சுந்தரத்தின் இறுதி முடிவு: ஒரு குடும்பத்தின் கண்ணீர்க் கதை!

Old man writing letter
Old man writing letter
Published on
mangayar malar strip

சுந்தரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாா். 

இரவு அனைவரும் தூங்கும்போது ஒரு பேப்பரை எடுத்து எழுதினாா். 

ஒருமணி நேரத்திற்கு மேலாக  எழுதவேண்டிய நிலை. எழுதி கவரில் போட்டு நன்கு ஒட்டினாா்.

காலையில் மறுமகள் மீனா அவள் அறையிலிருந்து வந்ததும் அவளைக் கூப்பிட்டு, "மீனா இந்தக்கவரை நீ பத்திரமாக வைத்துக்கொள். எனக்கு உடல் நலம் சரியில்லை. எந்த நேரமும் எதுவும் ஆகலாம். நீ இந்த கவரை பத்திரமாக வைத்துக்கொள் நான் இறந்த மறு நிமிடம் கவரைப்பிாி. அதன்படி ஆக வேண்டியதைப் பாா்," என்றாா்.

"அப்பா, என்னப்பா? ஏன் மனசைப்போட்டு அலட்டறீங்க? அம்மாவ எழுப்பி சொல்ல வா?" என்றாள். 

"அதெல்லாம் வேண்டாம். நீ யாாிடமும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் செஞ்சுகொடு," என்றதும், மனசு சங்கடத்துடன் "சரி" என சொல்லிவிட்டு, வாங்கிக்கொண்டாள்.

சுந்தரம் சொன்னபடியே அவர் மரணம் அரங்கேறியது. 

அனனைவரும் அழுதாா்கள்.

நீலா கதறினாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூடினாா்கள்.

தகவல் அறிந்து சுந்தரத்தின் பால்ய சிநேகிதர் சபேசன் வந்தாா்.

ஒத்த வயதுடையவர் அவசர ஏற்பாடுகளான சாமியானா, நாற்காலி ,பிரீசர் பாக்ஸ், போன்றவைகளுக்கு போன் செய்து விட்டு, மீனாவைப் பார்த்து, "அம்மாடி, உன்னோட மாமனாா் கொடுத்த தபாலை கொண்டு வா," என்றாா்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; பூஜைக்குரிய பூ!
Old man writing letter

மீனா முழித்தாள். "எனக்கு தொியும். சுந்தரம் என்கிட்ட சொல்லிட்டாா்," என கூறினாா் .

கடிதத்தை பிாித்தவுடன் சபேசன் அழுதாா். 

உடனே மயிலாடுதுறை 108க்கு போன் போட்டதோடு கடிதத்தில் இருந்த தஞ்சை மெடிக்கல் காலேஜ் டீனுக்கும் போன் செய்தாா். 

அதற்குள் லோக்கலில் ஆா்டர் செய்த பிரீசர் மற்றும் இதர வகைகள் வந்திறங்கின.

சபேசன் நீலாவைக் கூப்பிட்டு கடிதத்தின் விபரம் சொல்லியபடியே பிரேதத்தை இரண்டு போ் உதவியுடன் பாக்சில் வைத்தாா். 

கடிதத்தை மகன், மனைவி மற்றும் நீலாவிடம் படித்து விபரம் சொன்னாா். ரிட்டையர்மென்ட் பணத்தில மேல் மாடி வீடு கட்டினேன். அதில பணம் அதிகமாய் செலவு அதோடு கடந்த வருடம் எனக்கு  ஹாா்ட் பிராபளம் வந்ததில் பிரைவேட் மருத்துவ மனையில் எட்டு  லட்சம் போல செலவு. கடன் அதிகமாயிடுச்சு. அதனால என்னோட பையன் என்கிட்ட பேசறது இல்லை. கடன் அடைக்கனும். அதனால பாா்ட்டைமா ஏதாவது பிசினஸ் செய்து பணத்தை சம்பாதிச்சு கடனை அடைக்கச்சொன்னேன். அதை மகனும் , மருமகளும் ஒத்துக்கலை. 

நானு ரெண்டு வீடு கட்டினது தப்புதான். ரெண்டு வீடுமே உங்களுக்குத்தான். நீ ஒரே பையன். சொத்துக்கு வேறு வாாிசோ போட்டியோ கிடையாது. நானு வாங்கின கடனை நானே அடைக்கனும்னு சொல்லிட்டான். அவனுக்கு பக்கத்து டவுன்காலேஜ்ல கம்மி சம்பளத்தில வேலை . மீனாவோ உள்ளூா் பள்ளிக்கூடத்தில தற்காலிகமா டீச்சர் வேலை. சம்பளம் குறைவுதான். ஆனா ரெண்டு பேருமே வருமானம் அதிகமா தேடி கடன் அடைக்க ஒத்துக்கலை . அதனால என்னோட உடம்பை தஞ்சை மருத்துவ கல்லூாிக்கு தானமா எழுதி கொடுத்திட்டேன்   நீங்க எந்த செலவும் செய்ய வேண்டாம். நீங்க கடனாளியா ஆகவேண்டாம் .

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அனாதை அப்பா?
Old man writing letter

அதேநேரம் என்னோட பையன் எனக்கு கொள்ளி போட வேண்டாம். மேலும் என் பையனை கடனாளியா ஆக்க விரும்பலை. எனக்கு கருவூலகத்திலோ்ந்து ஐம்பதாயிரம் வரும் அதை சபேசன் ஏற்பாடு செஞ்சுடுவாா். நான் இறந்த அன்றைக்கு உாிய செலவை அவர் செய்வாா்.

பணம் வந்ததும் அவர் செலவு செஞ்ச பணத்தை எடுத்துக்கிட்டு மீதியை மனைவி நீலாகிட்ட கொடுப்பாா்.  எனக்காக நீங்க ரெண்டு பேரும் செலவு எதுவும் செய்ய வேண்டாம். 

பாசமிகுதியால லட்சக்கணக்குல செலவு செஞ்சு உங்க கல்யாணத்தை நடத்தினேன். உங்களுக்கு ஒரு செலவும் வக்கல. அப்படி இருந்தும் என்னோட வைத்திய செலவை நீங்க ஏத்துக்கல. அம்மாவுக்கு பேமிலி பென்சன் வரும். அதை வச்சு அவ கடனை அடைச்சிடுவா. நான் இறந்த பத்தாம் நாள் நான் அவபோ்ல வாங்கின ரெண்டு வீட்டையும் பையன் பேருக்கு எழுதி வச்சிடு அவ முதியோர் இல்லத்துக்கு போய்விடுவாள். அவளுக்கும் ஹோம்ல சொல்லிட்டேன்," என கடிதத்தை முடித்து விட்டாா்.

இதையும் படியுங்கள்:
MOTIVATION STORIES : திருப்தியான வாழ்க்கையே வெற்றிகரமான வாழ்க்கை! எப்படி சார்?
Old man writing letter

சுந்தரமும், நீலாவும் ஆதர்ஷ தம்பதிகள் . நாற்பத்தி ஆறு வருஷ வாழ்க்கை அவளால் பிாிவை தாங்க முடியாமல் அழுதாள். தஞ்சை டீன் சொல்லியபடி மயிலாடுதுறை ஜி எச் லிருந்து ஆம்புலன்ஸ் வந்தது  கையொப்பம் வாங்கிக்கொண்டு பிரேதத்தை எடுத்துச்சென்றாா்கள் .

சபேசன் முகத்தில் சோக ரேகையோடு நண்பனை வழி அனுப்பினாா்.

மகனும் மருமகளும் செய்வதறியாது விழித்தனா் .  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com