சிறுகதை: காதலும் கடந்து போகும்!

ஒருதலைக் காதல் தோல்வியில் இருந்து மீண்டு, வாழ்க்கையைத் தைரியமாக எதிர்கொள்ளும் வெற்றிவேலின் கதை.
தமிழ் கதை | A man with love birds and his mother stands
தமிழ் கதை | A man with love birds and his mother standsAI Image
செ.ஹரிஷ்

வணக்கம், என் பெயர் செ.ஹரிஷ். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.இராமலிங்கபுரம் என்ற கிராமமே எனது ஊர். சிறுவயதிலிருந்தே எனக்கு எழுத்தார்வம் நன்றாக வந்தன. அதனால் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இப்போது எனக்கு வயது 19, கட்டுரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ் என்று எழுத தொடங்கியுள்ளேன். ஒரு சில சிறுகதை போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் எனது படைப்புகள் கல்கி இணையதளத்தின் மூலம் மக்களிடம் சென்றடைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியை கல்கி குழுமத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துப் பணி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தொடரும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்!

Updated on
MM strip
MM strip

நேரமாகியும் எழுந்திருக்கவில்லை; நேற்று நடந்த அந்த நிகழ்வு மனதை ஆழமாக பாதித்திருந்தது. இருந்தும் அப்படியொரு ஆழ்ந்த தூக்கத்தில் இலயித்திருந்தான் வெற்றிவேல். படுத்ததே விடியற்காலை 3:00 மணி போல் தான்.

“வெற்றி எந்திரிக்கலையா மணிய பாரு ஒன்பதே கால் ஆச்சு!” அடுப்படியில் சமையல் வேலைகளை பார்த்தபடி எழுப்பினாள் அம்மாவான ஜெயந்தி.

கண்ணை லேசாக திறந்தான், 'கடவுளே எல்லா மக்களும் நல்லா இருக்கணும்.. நானும் நல்லா இருக்கணும்..!' என்று மனதில் நினைத்தபடி படுக்கையை விட்டு எழுந்தான். உடம்போ அடித்துப் போட்டது போல் மந்தமாக இருந்தது.

அப்பா சொல்வதையும், செய்வதையும் பார்த்து பார்த்து வெற்றிக்கு சிறுவயதில் இருந்தே காலையில் எழும்போது, கடவுளே எல்லாரும் நல்லா இருக்கணும் என்று வேண்டிக் கொள்ளும் பழக்கம் ஒட்டிக்கொண்டது.

கொல்லைப்புற வாசலில் அமைதியாக வந்து உட்கார்ந்தான். கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்திருந்தது.

குளியல் அறைக்குள் சென்று தழும்ப.. தழும்ப.. தண்ணீர் இருந்த அண்டாவிற்குள் முகத்தை முக்கி கண்களை விழித்தான். அந்த குளிர்ந்த நீர் கண்களை மட்டும் தான் குளிர்ச்சியாக்கின; ஆனால் மனதின் வெப்பத்தை தணிக்கவில்லை.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com