சிறுகதை போட்டி: கதை இங்கே! முடிவு எங்கே? - போட்டி முடிவு இதோ!

Story ending contest - Man & woman
Story ending contest - Man & womanAI Image
Published on

அன்பு வாசகர்களே! இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

இக்கதையின் ஆசிரியர் திரு.முருகன் தேர்வுசெய்த சிறந்த முடிவுடன் இக்கதை பிரசுரமாகியுள்ளது. கதையை படித்து மகிழுங்கள்.

சிறந்த முடிவை எழுதி Rs.250 பரிசு பெறுபவர்: ச. சத்தியபானு

Mangayar malar strip
Mangayar malar strip

விடியற்காலை மணி ஐந்தரை. "மீனா மீனா…" அப்பா எழுப்பினார்.

"என்னப்பா இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஒரு நாள்தானே லீவு. கொஞ்சம் தூங்க விடுங்கப்பா," என்றாள் மீனா.

"சாரிம்மா. ஏழு மணிக்கு உன்னை பெண் பார்க்க வர்றாங்கம்மா," என்றார் அப்பா.

"என்னப்பா! பெரிய குண்டைத் தூக்கி போடறீங்க?"

"ஆமாம்மா. பையன் சௌதியில வேலை செய்யறாரு. இன்னிக்கு ஃப்ளைட் சரியா பதினோறு மணிக்கும்மா. அவரு உன்னை பார்த்து அப்படியே பிடித்திருந்தா பாக்கு வெற்றிலை மாற்றிடுவாங்களாம். தம்பிக்கு விமான நிலையத்துல சரியா ஒன்பது மணிக்கு இருக்கனுமாம். அதனால ஏழு மணிக்கு பெண் பார்க்கிற நிகழ்வை வெக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினாங்க. நானும் சரின்னு சொல்லிட்டேன். உன் கஷ்டம் எனக்கு தெரியும். ஞாயிறு ஒரு நாள்தான் அலுவலகம் விடுமுறை. வேறு வழியில்லம்மா. தயவு செய்து எழுந்து தயாராயிடும்மா. அம்மா ரெடியாயிட்டாங்க..."

அவன் வந்தான்; கூட, அவன் பெற்றோர்கள் மட்டுமே வந்தனர். அவன் பார்த்தான். பிடித்திருக்கிறது என்றான்.

உடன் அவனுக்கு இனிப்பு கேசரியும் பஜ்ஜியும் கொடுக்கப்பட்டது. "அய்யோ! இங்கேயும் இதேதானா?" அவன் பேச்சின் முதல் குறையை கண்டு கொண்டாள் மீனா. பெரியவர்கள் பேசிக்கொண்டனர். பையனுக்கு பெண் பிடித்து விட்டதாக அவன் பெற்றோர்கள் கூறினர்.

மீனா அவனை அழைத்தாள். தனியாக பேச வேண்டும், என்றாள். அவனும் பெற்றோர்கள் சம்மதத்துடன் வந்தான்.

"ஏன் மிஸ்டர்...?" என்று இழுத்தாள் மீனா.

"நான் மதன்," என்றான் அவன் உடனே.

"ம்ம்... சாரி. ஏன் மதன், இப்போ எங்க ஒர்க் செய்யறீங்க?"

"சௌதி."

"இதற்கு முன்...?" மீனா கேட்டாள்.

"கத்தார்."

"ஏன் அப்படி?"

"மீனா, இது நம்ம ஊர் மாதிரி இல்லை. எங்க கூட சம்பளம் தர்றாங்களோ அங்க தாவிடுவேன். அப்பதான் நாம வெளிநாட்டுல வேலை செய்வதன் முழு பலனும் கிடைக்கும். கத்தாருக்கு முன் ஒமனில் இருந்தேன். அநேகமாக துபாய்க்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கிடைத்தால் நம் திருமணத்தின் போது நான் துபாயில் இருந்துதான் வருவேன். ஏன் கேக்கறீங்க?", என்றான் மதன்.

"ஏன் மதன், நீங்க ஊருக்கு வந்து எத்தனை நாள் ஆகுது?" - மீனா பேச்சைத் தொடங்கினாள்.

"ஒரு மாச வெகேஷன். நாளை மறுநாள் நான் டியூட்டியில இருக்கனும். நேத்துதான் உங்க தகவலை புரோக்கர் சொன்னாரு. உடனே ஏற்பாடு செய்துட்டோம்."

"சரி, நீங்க இதுவரைக்கும் எத்தனை பெண்களைப் பார்த்திருப்பீங்க?"

அவன் சற்றே திடுக்கிட்டு, "அது... எப்படி நீங்க இதைச் கேட்கறீங்க?" என்றான்.

"நான் இனிப்பு கொடுக்கும் போது, 'அய்யோ இங்கேயும் இதேதானா' என்ற ரீதியில் பேசினீங்களே... அதான் கேட்டேன்," என்றாள் மீனா.

"ஓ! யு ஆர் எ கிளவர் வுமன் (You are a clever woman). ஐ லவ் யூ மீனா!" என்றவன், "இதபாருங்க, நான் எப்பவுமே பொய் பேச மாட்டேன். இதுவரைக்கும் லீவுல நான் பார்த்த பெண்கள் நான்கு பேர்."

"ஒருத்தரையும் பிடிக்கலையா?"

"ஒருத்தியின் அண்ணன் எங்கோ எவளையோ இழுத்து கிட்டு ஒடிட்டான். அந்த பெண்ணை திருமணம் செய்துட்டா நாளைக்கே அவன் வந்து நமக்கு இடையூறு கொடுக்க மாட்டான் என்பதை எப்படி மறுக்க முடியும். அடுத்த பெண்ணின் அக்கா ஒரு விவாகரத்து பெற்றவள். பெற்றவர்கள் இருக்கும் வரை பார்த்துப்பாங்க. பிறகு எங்ககிட்ட வந்து கழுத்தறுக்கும். அதான் வேண்டானுட்டேன். மூன்றாவது பெண்…." அவன் கூறும் போதே மீனா குறுக்கிட்டாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அழைப்பிதழ்!
Story ending contest - Man & woman

"மதன், நான் புரிஞ்சுகிட்டேன். அவளுக்கும் ஏதோ குடும்பப் பிரச்னை இருக்கு, அது நாளைக்கு உங்களுக்கு ஒரு பாரமா இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறீங்க. சரிதானே?"

"ஓ! எக்ஸாக்ட்லி. யு ஆர் கிரேட்!" என்றான் மதன்.

"சரி மதன், ஒரு வேண்டுகோள்."

"என்ன? கேளுங்க."

"என் பெற்றோர்களுக்கு நான் ஒரே மகள். அவ்வளவு செல்லமாக வளர்த்து விட்டார்கள். இப்போ நான் அவர்கள் கட்டுப்பாட்டில். ஆனால் வயதானதும் அவர்களை யார் பார்த்துப்பார்கள் என்ற கேள்வி தற்போது எல்லா குடும்பத்திலும் இருக்கிறது. அதனால்..."

அவள் கூறும் போதே அவன் இடை மறித்தான்.

"மீனா, டோன்ட் வொர்ரி. நான் அதற்கும் ஏற்பாடு செய்துட்டேன்!"

"என்ன சொல்றீங்க?"

"ஆமாம். எங்க அப்பா அம்மாவுக்கு நானும் ஒரே பிள்ளைதான். வயதான காலத்துல அவங்களுக்கும் நான் ஒரு வழி செய்யனும் இல்லியா. அதற்குத்தான் பல முதியோர் இல்லமாக சென்று பல முதியோர் இல்லங்களை தொடர்பு கொண்டு எது ரொம்ப பெஸ்டோ அதை இப்போதே பார்த்து வைத்து விட்டேன். அதனால் உன் பெற்றோர் பற்றியும் நீ கவலை படவேண்டாம். அவர்களும் அந்த முதியவர்கள் இல்லத்தில் இருக்கட்டும். என் பெற்றோருடன் இருப்பது பிடிக்க வில்லை என்றால் வேறு ஒரு முதியோர் இல்லம் நானே பார்த்து சேர்த்து விடுகிறேன். கவலையே வேண்டாம்..." என்றான் மதன்.

அவள் சிரித்தாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: உச்சம் தொடாதோ ஊர்க்குருவி?
Story ending contest - Man & woman

"ஏன் சிரிக்கிறீங்க? இதன் அர்த்தம்?" - மதன் புரியாமல் ஆச்சர்யத்துடன் கேட்டான்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த முடிவு!

"மதன், இதுவரை உங்கள் பார்வையில் பணமும் வசதியும் தான் ஒருவரை உயர்த்தும் என்று நினைத்தீர்கள். ஆனால், செல்வம் என்பது இன்று வரும், நாளை போகும் வெறும் காகிதம். ஒரு மனிதன் இழந்த பணத்தை மீண்டும் சம்பாதித்துவிடலாம், ஆனால் பிறர் மீது காட்டும் உண்மையான அன்பையும் நம்பிக்கையையும் ஒருமுறை இழந்துவிட்டால், அதை உலகின் எந்தக் கோடீஸ்வரனாலும் விலைக்கு வாங்க முடியாது. உங்களிடம் இருக்கும் பணத்தால் ஒரு கூட்டத்தைக் கூட்ட முடியுமே தவிர, ஒருவரின் இதயத்தை வெல்ல முடியாது. வசதிகளுக்கு நடுவில் நீங்கள் வாழலாம், ஆனால் நிம்மதி என்பது அன்புள்ள இடத்தில் மட்டுமே இருக்கும். இனியும் உங்கள் பணத்திமிருக்கு முன்னால் என் பாசத்தை அடகு வைக்க நான் தயாராக இல்லை. உறவுகளின் மதிப்பை நீங்கள் உணரும் நாள் வரும், அன்று நான் காட்டிய அன்பின் விலை என்னவென்று உங்களுக்குப் புரியும்.

- ச. சத்தியபானு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com