
மகேஷ் வேக வேகமாக மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான்.
அவன் அம்மா, தன் அக்காவின் பிரசவத்திற்காக மும்பை சென்றிருக்கிறாள். முனியம்மா தான் எல்லாவற்றையும் பார்த்து கொள்கிறாள்.
முனியம்மா ஓடி வந்து "தம்பி....டிபன் ரெடி...சாப்பிட்டு போங்க...".
மகேஷ், டிபனை சாப்பிட்டு விட்டு அவசர அவசரமாக ஸ்டார்ட் ஆகாத பைக்கை எப்படியோ ஸ்டார்ட் செய்து பைக்கில் ஏறி சென்று விட்டான்.
நுழையும் போதே GM, "என்னப்பா மீட்டிங்க்கு எல்லாம் ரெடியா?" என்று கேட்டார்.
"Yes sir," என்று சொல்லி விட்டு Files ஐ எல்லாம் எடுத்து கொண்டு மீட்டிங் அறைக்கு சென்று உட்கார்ந்தான்.
எதிரில் சீதா மாம்பழக் கலரில் சிகப்பு மிளகாய்ப்பழ பார்டரில் புடவை அணிந்திருந்தாள். தலையில் மல்லிகைப் பூ..
சீதா MD ன் PA, இப்போது தான் ஒரு மாதத்திற்கு முன்னால் join பண்ணினாள்.
மீட்டிங்கில் டிஸ்கஷன் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
ஆனால் மகேஷிற்கோ.. “உன்னை பார்த்த பின்பு” என்ற பாட்டு மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
மீட்டிங் முடிந்து vice president sir, மகேஷிடம், "is it ok for u?" என்று கேட்க, மகேஷோ "yes sir, yes sir" என்று கூறி விட்டான்.
மாலை வீட்டிற்கு செல்வதற்காக ஸ்டார்ட் ஆகாத பைக்கை மறுபடியும் காலால் ஜோராக அடித்து கொண்டிருந்தான் .
பின்னாலிருந்து சீதா, "நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டமா?" என்றாள்.
"இல்லைங்க..." என்று மழுப்பினான். பைக் ஒரு வழியாக ஸ்டார்ட் ஆகி கிளம்பினான்.
அன்று இரவு முழுவதும் சீதாவின் ஞாபகமாகவே இருந்தான்.
மறுநாள் எழுந்து குளித்து விட்டு துண்டோடு, என்னவளே பாட்டை பாடிக் கொண்டே தலையை கோதினான். அலமாரியில் ஒரு ஷர்ட்டை தேடிக் கொண்டே இருந்தான். அவன் மாமா வாங்கி கொடுத்த ஷர்ட், ஒரு வழியாக தேடி அதை அணிந்து கொண்டிருந்தான். அதற்குள் அப்பா வந்து, "என்னடா? மணி ஆயிடுத்து கிளம்பல?" என்று கேட்டார்.
"என்னடா? இந்த ஷர்ட் கலர் தான் உனக்கு பிடிக்காதே... இன்னிக்கு என்ன திடீருனு போட்டிருக்க...?"
"சும்மா தான் பா..."
"சரி சரி, சீக்கிரம் வா, டிபன் ரெடியா இருக்கு" என்று சொல்லி விட்டு அப்பா கீழே சென்று விட்டார்.
மகேஷும் பின்னாலேயே சென்றான்.
"இன்னிக்கு உங்க அம்மா வர்றா.."
"ஓ, மறந்தே போயிட்டேன் பா, எத்தனை மணிக்கு flight land ஆகும்?"
"4 மணிக்கு land, வீட்டுக்கு வர 6 மணி ஆயிடும்."
"சரி ப்பா..நான் வரேன்..அம்மா வந்தவுடனே ஒரு மெஸெஜ் போடுங்க..."
"Ok bye."
"அப்பா நான் இன்னிக்கு ஆட்டோல தான் போறேன், பைக் மக்கர் பண்றது" என்று கூறி விட்டு ஆட்டோ பிடித்து ஆபீஸிற்கு சென்றான்.
ஆபீஸில் நுழைந்தது முதல் சீதா அவன் கண்ணில் படவே இல்லை.
மகேஷ் canteen போவதற்காக வெளியே வந்தான். அப்போது தான் அவளை பார்த்தான்.
"என்ன மகேஷ், இன்னிக்கு different colour ல ஷர்ட் போட்டிருங்கீங்க..?
(மகேஷ் தனக்கு தானே மனதில் உனக்கு பிடிக்கும் என்று நினைச்சுதானே போட்டேன், என்று சொல்லி கொண்டான்)
"எனக்கு அத்தனை பிடிக்காதுங்க.. Actually எங்க அம்மாக்கு பிடிக்கும், அதனால தான் போட்டேன்," என்று வழிந்தான்.
அவள் மனதிற்குள், "ஏண்டா, லவ் பண்றன்னா, ப்ரங்க்கா வாயை திறந்து சொல்லாம இழுத்தா அடிக்கற.. .நேத்திக்கு நான் yellow போட்டேன்னு தானே இன்னிக்கு நீ இந்த கலர்ல போட்ட? இரு, ஒரு வழி பண்றேன்" என்று சொல்லிக் கொண்டு சிரித்தாள்.
அவளை தன்னுடன் சாப்பிட அழைத்தான். அவள் முடியாது என்று கூறவே மகேஷ் வேறு வழியில்லாமல் தனியாக போய் சாப்பிட்டான்.
இரவு வீட்டிற்கு போனவுடன்,
"அம்மா! அம்மா"
"டேய், மகேஷ்"
"அம்மா, i love u" என்று கட்டி பிடித்தான்.
அப்படியே அம்மாவிடம் இரவு முழுவதும் ஒரு மாத கதை எல்லாம் பேசிக் கொண்டிருநதான்.
மறுநாள் as usual office, அதே ட்ராமா, சீதாவை மறைமுகமாக பார்க்கிறது, பேச நினைப்பான், ஆனால் சொல்ல முடியாமல் விழுங்கி விடுவான்..
இப்படியே போய்க் கொண்டிருந்தது. தீடிரென சீதா ஒரு வாரமாக வர வில்லை.
ஃபோன் செய்தால் switch off..
HR dept-ல் கேட்ட போது she is on emergency leave என்று சொல்லிவிட்டார்கள்.
இது போறாது என்று மகேஷை ஆபீஸில் ஒரு projectகாக தீடிரென Denmark போகுமாறு வற்புறுத்தினார்கள்.
வேறு வழியில்லாமல் கிளம்பி விட்டான். டென்மார்க்கில் இரண்டு மாதம் இருக்க வேண்டும்.
Denmark போய் சேர்ந்த ஒரு வாரம் கழித்து சீதாவின் call வந்தது.
"ஹலோ !! ஹலோ என்ன ஆச்சுங்க? Everything is ok na?
"பொறுமையா கேளு.. மகேஷ்.."
"எங்க அப்பாக்கு கிட்னி failure, உடனே ஆப்ரேஷன் பண்ண வேண்டி இருந்தது.."
"அய்யய்யோ..அப்புறம்.. ஆப்ரேஷன் ஆயிடுத்தா?"
"Yes, ஆப்ரேஷன் ஆயாச்சு. அப்பாவும் ஓகே.. அப்பாக்கு என் கிட்னி perfect ஆ மேட்ச் ஆச்சு. நான் தான் donate பண்ணினேன். So நானும் 20 days bed rest.."
"What? கிட்னி நீங்க கொடுத்தீங்களா?"
"Yes, ஏன் நான் என் அப்பாக்கு கிட்னி donate பண்ணினா, நீ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?"
"என்ன? என்ன சொன்னீங்க? சரியா கேக்கல.."
மறுபடியும் சொன்னதையே சொல்லி சத்தமாக கேட்டாள்.
"வ...வ...வந்து..."
"என்ன பேச்சே இல்ல?"
"எத்தனை வாட்டி சொல்ல வந்தட்டு சொல்லாம பயந்து போயிட்ட... இப்ப தான் தூரத்தில இருக்கயே! இப்ப கூட சொல்ல பயமா இருக்கா?"
"இல்லை...எ...எ..எனக்கு ஒரு பயமும் இல்லை... ஒரு நிமிஷம் இருங்க..." என்று சொல்லி காலை கட் செய்து விட்டு வீடியோ கால் செய்தான்.
"ஹலோ ...நான் ஒன்னும் பயந்தாகொள்ளி இல்லீங்க.... இதோ பாருங்க, நீங்க எத்தனை கிட்டக்க என் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கீங்க... பாருங்க..பாருங்க.. இப்ப நீங்க எனக்கு பக்கத்தில தான் இருக்கீங்க... I......love...uங்க" என்றான்.
சீதா சிரித்து கொண்டே, "ஓகே சார், நீங்க ரொம்ப தைரியசாலி தான்... டென்மார்க்கிலிருந்து திரும்பி வந்த உடனே எங்க அப்பா கிட்ட போய் பேசுங்க.. but ஒரு கண்டிஷன்.. வீடியோ கால் இல்லை.. direct ஆ வீட்டுக்கு வந்து பேசுங்க..." என்று சொல்லிவிட்டு காலை கட் செய்து விட்டாள்.