

”எதை கண்டு அப்பா இப்படி பயப்படறார்?” வைஷாலி யோசனையில் ஆழத்தில் திணற, அப்பா மதி என்கிற ஆபீஸர்... சோஃபாவின் ஓரத்தில் கால்களை மடக்கி கைகளின் ஊடே விட்டு உட்கார்திருந்தார்.
இன்று கேட்டே தீருவது என்ற முடிவுடன் “அப்பா என்ன யோசனை? ஏதாவது ப்ராப்ளமா?’ என்று அன்பாய் கேட்க
‘அப்பா பதில் சொல்லவில்லை’
‘’கிட்டே போய் உங்களைத்தான்’’ என்று தோளைப்பிடித்து ஆட்டினாள்.
‘உம்.. என்ன கூப்பிட்டியா?’ என்று கேட்க
"நார்மலாத்தானே இருக்கீங்க?” கருணை பொங்க கேட்டாள்’
“ஆமாம். ஏன் கேட்கிறே?"
“இல்லை. பாத்தா அப்படி தெரியலை”.
“நார்மல் பாரேன் டிவியில் பழைய பாட்டுக்கள் கேட்டு்க்கி்ட்டு”
“டிவி நாலு நாளாய் ரிப்பேர்.. என்னமோ மறைக்கறீங்க.. உங்க பெண்ணுக்கு தெரியக்கூடாதா?" அன்பு வழிய கேட்டாள்
"எது? இல்லாததையும் பொல்லாததையும் பேசிக்கி்ட்டு?"
"நீங்க சொல்ல மாட்டீங்க.. நான் வெளியாள்." என்று எழுந்தவளை "ஏய் ஆபீஸுக்கு போகலையா? லேட்டாயிடச்சே"
"டிட்டோ. அதே கேள்வி உங்களுக்கு. நீங்க போகலே.?"
‘‘ஒரு கேள்வி கேட்டால் எதிர் கேள்வி கேட்கறே?"
"எனக்கு வேற ப்ராஞ்சில் வேலை. லேட்டா போகலாம்"
‘‘நான் இன்று லீவு"
"மூன்று நாட்களாய் போகலையாமே. அம்மா சொன்னாங்க"
"ஆமாம். லீவு நிறைய இருக்கு."
"வெட்டியா லீவு போடற ஆளில்லையே. ஏதோ மர்மமிருக்கு கண்டு பிடிக்கறேன்” என்றபடி சந்தேகப்பார்வையோடு நகர்ந்தாள்!
2. “பெண் என்னமா குடையறா? அப்பாடா உடும்பு பிடி பிடிக்கறா.” என்ற மதி.. “காலையிலே இவ்வளவு தொந்தரவா?”
பெண் வைஷாலியை நினைத்தால்..... அவளுக்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்து விட்டேன்!. இவ கல்யாணத்துக்காக வர பணத்தை விடுவானேன் என்று முதன் முதலாய் ஆபிஸில் கை நீட்டி, மாட்டின கதை அவளுக்கு தெரிந்தால்? ஐயோ அதனால் தான் மனைவியிடம் கூட சொல்லவில்லை. மனைவிக்கு தெரிந்தால் ஊருக்கே தெரிஞ்சா மாதிரி சங்கு ஊதிடுவா.
‘போன மாதம் இதே தேதியில் என்ன நடந்தது?
வீடே சொந்தங்களாலும் நண்பர்களாலும் சந்தோஷ களேபரத்தில்
முரளிக்கும் வைஷாலிக்கும் ‘நிச்சயதார்த்தம்'
கல்யாணம் மாதிரி செலவு செய்தார்
மாப்பிளை முரளி நல்ல பெர்சனாலிடி நல்ல படிப்பு. அதை விட நல்ல அரசாங்க வேலை.
“கல்யாணம் எப்போ வைச்சு்க்கலாம்” என்று கேட்டதும், “தை மாதம்" என்று சொல்ல பிள்ளை வீட்டுக்காரர்கள், “ஒரு மாசம் தானிருக்கு முடியுமா? என்று கேட்க, “ஒரு மாதமிருக்கே.” என்றார் ஜம்பமாய்..
இப்போ எல்லாம் போச்சு?
எல்லாம் பேராசையால் வந்த வினை.
கொஞ்சம் பணமிருந்தால் மாப்பிளைக்கு கார் வாங்கித்தரலாமே என்ற நினைப்பில் இருந்தவனுக்கு இன்ஸ்டன்ட் உதவியாய் பழைய காண்ட்ராக்டர் கேசவன் வந்தார். அந்த ஆபீஸில் மால் வெட்டாமல் எந்த பில்லும். பாஸானதில்லை.
மதியைப்பார்த்து “நீங்களெல்லாம் லஞ்சம் வாங்க மாட்டீங்க” என்று நகர “கேசவன் வாங்க இந்த ஒருமுறை மட்டும் மால் வாங்கிக்கறேன்” என்று மதி சொல்ல “ஸார் நீங்களா.!? யோக்யன்னு நீங்க ஒருத்தர் மட்டுமாவது இந்த ஆபீஸில் இருக்கீங்கனு சந்தோஷப்பட்டேன். அதுவும் போச்சா? என்ன கஷ்ட காலமோ. இந்தாங்க” என்று நீட்ட கையில் 5 லட்சம் கவரில் போட்டு நீட்ட மதி கையில் வாங்கியதும் சரேலென பாய்ந்த.. லஞ்ச ஒழிப்பு ஆபீஸர்கள் கையும் களவுமாய் மதியை பிடிக்க ஆபீஸரில் ஒருத்தர் மாப்பிள்ளை முரளி.
மதியை முரளி முறைக்க, ”ஸார் நான் முதன் முதலாய்”..
“அதான் வாங்கிட்டீங்களே!” என்ற முரளி கண்கலங்கியபடி மதியை ஜீப்பில் ஏற்றினான்.
“இது என் ஃபேமிலிக்கு தெரிய வேணாம்” என்று மதி கெஞ்ச,
“எல்லா ஊடகங்களிலும் ப்ரேக்கிங் நியூஸா பரவும்”
“மானம் போச்சு மாப்பிளே” மதி அழ முரளி, தன் சொந்த ஜாமீனில் எடுத்து "வீட்டுக்கு போங்க. உங்களை சஸ்பென்ட் பண்ணியிருக்காங்க. நாளை முதல் வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்”
“இது தான் நடந்தது" என்று எப்படி சொல்வது. சொன்னால் அடிபட்ட கரப்பான் பூச்சி மாதிரியில்லே பார்ப்பாங்க நொந்து போயிடுவாங்க. முக்யமா கல்யாணம் நின்னு போகும். என்னை குற்றவாளி போலல்லவா ட்ரீட் பண்ணுவாங்க
நல்லவேலை ஊடங்களில் அமெரிக்க-ஈரான், போர் கிரிக்கெட் பற்றி அதிக செய்திகள் நடுவே மதியை பற்றிய விஷயம் ஒரு ஓரமாய் தான் வந்தது.
மாலையில் முரளியின் அப்பா வந்திருந்தார். வைஷாலியும் சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து வி்ட்டாள்.
கல்யாணத்தை பற்றி விபரமாய் பேசினார். சற்று நேரத்தில் முரளியும் வர மதி மனதில் பயம் பாம்பாய் நெளிந்தது. முரளியும் இன்விடேஷன் டிசைன பற்றி பேசினார்.
யாரும் மதி சஸ்பென்ஷன் ஆனது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. “ஸார்“ என்று மதி சோகமாய் ஆரம்பிக்க, "கேள்விப்பட்டோம் அதைப்பற்றி எங்களுக்கென்ன? ஒருத்தர் சங்கடத்தில் இருக்கும் போது அதைப்பற்றி பேசக்கூடாது. அது உங்க கேரியர். தவிர, நாங்க உங்களை கல்யாணம பண்ணிக்கலையே.
உங்க மகள் வைஷாலியை அல்லவா சம்பந்தம் பேசினோம். என்ன நடந்தாலும் கல்யாணம் நடக்கும். நீங்க ஜாமீனில் வெளியே வந்தது பற்றி பேச நாங்க வரலை” என்று உறுதியாய் சொல்ல, “பெரிய மனுஷன்னா பெரிய மனுஷன் தான்” என்ற மதி, “இந்த லஞ்சத்தை உங்களுக்கு கார் வாங்கித்தரனும் தான் வாங்கினேன் மாப்ளே” என்று மதி கூற, “எனக்கே லஞ்சமா”? என்று ஜோக்கடிக்க “அதை பற்றி பேச வேணாமே ப்ளீஸ்” எழுந்தார் முரளியின் அப்பா.
மதி நெகிழ்ந்து, “ரொம்ப நன்றி ஸார்“ என்று கைகூப்ப, “எதைப்பற்றியும் கவலைப்படாமல் கல்யாண வேலையை கவனியுங்க “என99.தோளில் தட்டி “அப்ப நாங்க வரோம்”.. விடை பெற்றார் முரளியின் அப்பா.