சிறுகதை: மௌனமாய் ஒரு யுத்தம்!

Old Couple - சிறுகதை
Old Couple - சிறுகதைAI Image
மைதிலி ராமையா

நான் எழுதிய பல கதைகள், கவிதைகள், நாடகங்கள் வானொலியிலும், ராணி, பாக்யா, குங்குமம், பத்மா, மங்கையர் மலர் மற்றும் மின்னிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. புலனக்குழுக்களில் கதைப்பயிற்றுனராகவும், நடுவராகவும் பணியாற்றி வெற்றியாளர்களை உருவாக்கவும் தேர்வு செய்யவும் உதவி வருகிறேன். எனது சிறுகதைத் தொகுப்புநூலும், கவிதை தொகுப்புநூலும் கின்னஸ் சாதனையாக வெளியிடப்பட்டது. வென்ற விருதுகளில் சில - குறிஞ்சிக் கவி, தமிழினியாள், கண்ணதாசன் விருது, பூவையர் பாமணி, அம்பேத்கார் விருது, காமராசர் விருது, ஆகச்சிறந்த எழுத்தாளர்.

Updated on: 
MM strip
MM strip

ஜன்னலோரப் படுக்கையில் சாய்வாக படுத்திருந்த சுந்தரம் மனைவி ஜானகியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவளை மனைவி என்று நினைக்கும் உரிமை தனக்கு இருக்கிறதா என நினைத்தவர், 'என்ன மாதிரி மனுஷி இவள்? இவளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் எவ்வளவோ இருக்கிறது. ஆனால் கற்றுக்கொள்ள காலம் தான் இல்லை. ஓடிக்கொண்டிருந்த போது புரியாத பல விஷயங்கள் இப்படி ஓய்ந்து கிடக்கையில் தான் புரிகிறது. இந்தப் புரிதலால் யாருக்கு என்ன லாபம்?' என நினைத்தவர் 'ஹூம்' என்ற நீண்ட பெருமூச்சு விட்டார்.

கண்கள் லேசாகக் கசிந்தன. சுய பச்சாதாபத்தாலா அல்லது சுடுகின்ற உண்மையை மனம் எண்ணிப் பார்த்ததாலா?... தெரியவில்லை.

கண்களை மூடிக்கொண்டு தூங்க முயற்சி செய்தார். தூக்கம் எங்கே நினைத்தபடி வருகிறது? ஆனால் அதையும் குறை சொல்ல முடியாது. படுத்தே கிடப்பதனால் எப்போது தூங்குகிறோம் எப்போது விழித்திருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் உறக்கமும் விழிப்புமாகவே நேரம் கரைகிறது. அப்புறம் எப்படி நாம் நினைக்கும் நேரத்தில் தூக்கம் வரும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com