சிறுகதை: எது எப்படியோ? அது அப்படியே!!

கடுமையான வளர்ப்பை சாதனையாக மாற்றி இந்தியாவின் மருத்துவத் துறையில் புரட்சி செய்த ஒரு மாணவனின் சிறுகதை.
Dr Mukund and his innovation
Dr Mukund and his innovationImage credit: Gemini AI
Updated on
MM strip
MM strip

'எது எப்படியோ? அது அப்படியே!' இப்படியாக நினைத்துக்கொண்டு தன் நிலையை நொந்துகொண்டிருந்தான் முகுந்தன். நான் ஏன் இப்படி தைரியம் இல்லாமல் இருக்கிறேன்? இதற்கு யார் காரணம்? என் பெற்றோர்களா? என் வளர்ப்பு முறையா? என்னை மிகவும் கண்டிப்பாக நடத்தும் என் சகோதரர்களா? என்னையே எப்போதும் கண்காணிக்கும் என் அக்காக்களா?

இப்படி கடைசி பிள்ளையாகப் பிறந்து என் சுதந்திரத்தை இழந்து, நான் பிரியமுடன் பழகும் நண்பர்களுக்குக்கூட கட்டுப்பாடுகள் விதித்து...

'என்ன வாழ்க்கை' என்று நொந்துகொண்டு இருந்தான் +2 வில் மாநில அளவில் முதலாவதாக வந்த முகுந்தன்.

அவன் வீட்டிற்கு எல்லா செய்தி ஊடகங்களும் வந்து பேட்டி எடுப்பதும்; முதல்வர் மூலம் வாழ்த்து பெறுவதும்; பெற்றோர்களுடன் சேர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றிகளை தெரிவித்து எல்லோருக்கும் காரணம் தன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று கூறி வருவதுமாக இருந்தான் முகுந்தன்.

இப்படியாக ஒரு வாரம் சென்றது. NEET தேர்விலும் வெற்றி. அதன் பிறகு சென்னையில் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐந்தரை ஆண்டு காலம் மருத்துவம். பிறகு ஒரு ஆண்டு home surgeon தேர்ச்சி பெற்று கடைசியாக MS படிப்பதற்கு முயன்றுகொண்டிருந்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கற்பனை நெருப்பை அணைத்தவள்!
Dr Mukund and his innovation

இப்போது அவனிடம் ஒரு வைராக்கியம் வந்தது. இந்த முறை நாம் நம் சுதந்திரத்தை இழக்கக்கூடாது. அது வாழ்க்கையே அல்ல; என்பதை தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்டான்.

இந்த முறை தேர்ச்சி பெற்றவுடன் சென்னையில் இருந்து கவுன்சிலிங் இடம் கிடைத்தாலும் அதை மறுத்து புது டெல்லி செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அதற்கு அவன் கூறிய காரணம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது

"நான் இதுவரை உங்களுடைய செல்லப்பிள்ளையாக இருந்து குடும்பத்தினுடைய கட்டுப்பாட்டுக்கு இணங்கி உங்களுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்துவிட்டேன்.

இப்போது நான் என் பிறந்த நாடான இந்தியாவிற்கு ஏதாவது ஒரு விதத்தில் என்னுடைய ஆராய்ச்சி மூலமும் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலமும் சமுதாயத்திற்கு குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு என்னால் ஆன ஒரு மாற்று சிகிச்சை மற்றும் உபகரணங்களைக் கண்டுபிடிப்பதற்காக நான் எழுதிய கட்டுரைகள் மற்றும் முன்மொழிவுகள் Oxford பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது.

அதற்கு ஏதுவாக நான் இந்தியாவின் தலைநகரில் இருந்து மருத்துவம் பயில இருக்கிறேன். அப்போது நான் பல விஞ்ஞானிகளைச் சந்திக்க முடியும். என் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றவாறு AIMS மருத்துவமனையில் எனக்கு ஒரு chair அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது."

இவ்வாறாக முகுந்தன் சொன்னவுடன் குடும்பத்தினர் யாரும் எதுவும் சொல்லமுடியவில்லை!

சிறுகதை | Dr Mukund and his innovation
சிறுகதை | Dr Mukund and his innovationImage credit: Gemini AI

ஒப்புதல் பெற்றான்.

டெல்லி சென்றான். இரண்டு ஆண்டுகள் படித்தான். வெளிநாடு செல்லவில்லை.

AIMS உடன் சேர்ந்து தன் கண்டுபிடிப்புகளைச் செயலாக்கம் செய்தான்.

Citation from AIMS says... Dr MUKUNTH M S... His innovation is far reaching and far more rewarding... We have built a machine for MRI with 60% reduction in total outlay including installation. This means, it is affordable to poor and is made available to last man in the queue.

'பத்மஸ்ரீ' என்கிற பட்டம் அவனுக்குத் தேடி வந்தது.

பிரதமரிடம் இருந்து வாழ்த்தும் பெற்றான்.

அவன் இப்போது தைரியமாகச் சொல்கிறான்...

'என்னை வளர்த்தது, என்னை ஆளாக்கியது, மற்றும் நான் உருவானது இதற்கெல்லாம் காரணம் என் இதயத்தில் எழுந்த ஒரு எண்ணம்தான். அது பயத்தைத் தவிர்க்கச் சொன்னது. பயணத்தில் பாடம் கற்றுக்கொண்டேன். படிப்பைவிடப் பண்பாட்டை நன்கு உணர்ந்துகொண்டேன்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: எங்கே சென்றாய் கயல்விழி?
Dr Mukund and his innovation

பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி, கலாசாரம், பண்பாடு, இலக்கியம் எல்லாம் சமுதாயத்தின் உடைய ஒட்டுமொத்த கூறுகள். சமுதாயம் இல்லை என்றால் நான் இல்லை. என் பெற்றோர்களுக்கு வந்தனம்.

என் நாட்டிற்கு என் நன்றிகள். என் மக்களுக்கு என்னால் ஆன ஒரு சிறிய கண்டுபிடிப்பு...'

என்றும் உங்கள் முகுந்தன்.

... இப்படியாக ஒரு மின்னஞ்சல் அவன் வீட்டிற்கு வந்தது

வீட்டில் எல்லோரும் கொண்டாடினர். அவன் வரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com