மினி தொடர்: மழைச்சாரலில் ஒரு பூங்குருவி... அத்தியாயம் 1

மழை நாளும் பறவையும் கொண்டுவந்த நினைவுகளுடன், பாசத்தின் ஆழத்தை விவரிக்கும் ஒரு அற்புதமான தமிழ் சிறுகதை
Tamil Mini series - Mazhaicharalil  Oru Poonguruvi
Tamil Mini series - Mazhaicharalil Oru Poonguruvi Image credit: Gemini AI
பவானி உமாசங்கர்

இலக்கியம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி என்பர். அதன் படி என்னுடைய படைப்புகளில் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை பற்றி அதிகமாக எழுத விருப்பம். நான் ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த பத்து வருடங்களாக பத்திரிகைகளுக்கு என்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறேன். இதுவரை 150 சிறுகதைகள் எழுதி உள்ளேன். இரண்டு நாவல்கள் எழுதி உள்ளேன். சிறார்களுக்காக நல்வழி கதைகள் புராணக் கதைகள் எழுதி வாசித்து சமூக ஊடகமான Spotify யில் வெளியிட்டுள்ளேன். பள்ளியில் கல்வியோடு வாழ்க்கை பாடத்தை கதை வடிவில் கற்பிப்பது என் வழக்கம்.

Updated on: 
MM strip
MM strip

மினி தொடர்: மழைச்சாரலில் ஒரு பூங்குருவி... அத்தியாயம் 1

இரவு முழுவதும் அடித்துப் பெய்த மழை ஓய்ந்தாலும் இன்னும் தூவானம் விடவில்லை. பூந்துறலாக பூமியை நனைத்துக்கொண்டிருந்தது. எப்போதுமே பெருமழையைவிட இந்த ஊசி தூரலும் அதைத் தொடர்ந்து மேனியை சிலிர்க்க வைக்க வரும் குளிர் காற்றும் சாரதாவுக்கு பிடிக்கும்.

வழக்கம்போல் அன்றும் காலை சீக்கிரம் எழுந்தவள் பில்டர் காப்பியைக் கலந்து எடுத்துக்கொண்டு டைனிங் டேபிள் அருகே வந்து நாற்காலியில் அமர்ந்தாள். ஜன்னல் வழியாக அவள் வீட்டின் முன்புறமுள்ள தோட்டத்தைப் பார்த்தாள். குளித்து முடித்த குழந்தைகள் தலையைத் துவட்ட காத்திருப்பதுபோல் பூச்செடிகள் நின்றுகொண்டிருந்தன.

அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு சிறு பூங்குருவி இறகெல்லாம் நனைந்து குளிரில் நடுங்கியவாறு அந்த ஜன்னலின் திட்டில் வந்த அமர்ந்தது. அந்தக் குருவியை பார்த்ததும் எதனாலோ சாரதாவுக்கு ருக்மணி மாமியின் நினைப்பு வந்தது. இதுபோன்ற ஒரு மழை நாளில்தான் மாமியும் அவள் வீட்டுக்கு வந்தார். சாரதா அப்போது எட்டு வயது சிறுமி.

Loading content, please wait...