Story ending contest - Man & woman
Story ending contest - Man & womanAI image

சிறுகதை (முடிவு) போட்டி: கதை இங்கே! முடிவு எங்கே?

அன்பு வாசகர்களே! உங்கள் திறமையை வெளிப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு!
Published on

சிறுகதைப் (முடிவு) போட்டி: கதை இங்கே..! முடிவு எங்கே..?

போட்டி நிபந்தனைகள்: 

1. கதையை முழுவதுமாக படித்து அதற்கு முடிவு எழுத வேண்டும்.

2. கதையின் முடிவை 100 வார்த்தைகளுக்குள் எழுத வேண்டும்.

3. கதைக்கு பொருத்தமான 'நச்' தலைப்பு கொடுக்க வேண்டும். தலைப்புக்கான வார்த்தைகள் கதையுடன் எண்ணப்படாது.

4. சிறந்த மற்றும் சமூக விழிப்புணர்வு தரும் முடிவு நமது கல்கி ஆன்லைன் தளத்தில் வெளியிடப்படும்!

கதை முடிவுகள் அனுப்ப கடைசி நாள்: 31/01/2026 

குறிப்பு: இந்த போட்டி நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இதில் ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது.

Mangayar malar strip
Mangayar malar strip

விடியற்காலை மணி ஐந்தரை. "மீனா மீனா…" அப்பா எழுப்பினார்.

"என்னப்பா இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஒரு நாள்தானே லீவு. கொஞ்சம் தூங்க விடுங்கப்பா," என்றாள் மீனா.

"சாரிம்மா. ஏழு மணிக்கு உன்னை பெண் பார்க்க வர்றாங்கம்மா," என்றார் அப்பா.

"என்னப்பா! பெரிய குண்டைத் தூக்கி போடறீங்க?"

"ஆமாம்மா. பையன் சௌதியில வேலை செய்யறாரு. இன்னிக்கு ஃப்ளைட் சரியா பதினோறு மணிக்கும்மா. அவரு உன்னை பார்த்து அப்படியே பிடித்திருந்தா பாக்கு வெற்றிலை மாற்றிடுவாங்களாம். தம்பிக்கு விமான நிலையத்துல சரியா ஒன்பது மணிக்கு இருக்கனுமாம். அதனால ஏழு மணிக்கு பெண் பார்க்கிற நிகழ்வை வெக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினாங்க. நானும் சரின்னு சொல்லிட்டேன். உன் கஷ்டம் எனக்கு தெரியும். ஞாயிறு ஒரு நாள்தான் அலுவலகம் விடுமுறை. வேறு வழியில்லம்மா. தயவு செய்து எழுந்து தயாராயிடும்மா. அம்மா ரெடியாயிட்டாங்க..."

அவன் வந்தான்; கூட, அவன் பெற்றோர்கள் மட்டுமே வந்தனர். அவன் பார்த்தான். பிடித்திருக்கிறது என்றான்.

உடன் அவனுக்கு இனிப்பு கேசரியும் பஜ்ஜியும் கொடுக்கப்பட்டது. "அய்யோ! இங்கேயும் இதேதானா?" அவன் பேச்சின் முதல் குறையை கண்டு கொண்டாள் மீனா. பெரியவர்கள் பேசிக்கொண்டனர். பையனுக்கு பெண் பிடித்து விட்டதாக அவன் பெற்றோர்கள் கூறினர்.

மீனா அவனை அழைத்தாள். தனியாக பேச வேண்டும், என்றாள். அவனும் பெற்றோர்கள் சம்மதத்துடன் வந்தான்.

"ஏன் மிஸ்டர்...?" என்று இழுத்தாள் மீனா.

"நான் மதன்," என்றான் அவன் உடனே.

"ம்ம்... சாரி. ஏன் மதன், இப்போ எங்க ஒர்க் செய்யறீங்க?"

"சௌதி."

"இதற்கு முன்...?" மீனா கேட்டாள்.

"கத்தார்."

"ஏன் அப்படி?"

"மீனா, இது நம்ம ஊர் மாதிரி இல்லை. எங்க கூட சம்பளம் தர்றாங்களோ அங்க தாவிடுவேன். அப்பதான் நாம வெளிநாட்டுல வேலை செய்வதன் முழு பலனும் கிடைக்கும். கத்தாருக்கு முன் ஒமனில் இருந்தேன். அநேகமாக துபாய்க்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கிடைத்தால் நம் திருமணத்தின் போது நான் துபாயில் இருந்துதான் வருவேன். ஏன் கேக்கறீங்க?", என்றான் மதன்.

"ஏன் மதன், நீங்க ஊருக்கு வந்து எத்தனை நாள் ஆகுது?" - மீனா பேச்சைத் தொடங்கினாள்.

"ஒரு மாச வெகேஷன். நாளை மறுநாள் நான் டியூட்டியில இருக்கனும். நேத்துதான் உங்க தகவலை புரோக்கர் சொன்னாரு. உடனே ஏற்பாடு செய்துட்டோம்."

"சரி, நீங்க இதுவரைக்கும் எத்தனை பெண்களைப் பார்த்திருப்பீங்க?"

அவன் சற்றே திடுக்கிட்டு, "அது... எப்படி நீங்க இதைச் கேட்கறீங்க?" என்றான்.

"நான் இனிப்பு கொடுக்கும் போது, 'அய்யோ இங்கேயும் இதேதானா' என்ற ரீதியில் பேசினீங்களே... அதான் கேட்டேன்," என்றாள் மீனா.

"ஓ! யு ஆர் எ கிளவர் வுமன் (You are a clever woman). ஐ லவ் யூ மீனா!" என்றவன், "இதபாருங்க, நான் எப்பவுமே பொய் பேச மாட்டேன். இதுவரைக்கும் லீவுல நான் பார்த்த பெண்கள் நான்கு பேர்."

"ஒருத்தரையும் பிடிக்கலையா?"

"ஒருத்தியின் அண்ணன் எங்கோ எவளையோ இழுத்து கிட்டு ஒடிட்டான். அந்த பெண்ணை திருமணம் செய்துட்டா நாளைக்கே அவன் வந்து நமக்கு இடையூறு கொடுக்க மாட்டான் என்பதை எப்படி மறுக்க முடியும். அடுத்த பெண்ணின் அக்கா ஒரு விவாகரத்து பெற்றவள். பெற்றவர்கள் இருக்கும் வரை பார்த்துப்பாங்க. பிறகு எங்ககிட்ட வந்து கழுத்தறுக்கும். அதான் வேண்டானுட்டேன். மூன்றாவது பெண்…." அவன் கூறும் போதே மீனா குறுக்கிட்டாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அழைப்பிதழ்!
Story ending contest - Man & woman

"மதன், நான் புரிஞ்சுகிட்டேன். அவளுக்கும் ஏதோ குடும்பப் பிரச்னை இருக்கு, அது நாளைக்கு உங்களுக்கு ஒரு பாரமா இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறீங்க. சரிதானே?"

"ஓ! எக்ஸாக்ட்லி. யு ஆர் கிரேட்!" என்றான் மதன்.

"சரி மதன், ஒரு வேண்டுகோள்."

"என்ன? கேளுங்க."

"என் பெற்றோர்களுக்கு நான் ஒரே மகள். அவ்வளவு செல்லமாக வளர்த்து விட்டார்கள். இப்போ நான் அவர்கள் கட்டுப்பாட்டில். ஆனால் வயதானதும் அவர்களை யார் பார்த்துப்பார்கள் என்ற கேள்வி தற்போது எல்லா குடும்பத்திலும் இருக்கிறது. அதனால்..."

அவள் கூறும் போதே அவன் இடை மறித்தான்.

"மீனா, டோன்ட் வொர்ரி. நான் அதற்கும் ஏற்பாடு செய்துட்டேன்!"

"என்ன சொல்றீங்க?"

"ஆமாம். எங்க அப்பா அம்மாவுக்கு நானும் ஒரே பிள்ளைதான். வயதான காலத்துல அவங்களுக்கும் நான் ஒரு வழி செய்யனும் இல்லியா. அதற்குத்தான் பல முதியோர் இல்லமாக சென்று பல முதியோர் இல்லங்களை தொடர்பு கொண்டு எது ரொம்ப பெஸ்டோ அதை இப்போதே பார்த்து வைத்து விட்டேன். அதனால் உன் பெற்றோர் பற்றியும் நீ கவலை படவேண்டாம். அவர்களும் அந்த முதியவர்கள் இல்லத்தில் இருக்கட்டும். என் பெற்றோருடன் இருப்பது பிடிக்க வில்லை என்றால் வேறு ஒரு முதியோர் இல்லம் நானே பார்த்து சேர்த்து விடுகிறேன். கவலையே வேண்டாம்..." என்றான் மதன்.

அவள் சிரித்தாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: உச்சம் தொடாதோ ஊர்க்குருவி?
Story ending contest - Man & woman

"ஏன் சிரிக்கிறீங்க? இதன் அர்த்தம்?" - மதன் புரியாமல் ஆச்சர்யத்துடன் கேட்டான்.

?????????????????????????

சிறுகதை (முடிவு) போட்டி: கதை இங்கே! முடிவு எங்கே?

அன்பு வாசகர்களே! உங்கள் திறமையை வெளிப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு!

மீனா மதனின் முகத்தைப் பார்த்துச் சிரித்த அந்தச் சிரிப்பிற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் 'அர்த்தம்' என்ன? மதனிடம் மீனா சொல்லப்போகும் இறுதி பதில் என்னவாக இருக்கும்?

கதையை நிறைவு செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!

logo
Kalki Online
kalkionline.com