கவிதைகள் 2: கடவுளின் கடைசிப் பயணச் சீட்டு!

கவிதைகள் 2: 1. கடவுளின் கடைசிப் பயணச் சீட்டு! 2. முன்பதிவற்ற தொடர்வண்டியின் ஜன்னலோரம்!
கவிதை | A old man with ticket and a man sits in window seat
கவிதை | A old man with ticket and a man sits in window seatImage credit: Chatgpt
மகாலிங்கம் இரெத்தினவேலு

I am working as Lecturer in District Institute of Education and Training, Palayampatti, Virudhunagar District. I am regular contributor of Tamil Wikipedia. I also contributed to Tamil Quora. I am interested in Tamil Literature. I am eager to create short stories and poems in Tamil.

Updated on: 
MM strip
MM strip

கவிதை: 1: கடவுளின் கடைசிப் பயணச் சீட்டு:

கவிதை | Old man with tickets
கவிதை | Old man with ticketsImage credit: Chatgpt

இனியொரு முறை வர மாட்டார்

என்றே நினைக்கிறேன்.

அவரது கடைசிப் பயணச்சீட்டைக்கூட

தொலைத்திருப்பார்.

நேரில் வருவதை விட

ஓ. டி. டியிலோ, கூகுள் மீட்டிலோ

வந்திருந்தால் கூட

அதிகம் பேர் பார்த்திருப்பர்.

தொழுதிருப்பர். வேண்டியிருப்பர்.

நேரில் வந்த போதோ

நின்று பார்க்க ஆளில்லை.

ஏனென்று கேட்க யாருமில்லை.

கிரீடமோ, சூலமோ, சிலுவையோ, தொப்பியோ

இன்றி வந்தது கடவுளென்று யாரறிவர்?

சொமோட்டோவிலோ, ஸ்விக்கியிலோ

ஆன்மீகத்தை ஆர்டர் பண்ணிவிட்டுக்

காத்திருக்கத் தயாராயிருக்கும் உங்களிடம்

இனி அவர் வருவதை விரும்ப மாட்டார் தானே!

கவிதை 2: முன்பதிவற்ற தொடர்வண்டியின் ஜன்னலோரம்:

கவிதை | a man sits in a window seat
கவிதை | a man sits in a window seatImage credit: Chatgpt

எனக்கு நிழலாய் நகர்ந்திட்ட மேகம்

யுகபுருசனுக்கானதல்ல!

என் மீது சொரிந்திட்ட

குல்மொஹர் மரத்துப் பூக்கள்

நான் தேவகுமாரன் என்பதற்கானதல்ல!

என் தலைக்குப் பின்னால் மறையும்

அந்தி வானச் சூரியன்

எனக்கு மட்டுமானதல்ல!

நான் நடந்து வரும் போது பின்னணியில்

ஒலிக்கும் “தளபதி! தளபதி! எங்கள் தளபதி! தளபதி!”

என்ற பாடலும் எதேச்சையானது தான்!

கடற்கரையின் வெகு தொலைவில் நின்றிருந்தும்

என் கால் நனைத்துச் செல்லும் பேரலையும்

பொதுவானதாகத் தான் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கவிதை: எல்லாம் நீயே! எந்தன் உறவே!
கவிதை | A old man with ticket and a man sits in window seat

சுபமுகூர்த்த தினமொன்றில்

முன்பதிவு செய்யாத தொடர்வண்டியின்

ஜன்னலோரம் கிடைத்த இருக்கையைப் போன்று

வாழ்வில் எப்போதாவது நடக்கும்

தற்செயல் நல்வாய்ப்புகளை

இரசிக்குமளவிற்கு பிரக்ஞை

இருந்து விட்டால் போதும்!

வாழ்வு நமதாகிவிடும்.