தொடர்கதை: நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.... அத்தியாயம் 4

Teacher and Students | தொடர்கதை
Teacher and Students | தொடர்கதைAI Image

தமிழில் முதுகலை, ஆய்வியல் நெறிஞர் பட்டம் பெற்றவர். எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர், வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் தமிழ்க் கற்க விரும்புபவருக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆன்லைன் கதைத் தளத்தில் தொடர்கதைப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்.

Updated on
MM strip
MM strip

“சாப்பிட்டாச்சு.. சரி ஆரம்பிக்கலாமா?” எத்தனை வீடியோ எதிர்பார்க்கிறோம்? எத்தனை வந்துருக்கு?” – கிரிஷ்

“2004 - +2 ஸ்டூடண்ட்ஸ் கண்ணதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 2010-10 th ஸ்டூடண்ட்ஸ் மீராபாய் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, 2015 - +2 ஸ்டூடண்ட்ஸ் கற்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி... இவங்கக் கிட்ட இருந்துதான் வரணும்.. இப்போதைக்கு கண்ணதாசன், மீராபாய் வந்தாச்சு.. பாப்போமா.. டி.வில கனெக்ட் பண்ணு.." என்று தன் மொபைலை கொடுக்க போகும் போது உமாவிடமிருந்து மெசேஜ் வந்தது..

“அடடா!.. தகவல் சொல்ல மறந்துட்டேனே.. ஒரு நிமிஷம் பா.." என்று சொல்லிவிட்டு வெளியில் சென்று அவளிடம் பேசி விட்டு வந்து கொடுத்தான்..

டி. வி யில் படம் தெரிய ஆரம்பித்தது. தொடர்ந்து பார்த்து முடித்தார்கள்.

“நம் வகுப்பில் நடந்தது தான் பெரும்பாலான விஷயங்கள். இதில் புதிய செய்தி என்பது, ‘டேவிட், கல்பனா’ காதல் விவகாரம் தான். அதை மட்டும் ரீவைன்ட் பண்ணி திரும்பப் போடு."

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com