தொடர்கதை: நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.... அத்தியாயம் 5

Students and Press | தொடர்கதை
Students and Press | தொடர்கதைAI Image
Updated on
MM strip
MM strip

காலை பரபரவென்று தயாரானார்கள். “கிரிஷ், சீதா வருவா இல்ல. கரிகாலன் கிளாஸ் ஸ்டூடண்ட் யாரையாவது கூட்டிண்டு வரேன்னு சொன்னாளா?" கேட்டான் தீபன்

“ஆமாடா , பத்து மணிக்கு வருவா.. யாரோ ஒரு பையன் அவங்க தெருவுலயே இருக்கானாம். அவனைக் கூட்டிண்டு வரேன்னு சொன்னா..” –கிரிஷ்.

“சரி சரி.. டேய் அருண்.. சேனல் ஆளுங்களோட தொடர்புல இருக்க இல்ல..”

“இருக்கேன் டா. 11 மணிக்கு ‘லைவ்’ விளம்பரம் ‘யு ட்யூப்’ ல வருதே பாக்கலையா?” -அருண்

“அதுக்கெல்லாம் நேரம் இல்லடா.. அது உன் பொறுப்பு.. வரவங்களை உக்கார வைக்க.. சாப்பிட ஏதாவது கொடுக்க எல்லாம் நான் ரெடி பண்றேன்.. சரி நாம முதல்ல தயாரா இருப்போம்..” – தீபன்

ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையைப் பிரித்துக் கொடுத்தான்.

9.30 மணிக்கு மாணவர்கள் வரத் தொடங்கினார்கள். வருபவர்களிடம் தங்களது திட்டத்தைப் புரிய வைத்து அமரவைத்தான் சரவணன். பத்து மணிக்கு சீதா தன்னுடன் ஒரு பையனை அழைத்து வந்தாள். கூடவே ஒரு பெண்மணியும் வந்தாள். அவன் அம்மா என்று அறிமுகப்படுத்தினார்கள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com