பக்திக்குரிய மாதமான கார்த்திகை மாதம் சிறப்புகள்!

 Devotional Month of Karthikai!
karthigai deepamImage credit - freepik.com
Published on

கார்த்திகை மாதம் என்றாலே தீபங்களின் மாதம் என்று சொன்னால் அது மிகையாகாது.

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

 சித்ர தீபம்: 

வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக்கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.

 மாலா தீபம்: 

அடுக்கடுக்கான தீபத் தட்டுகனில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
விண்வெளிக்குச் சென்ற நூறாவது பெண்மணி!
 Devotional Month of Karthikai!

ஆகாச தீபம்: 

வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

ஜல தீபம்:

தீபத்தை எற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்

படகு தீபம்: 

கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும்.

சர்வ தீபம்: 

வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.

மோட்ச தீபம்: 

முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.

சர்வாலய தீபம்: 

கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

அகண்ட தீபம்

மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
திருமாலுக்கே மாமனார் ஆனவர்!
 Devotional Month of Karthikai!

லட்ச தீபம்: 

ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.

மாவிளக்கு தீபம்: 

அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com