சின்ன முள்ளும் பெரிய முள்ளும்!

Short Story in Tamil
ஓவியம்: ஸ்யாம்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

-ரேவதி பாலு

ற்றிக்கொண்டு வந்தது. பரத்தைக் குளிப்பாட்ட வேண்டும், வயிற்றுக்கு ஏதாவது கொடுத்து பள்ளிக்குக் கிளப்ப வேண்டும். இன்றைக்கென்று பார்த்து குழந்தைக்கு 'மூடே' சரியில்லை.

அனிதாவின் கோபம் பரத் மேல் இல்லை. பரத் அழுவது, அனிதா பரபரப்பது எல்லாம் தெரிந்தும், தலையே நிமிராமல் கர்மமே கண்ணாக, செய்தித்தாளில் ஆழ்ந்திருக்கும் மாமனாரிடம்தான். கொஞ்சம் பேரனைக் கூப்பிட்டுச் சமாதானப் படுத்தி வைத்துக்கொண்டால் 'பரபர' என்று எத்தனை காரியங்களை அனிதா முடிப்பாள்?

மாமியார் கல்யாணி ஊரிலில்லை யென்றால், பாத்துக்கு கையில் நூடுல்ஸோ, பிரட்டோதான் அனிதாவால் கட்டிக் கொடுக்க முடியும். இங்கே சாப்பிட எளிதாக 'கார்ன்ஃப்ளேக்ஸ்' போட்டுக் கொடுத்துவிடுவாள்.

பசை போட்டு ஒட்டினாற்போல சோபாவில் அமர்ந்து நாள் முழுவதும் செய்தித்தாள் படித்து, டீ.வி. பார்த்துப் பொழுதைப் போக்கும் மாமனாரைப் பார்த்தாலே அனிதாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும்.

"நாம எல்லோரும் பரபரப்பா ஏதோ பண்ணிக்கிட்டிருக்கிறதைப் பார்த்தும், எந்த உதவியும் செய்யாம நாள் முழுக்க வெட்டியா உட்கார்ந்திக் கிட்டிருக்காரே, நீங்க அவரை ஒரு வார்த்தையாவது கேக்கறீங்களா?" என்று வெங்கடேஷிடம் சீறுவது சமயங்களில் கல்யாணியின் காதுகளிலும் விழத்தான் செய்யும். ஆனால், அம்மாவின் சாந்தமான முகபாவத்திலிருந்து அவள் என்ன நினைக்கிறாள் என்று வெங்கடேஷால் கண்டுபிடிக்கவே முடியாது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com