

நிரஞ்சனும் சாந்தாவும் உதாரண தம்பதிகள் போலத்தான் வாழ்ந்தார்கள். குழந்தைகளுக்கு விட்டுக் கொடுத்தலையும் அன்பையும் பண்பாட்டையும் சொல்லிக் கொடுத்துதான் வளர்த்தார்கள். நன்றாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கை யார் கண் பட்டதோ தெரியவில்லை சிதைந்து சீரழியத் தொடங்கிவிட்டது.
நிரஞ்சனுக்கும் சாந்தாவுக்கும் இடையே வாக்குவாதம் நடக்காத நாள் அபூர்வமானது. சின்னச் சின்ன விஷயங்களில், உப்பு பெறாத காரணங்களில் இருவரும் மோதிக் கொண்டார்கள். அவள் போடற டிரஸ், சமைக்கிற சமையல், அவள் பழகும் நட்பு வட்டம் இப்படி எல்லாமே அவனுக்குத் திருப்தியாக இல்லைன்னு அவன் கத்தறதும்,
“உனக்குப் பிடிச்சமாதிரியே நடந்துக்க நான் ஒண்ணும், ஒண்ணும் இல்லாதவ இல்லை. படிச்சிருக்கேன் கைநிறைய சம்பாதிக்கறேன் ஆஃபீஸுக்கு வந்து பாரு என் அருமை தெரியும். எத்தனை பேர் என் முன்னாடி கை கட்டி நிக்கறாங்க, என் திறமையைப் பார்த்து வாய் பிளந்து நிக்கறாங்கன்னு தெரியும். உன் ஃபிரண்ட்ஸைக்கூடத்தான் எனக்குப் பிடிக்கலை ஒவ்வொருத்தன் மூஞ்சியைப் பார்த்தாலே கஞ்சா அடிக்கிறவன் மாதிரியும், போலீஸ் தேடிட்டிருக்கற குற்றவாளி மூஞ்சிங்க மாதிரியும் இருக்கு. நீ அவங்களோட பழகறது எனக்குப் பிடிக்கலை. சரி நீ எக்கேடு கெட்டு ஒழி அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வர வேலையெல்லாம் வச்சுக்காதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். கொஞ்சமாச்சும் மதிக்கிறியா நீ” என அவளும் பதிலுக்குக் கத்த,