சிறுகதை: ஒற்றைப் பாகற்காயின் தவிப்பு!

சமைக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்து வீணாகும் ஒற்றைப் பாகற்காயின் தவிப்பு குறித்த சிறுகதை
சிறுகதை| A old woman and his daughter with Bitter gourd
சிறுகதை| A old woman and his daughter with Bitter gourdAI Image
Updated on
MM strip
MM strip

சங்கரி மற்றும் அவளுடைய மகள் சிவஸ்ரீ இருவரும் தங்களுடைய காட்டிற்குக் கிளம்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் கிளம்பும்போது காட்டில் இருக்கும் காய்கனிகளைப் பறிப்பதற்காக ஒரு சாக்குப்பையை எடுத்துக்கொண்டுச் சென்றார்கள்.

இருவரும் காட்டை அடைந்தபோது, “முதலில் காட்டில் களை எடுப்பு வேலையை முடித்தபின்பு, காய்கறிகளை இறுதியாக பறித்துக்கொண்டு வீட்டிற்குச் செல்லலாம்” என்று சிவ ஸ்ரீயின் தாய் கூறினார்.

அவர் கூறியபடியே சிவ ஸ்ரீயும் அவளது தாயும் காட்டில் களையெடுப்பு வேலையை செய்துகொண்டிருந்தார்கள்.

அவர்கள் ஒரு மணி வரை வேலை செய்துகொண்டிருந்தார்கள். பின் மாலை உணவைச் சாப்பிட்டுவிட்டு காட்டில் இருக்கும் காய்கறிகளைப் பறிக்கத் தொடங்கினார்கள்.

அப்பொழுது சிவ ஸ்ரீ ஒரு பாகற்காய் செடியில் ஒரே ஒரு பாகற்காய் மட்டும் இருப்பதைப் பார்த்து, அவளுடைய தாயிடம் கூறினான்.

சிவ ஸ்ரீயின் தாயாரும் “அந்தப் பாகற்காய் நல்ல வளர்ந்த நிலையில் இருந்தால் அதனைப் பறித்து விடு” என்றார்.

அவளும் அந்தப் பாகற்காயை பறித்து, சாக்கு பையில் போட்டு கட்டி வைத்தாள்.

இருவரும் காட்டில் தங்களுக்குத் தேவையான வளர்ந்த காய்கறிகளைப் பறித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினர்.

அவள் காட்டில் இருந்து பறித்த காய்கறிகள் அனைத்தையும் ஒரு காகிதப்பையில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தாள்.

சிறுகதை| Bitter gourd
சிறுகதை| Bitter gourdAI Image

அன்று சாயங்காலம் சமைப்பதற்காக காய்கறிகளை எடுத்தபோது அந்த ஒற்றைப் பாகற்காய் மட்டும் இருந்ததைப் பார்த்து ‘ஒரு பாகற்காயை எவ்வாறு சமைப்பது?’ என்று அவள் அதனை சமைக்காமல் ஃப்ரிட்ஜிலேயே விட்டுவிட்டாள்.

இரண்டு, மூன்று நாட்கள் ஆகின அந்தப் பாகற்காய் ஃப்ரிட்ஜிலேயே இருந்தது.

அப்பொழுது ஒரு நாள் சிவஸ்ரீயின் தாயிற்கு நினைவு வந்தது. “நாம் காட்டிலிருந்து பறித்து வந்த பாகற்காயை நீ சமைக்கவே இல்லையே? “

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இரு துருவங்கள்..!
சிறுகதை| A old woman and his daughter with Bitter gourd

அதற்கு சிவ ஸ்ரீ “அது ஒரு பாவற்காய் மட்டுமே இருந்தது அம்மா. ஒரு பாகற்காயை எவ்வாறு சமைப்பது! என்று நான் அதை சமைக்காமல் ஃப்ரிட்ஜிலேயே வைத்துவிட்டேன் அம்மா!”

இவ்வாறு ஒரு வாரம் கழிந்தது... அந்தப் பாகற்காய் அடுப்பங்கரையில் உள்ளே செல்லவே இல்லை.

ஃப்ரிட்ஜின் உள்ளே இருக்கும் அந்தப் பாகற்காயின் மனதில் தோன்றியது ‘என்னை ஏன் பறித்து வந்தார்கள்? நான் காட்டிலேயே இருந்தால் நன்கு பழுத்து என்னுடைய விதைகள் சிதறி, அதன் மூலம் பல பாகற்காய் செடிகளாக மாறி இருப்பேன்.

வளர்ந்த என்னை பறித்து வந்து உணவிற்கு பயன்படுத்தாமல் நான் வளர்ந்து வந்ததே உபயோகமற்றதாக மாறிவிட்டது’ என்று அந்தப் பாவற்காய் மனதில் எண்ணிக்கொண்டது.

நாட்கள் செல்லச்செல்ல அந்தப் பாகற்காய் ஃப்ரிட்ஜிலேயே பழுத்து உணவிற்கு உபயோகமில்லாமல் போனது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கடைசிக் கடிதம்!
சிறுகதை| A old woman and his daughter with Bitter gourd

இப்பொழுதுதான் சிவஸ்ரீயின் தாயார், "சமைக்கவில்லை என்றால் அந்த பாகற்காயை அப்படியே காற்றிலே விட்டுவிட்டு வந்தால் விதைக்காவது ஆகி இருக்கும்,” என்று சிவஸ்ரீயிடம் கூறினார்.

ஆனால், சிவஸ்ரீ, “அம்மா நான் அச்செடியில் மேலும் பாகற்காய்கள் இருக்கும் என்று எண்ணினேன்! ஆனால் இந்த ஒரு பாகற்காய் மட்டும் இருந்ததால் நான் அதை பறித்துக்கொண்டு வந்தேன். இன்று அதையும் சமைக்காமல் வேஸ்ட் ஆக்கிவிட்டேன்,” என்றாள்.

இவ்வாறு சமையலறையில் பல காய்கறிகள் ஒன்றே ஒன்று மற்றும் இருப்பதன் காரணமாக, அதனைச் சமையலில் பயன்படுத்தாமல் அப்படியே விடுகிறோம். அந்தக் காய்கறிகள் வளர்ந்து வந்ததே தேவையில்லாமல் வீணாகி விடுகிறது.

logo
Kalki Online
kalkionline.com