தொடர்கதை: நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.... அத்தியாயம் 2

Cople watching TV | தொடர்கதை
Cople watching TV | தொடர்கதைAI Image

தமிழில் முதுகலை, ஆய்வியல் நெறிஞர் பட்டம் பெற்றவர். எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர், வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் தமிழ்க் கற்க விரும்புபவருக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆன்லைன் கதைத் தளத்தில் தொடர்கதைப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்.

Updated on
MM strip
MM strip

“உமா.. சூடா டீயும் , சாப்பிட எதாவதும் கொண்டு வா..”-

குரல் கேட்டு சமையல் அறையிலிருந்து வெளியே வந்த உமா.. "என்ன தீபன் சீக்கிரம் வந்துட்டீங்க ?" என்று கேட்டாள்.

“செம்ம தலை வலி .. வேலையும் எதுவும் பெருசா இல்ல, அதான் வீட்டுக்காவது போகலாமேன்னு வந்துட்டேன்.. சரி.. நான் டிரஸ் மாத்திட்டு வரேன்.. சூடா கொண்டு வா..” என்றபடி உள்ளே சென்றான் தீபன்.

உடை மாற்றி வெளியே வந்த தீபன் ஹால் சோபாவில் உட்கார்ந்து டிவியை ஆன் செய்தான்.. உமா காராபூந்தியும் டீயும் கொண்டு வந்து அவன் அருகில் உட்கார்ந்தாள்.

டிவியில் ‘பூங்குயில் பாட்டு பிடிச்சுருக்கா.. பூங்காற்றே பிடிச்சுருக்கா’ பாடல் ஓடிக் கொண்டிருந்தது. உமாவுடன் பேசிக்கொண்டே டீ, காராபூந்தியை உள்ளே தள்ளியவனின் கை ஏதேச்சையாக சேனலை மாற்றியது.

“அண்மை செய்தி.. சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் முதல் மாடியிலிருந்து குதித்த மாணவன். தமிழ் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து குதித்ததாக தகவல். கால் எலும்பு முறிந்திருக்கிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று அவன் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com