

ரகு இப்போது 3 வது படிக்கிறான். அவன் முதலாம் வகுப்பு படிக்கும் போது அவன் தாத்தா அவனோடு தான் இருந்தார். ரகுவின் அம்மாவும் வேலைக்கு செல்வதால் தாத்தாவை கவனிக்க முடிய வில்லை. இவர்கள் போரூரில் தான் இருந்தார்கள். பாட்டி இறந்து பல வருடங்கள் ஆகி விட்டன. எனவே தாத்தாவை திருவேற்காடில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள்.
ரகு எல்லோரும் ஒன்றாக இருக்கும் போது அப்பாவை கட்டாயமாக தாத்தவிற்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்க செய்தான்.
தாத்தவிற்கு இது புதுசு. ரகு தாத்தவிற்கு வாட்ஸ் அப் மூலம் எப்படி வாய்ஸ் மெயில் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுத்தான்.
அது முதல் தினமும் காலையில் ரகுவிற்கு தாத்தா “குட் மார்னிங் “ என்று வாய்ஸ் மெயில் அனுப்பினார்.
மாலையில், “ஸ்நேக்ஸ் சாப்பிட்டாயா டா..“ என்று மேசேஜ் அனுப்புவார்.
அதற்கு ரகுவும் பதிலாக “குட் மார்னிங்“ மற்றும் “ஸ்நேக்ஸ் சாப்பிட்டு விட்டேன். ஹார்லிக்ஸ் குடிச்சேன்“ என்று பதில் போடுவான்.
இது தாத்தா முதியோர் இல்லம் சென்ற பின்பும் தொடர்ந்தது.
சனிக்கிழமை.
மாலை ரகுவிற்கு வாய்ஸ் மெயில் வரவில்லை. ரகு மனம் வாடியது.
ஞாயிற்றுக்கிழமை.
காலை “குட் மார்னிங்“ மெசேஜ் வரவில்லை. மெசேஜ் டெலிட் செய்ய பட்டு இருந்தது. ரகு மூட் அவுட். இன்றே தாத்தாவை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தான்.
முதலில் மறுத்த அப்பா, அம்மா பிறகு ஒப்புக் கொண்டனர்.
ரகு அப்பா திருவேற்காடுக்கு கேப் (Cab) புக் செய்தார்.
தாத்தா மனம் சரியாக இல்லை.
தனக்கு என்று யாரும் இல்லையே என ஏங்கினார்.
தான் ரகுவிற்கு மெசேஜ் மூலம் தொந்தரவு கொடுக்கிறோமா என்று ஒரு குற்ற உணர்வு.
அதனால் வாய்ஸ் மெயிலை எப்படியோ டெலிட் செய்து விட்டார்.
மதியம் மூவரும் மாரியம்மனை பார்த்து விட்டு வணங்கி முதியோர் இல்லம் வந்தனர். ரகுவிற்கு மாரியம்மன் என்றால் ரொம்ப பிடிக்கும்.
முதியோர் இல்லம்.
ரகு “தாத்ஸ்“ என்று கத்திக் கொண்டே போய் அவரை கட்டி பிடித்தான்.
“என் அன்பே…!“ என்று தாத்ஸ் ரகுவை கட்டி பிடித்தார்.
எல்லோருக்கும் டீ வந்தது.
தாத்தா ஆரம்பித்தார்.
“கண்ணே..! இந்த தாத்தாவை பார்க்க வந்தாயா…? “
ரகு அழுதுகொண்டே "ஏன் எனக்கு மெசேஜ் அனுப்ப வில்லை…?" என்று கேட்டான்.
“ரகு கண்ணா… நான் உன்னை தொந்தரவு செய்கிறேனோ என்று நினைத்து தான் மெசேஜ் அனுப்ப வில்லை.“
தாத்தா மகன் மற்றும் மறுமகளை குசலம் விசாரித்தார்.
ரகு, “தாத்ஸ், யூடியூப்ல் என்ன பார்க்கிறீர்கள்…?“ என்று கேட்டான்.
"எப்படி Delete for everyone என்று பார்த்து கொண்டு இருந்தேன். நேற்று உனக்கு மெசேஜ் அனுப்பி விட்டு டெலிட் செய்ய முயற்சி செய்தேன். முடிய வில்லை. ஆனால் மொபைலில் நோண்டி கொண்டு இருந்த போது அது டெலிட் ஆகி விட்டது."
ரகு கேட்டான்; “தாத்ஸ்… ஏன் எனக்கு மெசேஜ் அனுப்பி விட்டு அதை டெலிட் செய்ய வேண்டும்…?"
ரகுவின் அப்பா மற்றும் அம்மா, ரகு-தாத்தா உரையாடலை கேட்டு கொண்டு இருந்தனர்.
தாத்ஸ் அழுது கொண்டே ரகுவை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார்.
ரகு உரத்த குரலில் “தாத்ஸ்…நீங்க எப்போதும் போல எனக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். அதை சொல்ல தான் அம்மா, அப்பாவை கூட்டி வந்தேன்.“
“சரிடா… !“ என்று தாத்தா சொன்னார். ரகுவை கட்டி அணைத்துக்கொண்டார்.
மெசேஜ்-யை டெலிட் செய்யலாம். ஆனால் பற்று, பாசம் எல்லாம் டெலிட் செய்ய முடியாது.
ஆம்… . பாசம்..
டெலிட்டே செய்ய முடியாதது..!