குட்டிக் கதை: பசுமை நிறைந்த நினைவுகள்!

college life
college life
Published on

கல்லூரி வாழ்க்கை யாராலும் மறக்க முடியாது. கல்லூரியில் படிக்கும் போது அது நமக்கு தெரியாது. கல்லூரி விட்டு வெளியே வந்ததும் நம் மனதில் வெற்றிடம் இருக்கும்.

நம்மை சுற்றி நண்பர்கள். ஒவ்வொரு நபருக்கும் ஒரு நிக் நேம். ஆம். பக்லன், விஞ்சன், கூக்ஸ், பரட்டை, அமாவாசை என ஒவ்வொருவருக்கும் ஒரு நிக் நேம்.

கல்லூரியில் எங்கள் கேங் பிரபலமாக இருந்தது. மூன்றாம் ஆண்டு எங்கள் குரூப்பில் இருந்து தான் சேர்மேன் வெற்றி பெற்று இருந்தார். சுரேஷ் தான் சேர்மேன். எனக்கு ரொம்ப க்ளோஸ். நான் சொல்வதைக் கேட்பார். சில பிரச்னைகளுக்கு வேலை நிறுத்தம் (strike) செய்ய சொன்னால் செய்து விடுவார். அவர் என் கிளாஸ் மேட். என் மீது மதிப்பும், மரியாதையும் வைத்து இருந்தார்.

அவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நானும் ஒரு காரணம். எல்லா வகுப்புகளுக்கும் சென்று சுரேஷை அறிமுகம் செய்து வைத்து அவருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் கேன்வாஸ் செய்தேன்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; காலம் செதுக்கிய சித்திரங்கள்!
college life

அவர் வெற்றி பெற… ஒருநாள் முழுக்க முழுக்க கொண்டாட்டாம் தான். பேண்ட் செட் வந்தது. ஒரே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம். ஆண்கள்… குறிப்பாக எங்கள் குரூப் நடனம் ஆடினார்கள்.

எல்லா பெண்களும் வேடிக்கை பார்த்தார்கள். சிலர் சரக்கு அடித்து ஆடினார்கள். எனக்கு அந்த பழக்கம் இல்லை. சுரேஷூக்கும் இல்லை.

விஷயத்திற்கு வருகிறேன்.

மூன்று ஆண்டுகள் கொண்டாட்டம் தான். காலை முதல் வகுப்பு மட்டுமே போவோம். பின்னர் கல்லூரியில் சுற்றி சுற்றி வருவோம். பெண்களை கிண்டல் செய்வோம். எங்கள் குரூப்பில் நாலைந்து பேர் காதல் வசப்பட்டனர். அவர்கள் காதலித்த பெண்கள் முழு ஒத்துழைப்பு தந்தார்கள். சிலர் காதல் ஒரு தலை ராகமாக இருந்தது.

கணிதம் படித்த ரஞ்சனி மிகவும் அழகானவர். அவருக்கு “மயில்” என்ற பெயரை சூட்டினோம். ஆம். 16 வயதினிலே படம் வெளிவந்த பிறகு தான் புதுமுக வகுப்பு சேர்ந்தோம். எனக்கு ரஞ்சனி என்றால் ரொம்ப பிடிக்கும். எல்லோரும் அவரை “ மயில் ” என்றே கூப்பிட்டார்கள். நான் என் காதலை சொல்ல வெகு நாட்கள் எடுத்து கொண்டேன்.

நான் வீட்டில் சொல்லி விட்டேன்.

தினமும் அவளை பார்ப்பது தான் என் வேலை. வேறு சில பெண்கள் நண்பர்களாக இருந்தார்கள்.

மஞ்சு, கேத்தரின், மீனலோசனி, சித்ரா, ஆக்சிலியம், கீதாஞ்சலி என பட்டியல் நீளும்.

கல்லூரி சேர்ந்து 4 வருடங்கள் நொடி பொழுதில் போனது. அந்த வாழ்க்கை மறக்க முடியாத ஒன்று. நான் சிகரெட் படிக்க ஆரம்பித்தது கல்லூரி சேர்ந்த பிறகு தான்.

கல்லூரி இறுதி வந்தது. எல்லோருக்கும் மனவருத்தம்.

எங்கள் வகுப்பில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடந்தது.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எல்லோரும் (ஆண்கள்) அழுதார்கள். நானும் கிரிஸ்லியும் (ரமேஷின் நிக் நேம்) கட்டி பிடித்து அழுதோம். எல்லோருக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. பெண்களை பாட சொன்னோம்.

கீதாஞ்சலி புத்திசாலித்தனமாக “உன்னை ஒன்று கேட்பேன். உண்மை சொல்ல வேண்டும்... என்னை பாட சொன்னால்…” என்று பல்லவி மட்டுமே பாடினார். இங்கு அவரை பற்றி சொல்ல வேண்டும். அவர் மிகவும் புத்திசாலி. தைரியம் உள்ளவர். நெருங்கிய தோழி ரஞ்சனி தான். ரஞ்சனி கூச்ச சுபாவம் உடையவர். ஆனால் கீதாஞ்சலி அப்படி இல்லை.

எல்லாம் முடியும் நேரம். எல்லோருக்கும் மன வருத்தம் தான்.

ஆம்.

எந்த பிரச்னையும் இல்லாமல் ஜாலியாக வருடங்கள் ஒடிவிட்டன. அப்படி ஒரு வாழ்க்கை இனி பார்க்க முடியாது. அதனால் தான் கண்ணதாசன்…

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காணாமலே வந்த காதல்
college life

“பசுமை நிறைந்த நினைவுகளே… பாடி திரிந்த பறவைகள்… !” என்று கல்லூரி வாழ்க்கை பற்றி பாடினார்.

இப்போது அந்த பாடலை கேட்டாலும் எனக்கு கல்லூரி ஞாபகம் தான் வரும்.

ஆம்.

பசுமை நிறைந்த நினைவுகள்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com