

"பத்மா..! இந்த மாசம் லைஃப் சர்ட்டிபிகேட் அனுப்பணும். பென்சணுக்கு ரினிவல் பண்ண வேண்டிய மாசம் இது! முன்னாடி எல்லாம் போய் கியூவில நின்னு, வரிசைல ‘லைப் சர்டிபிகேட்’ கொடுத்துட்டு வரணும்! இப்ப, கொஞ்ச நாள் முன்னாடி ‘ஈ செண்டர்ல’ ரினிவல் பண்ணிக்கலாம்னு கொண்டாந்தாங்க! இன்னைக்கு அதையும் சிம்பிளிபை பண்ணி, ‘ஆப்ல’ மொபைலயே லைப் சர்டிபிகேட் அட்டாச் பண்ண வழி கொண்டாந்துடாங்க! கவலை விட்டது! எடு மொபைல, ஆப்பை டவுண்லோடு பண்ணு!" என்று மாதவன் தன் மனைவியிடம் கூறினார்.
அவள் டவுண்லோடு பண்ணிக் கொடுக்க, அது கேட்ட தகவல்களைப் பகிர, அது அவனின் போட்டோவை ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுக்க எத்தணித்தது. அப்போதுதான் பிரச்னை ஆரம்பித்தது.
‘ மொபைல் ஆப்’ மாதவன் உயிரோடிருப்பதை உறுதி செய்ய, ‘ஸ்கிரீன் ஷாட்க்கு’ ரெடியானது..!
சிவப்பாய் ஒரு வளையம் சுற்றியபிறகு அது பச்சையாய் மாறிச் சுற்றியது! அதில் ஒரு வாசகம் ‘நல்லா கண்ணை முழிச்சுப் பாருங்க!’ என்றது.
அவன் முழிக்க... பத்மா கத்தினாள் "இன்னும் அந்த முழிக்கற புத்தி உங்கள விட்டுப் போகலையே…?! ரிட்டயர்டு ஆயாச்சு! ஞாபகம் இருக்கட்டும்!" என்றாள்! எப்போதும் அவளுக்கு யாரையும் முழிச்சுப் பார்க்கக்கூடாது! அதென்ன ஆளைத் திங்கறா மாதிரி அப்படியொரு பார்வைன்னு திட்டியிருக்கிறாள்.
ஆனால்... மொபைல் ஆப் ஸ்கிரீன் ஷாட்டுக்கு நான் முழுச்சுப் பார்த்தாதான் அது, ‘ஆதாரின் படத்தோடு சிங்கர்னைஸ் ஆகுமாம்! அப்புறம்தான் பென்ஷன் கிரெடிட் ஆகுமாம்! அவளுக்கெங்க தெரியப் போகுது இதெல்லாம்!
போட்டோ பலமுறை ‘பெயிலியராக’ ஆப் அதட்டுவதாகப் பட்டது! 'நீ கண்ணை மூடாதே?! யூ ஹாவ் எக்ஸீடட் த லிமிட்' என்றது!
"நான் இன்னும் கண்ண மூடலைங்கறதை நிரூபிக்கத்தானே இந்த லைப் சர்டிபிகேட்?!’
'மொபைல் ஆப்' என்னை முழி, முழிங்குது! 'ஒய்ப்' என்னை "அப்படி என்ன முழிச்சு முழிச்சுப் பார்த்துட்டு!" என்கிறாள்!
ஒரு லைப் சர்டிபிகேட்டுக்கு ஸ்கிரீன்ஷாட்டுக்கு நான் முழிச்சு முழிச்சு பார்த்தது இருக்கே… அது செத்து செத்துப் பொழைச்சா மாதிரி இருக்கு! ஈ செண்டரிலும் இதே கதிதான். ‘ஒரு கண்ணை மூடிட்டு ஒருகண்ணால் பாருங்கங்கறான். பத்மா என்ன சைட் அடிக்கறா மாதிரின்னு அங்கயும் அதட்டி மிரட்டறா! ரெண்டு கண்ணையும் மூடாம இருப்பதுதானே லைப் சர்டிபிகேட்!?
இந்த அவஸ்தை பட்டு ‘லைப் சர்டிபிகேட்’ எடுக்க வேணுமா?
லைப் வேணுமோ இல்லையோ ஆனா, ‘பென்ஷன் வேணுமே!’ பென்ஷன் இல்லாட்டி ஒருத்தரும் மதிக்க மாட்டாங்களே?! அதுக்காக எத்தனை தடவை வேணாலும் செத்து செத்துப் பொழைக்கலாம் சாமி!
நண்பர்களே உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏதேனும் ...?