

அந்தக் குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகள் எல்லோரும் கலகலவென சந்தோசமாக இருந்தார்கள்.
அன்னைத் தெரசா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு; குழந்தையர் காப்பதிலுள்ள குழந்தைகளுக்கு மட்டன் பிரியாணியைத் தன் கையால் சுடச்சுட பரிமாறினார், மரகதம்.
கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகளின் சிரிப்பைப் பார்த்து மரகதத்தின் கண்கள் ஈரமாகியது!
மகனான ஆதி அம்மாவின் கையைப் பிடித்து, “ம்மா.. கொழந்தைங்க சாப்பிட்டறத பாக்கும்போது, மனசுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்குல..!”
“ஆமா ஆதி, நம்மகிட்ட எவ்வளவு பணம் இருந்தாலும்.. இந்தச் சந்தோஷத்துக்கு ஈடு இணையேயில்லப்பா.!”
காப்பகத்தின் உரிமையாளர் மரகதத்தைப் பார்த்து, “அன்னதானத்தையும் தாண்டி, குழந்தைகளோட முன்னேற்றத்துக்காக இந்த ட்ரஸ்டுக்கு 50 லட்சம் நன்கொடையா கொடுத்திருக்கிறது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம்... நீங்களும், ஒங்க குடும்பமும் நல்லா இருக்கணும்மா..” என்று மனம் நிறைந்து மரகதத்தின் கைகளைப் பிடித்து வாழ்த்தினார்.
“இந்த மாதிரி குழந்தைங்க படிச்சு முன்னுக்கு வந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம். அதனால, என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவிதான் இது..!”