

வந்திருந்த ஜாதகங்களில் இது தான் கொஞ்சம் எதிர்பார்த்த அளவு இருந்தது. பையன் பெயர் ரமேஷ். எம்.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ், பெங்களூர் கம்பெனியில் மென் பொருள் பொறியாளன்.
பெங்களூர் மெயின் ஏரியாவில் சொந்த ஃப்ளாட் கோரமங்களாவில். கூடப் பிறந்தது ஒரு அக்கா. அமெரிக்காவில் செட்டில்டு. அம்மா அப்பா சென்னையில் சொந்த வீடு. அப்பா ரிடையர்டு வாத்தியார். எப்போதாவது பெங்களூர் போய் வருவார்கள். பிக்கல் பிடுங்கல் இல்லை.
மாலதியும் அவள் அம்மா சரசுவதியும் உட்கார்ந்து ஜாதகக் கட்டங்களை நன்கு ஆராய்ந்தார்கள்.
இப்போதெல்லாம் மணப்பெண்களும் அவள் தாயாரும் தான் இந்த ஜாதகப் பொருத்தம் மற்ற மாப்பிள்ளை விவரங்களை ஆராயறது. அப்பா என்பவர் சும்மா துணைக்கு வரும் ஒரு எஸ்கார்ட்.
அம்மா, “சரி மாலதி உன் கேள்விகள் லிஸ்ட்டை மெயில் பண்ணு அந்தப் பையன் ஈ மெயிலுக்கு.”
“அப்பா.. கொஸ்டினரி அனுப்பட்டா இந்த வரனுக்கு?"
“அம்மாவும் நீயும் எல்லாம் திருப்தியா செக் பண்ணிட்டங்க இல்லியா.. ஆதார் கார்டு சம்பள ஸ்லிப் ஒரிஜினல் படிப்பு உத்யோக ஆர்டர் எல்லாம் சரியா இருக்கா… வீடு அவன் பெயரில் இருக்கான்னு பத்திரம் காப்பி பார்த்திட்டீங்க இல்லையா..?”
“எல்லாம் சரியாத் தாங்க இருக்கு.”
“ஓகே அப்போ உன் கேள்விகள் லிஸ்ட்டை அனுப்பும்மா.”