தொடர்கதை: நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.... அத்தியாயம் 6

Teacher and Students | தொடர்கதை
Teacher and Students | தொடர்கதைAI Image

தமிழில் முதுகலை, ஆய்வியல் நெறிஞர் பட்டம் பெற்றவர். எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர், வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் தமிழ்க் கற்க விரும்புபவருக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆன்லைன் கதைத் தளத்தில் தொடர்கதைப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்.

Updated on
MM strip
MM strip

முன்னால் மாணவர்கள், மற்றும் தன் குடும்பத்துடன் வீட்டுக்குள் நுழைந்த கயல்விழியிடம்.. “நீங்கள் முகம் கழுவி வேறு உடை உடுத்தி மாலை 4 மணிக்கு தயாராக இருக்க வேண்டும் மேடம் .. ‘யு ட்யூப் சேனல்’ உங்களை பேட்டி எடுக்க வருகிறது என்று சொன்னான் அருண்.

“எதற்கப்பா அதெல்லாம்?” என்று கேட்டாள்.

“காலை மாணவர்கள் பேட்டியை எத்தனை பேர் பார்த்து இருக்கிறார்கள் தெரியுமா? என்னென்ன கமெண்ட்ஸ் தெரியுமா?அப்புறம் பொறுமையா பாருங்க..’அந்த ஆசிரியரைப் பேசச் சொல்லுங்கள் என்று அத்தனை பெரும் கமெண்ட் போட்டு இருக்காங்க மேடம்.. பிளீஸ் .. உங்கள் பேட்டியுடன் முடிந்தால் தான் நிறைவாக இருக்கும்” என்று சொன்னான்.

“சரி.. இனி நான் என்ன சொல்ல?.. உங்கள் இஷ்டம்..ஆனால் உங்களை எல்லாம் மாணவர்களாகப் பெற்றது நான் செய்த போன ஜென்ம புண்ணியம்.. என் மானத்தை எப்படி காப்பாற்றி இருக்கிறீர்கள் தெரியுமா? அதை வார்த்தையால் விளக்க முடியாது," என்று கண்ணீர் விட்டாள்..

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com