால் பாயாசத்துடன் அருமையான ஃபுல் கோர்ஸ் லன்ஞ்ச். பின்னர் குல்ஃபி.
லோகல் ட்ரெயின் ஃப்ரெண்ட்ஸ் என்று எழுதி, லோகல் ட்ரெயின் படம் போட்டு அழகான கேக் வர, அதைக் கட் பண்ணி "ஹேப்பி பர்த்டே லோகல் ட்ரெயின் ஃப்ரெண்ட்ஸ்!" என்று பாடியது ஹைலைட். இவ்வுலகில் ஃப்ரெண்ட்ஸ் இல்லாமல் இருப்பவர்கள் மிக அரிது. ஒருவருக்கு ஒரு ஃப்ரெண்ட் ஆவது இருப்பது நிச்சயம்.
ஆனால், மும்பை லோகல் ட்ரெயினில் வேலை நிமித்தமாக செம்பூரிலிருந்து காலை 09.15 மணிக்குப் புறப்பட்டு விக்டோரியா டெர்மினஸ் செல்லும் லோக்கலில் பயணம் செய்த 18 பெண்கள் கடந்த 35 வருட காலமாக ஃப்ரெண்ட்ஸ் ஆக இருக்கிறார்கள் என்பது மூக்கின் மீது விரல் வைக்கக் கூடிய விஷயமாகும். ஆச்சரியமாக இருக்கிறதா...!
"செம்பூர் லோக்கல் ட்ரெயின் ஃப்ரெண்ட்ஸ்", வாட்ஸ்ஆப் க்ரூப் வைத்து அநேக விஷயங்களை இன்றும் பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
முன்பின் தெரியாதவர்கள், வேறு-வேறு மதம், வேறு-வேறு அலுவலகம், மொழியென இருந்தாலும், லோகல் ட்ரெயின் பயணம் இவர்களை ஒன்று சேர்த்து விட்டது. அதுவும் காலை 09.15 மணி செம்பூர் லோக்கல் ட்ரெயின் லேடீஸ் டப்பா, ஃப்ரெண்ட்ஸ்களால் கல-கலவென்றிருக்கும்.
லோக்கல் ட்ரெயினில் ஹனுமான் சாலீஸா, மகிஷாஸுர மர்த்தினி ஸ்லோகம் என பாடிக்கொண்டு செல்வார்கள். ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, தை வெள்ளி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரியென ஒன்று விடாமல் எல்லாப் பண்டிகைகளும் விமரிசையாக லோக்கலில், இந்த ஃப்ரெண்ட்ஸ்களால் கொண்டாடப்படும். யார் வீட்டில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும், ஆதரவாக இருப்பார்கள்.
ஒரு வீட்டிலிருந்து மன்னியும், நாத்தனாரும் சேர்ந்து செம்பூர் லோக்கலில் வருகையில், நாத்தனார், "மன்னி" என்று அழைத்துப் பேச, ட்ரெயின் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்குமே அவர்கள் மன்னி, அதுவும் "ட்ரெயின் மன்னி" ஆகிவிட்டார். ட்ரெயின் மன்னி வயதில் சற்று மூத்தவர் ஆனதால், அவருடைய அட்வைஸைக் கேட்பது வழக்கம்.
ஒருவருக்கு ஒருவர் உட்கார இடம் கொடுப்பார்கள். தாய்மையடையப்போகின்ற, மசக்கையாக இருக்கிற ஃப்ரெண்டுக்கு பிடித்த உணவு ஐட்டங்களை வீட்டில் செய்து கொண்டு வந்து கொடுப்பார்கள். செம்பூர் லோக்கல் ட்ரெயின் ஃப்ரெண்ட்ஸ்களின் ஃப்ரெண்ட்ஷிப்பைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
செம்பூர் லோகல் ட்ரெயினைப் பிடிப்பதற்கென்றே, ஃப்ரெண்ட்ஸ்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஓடி- ஓடி வருவார்கள். அலுவலக மாற்றம் காரணம், சிலர் செம்பூரிலிருந்து புறப்படும் லோக்கலில் ஏறி 4-5 ஸ்டேஷன்கள் கடந்தபின் இறங்கி வேறு ட்ரெயின் பிடித்து மாறிச் செல்வார்கள். எப்படியும் லோக்கலை விடமாட்டார்கள்.
இந்த வருட நவராத்திரி சமயம் லோக்கல் ட்ரெயின் ஃப்ரெண்ட்ஸ், 09.15 செம்பூர் லோக்கலில், நவராத்திரிப் பண்டிகை கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
செம்பூர் லோக்கல் ட்ரெயின் ஃப்ரெண்ட்ஸ் அனைவருமே வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், "நட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!" என்பது போல, தொடரும் இத்தகைய சிறப்பான லோக்கல் ட்ரெயின் ஃப்ரெண்ட்ஷிப்பிற்கு ஒரு "ஓ..!" போடலாமே!
ஓ...! ஓ...ஹோ...!
செம்பூர் லோக்கல் ட்ரெயின் ஃப்ரெண்ட்ஷிப் வாழ்க நலமுடன்! வளர்க வளமுடன்!