
நல்லாயிருக்குடி நீ செய்யறது. 4வயது குழந்தையைப்போய் இப்படி பாடுபடுத்தறியே மாமியார் ரத்னா மருமகள் ரமாவை திட்டினாள்.
ஒன்னும் பயப்படாதீங்க அத்தை இதெல்லாம் யோகா. சின்ன வயசிலேயே சொல்லிக்கொடுத்தால் ரொம்ப நல்லது ரமா சொன்னாள்.
உங்களுக்கெல்லாம் குழந்தைனா விளையாட்டுப்பொருள் ஆயிடிச்சு. ஏதோ எங்கேயோ யாரோ ஒரு வரி போட்டால் அதை ஃபாலோ பண்றது. வீட்டிலே பெரியவங்க சொல்றதை மதிக்கறதில்லை. குழந்தைக்கு குடல் ஏறிடிச்சுனா அப்ப பெரியவங்க, டாக்டர்னு அலையறது. யோகாவும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று குழந்தையை பிடுங்க
குழந்தையை கொடுங்க. ஒன்னும் ஆகாது.
குழந்த்தைக்கு வேர்த்து கொட்டுது. சளி பிடிக்கும். வேற வேலை இருந்தா பாரு ரத்னா திட்ட.
எனக்கு தெரியும் குழந்தையை கொடுங்க ரமா கெஞ்சினாள்.
இன்னைக்கு இது போதும் என்று ஃபேனை போட்டுக்கொண்டு டிவியை ஆன் செய்தாள் ரத்னா.
உங்க மகன் யோகா கத்துக்கொடுக்கனும்னு சொல்றார். நீங்க வேணாம்கறீங்க என்னை திட்டுவார்.
அவனிடம் நான் பேசிக்கறேன், ரத்னா அடம் பிடித்தாள்.
இவங்களோட பெரிய ரோதனையா போச்சு முனகியபடி ரமா செல்ல, ரத்னா முறைத்தாள்,
கணவன் மாதுவிடம் ரமா விஷயத்தை சொல்ல, அம்மா இதெல்லாம தான் நேச்சுரலா உடம்பை நோய், நொடியிலிருந்து காப்பாத்தரது. இதை வேண்டாங்கற.
என்னடா உடனே போட்டுக்கொடுத்துட்டாளா. அது நல்லதாயிருந்தாலும் வேண்டாம். நம்ம வீட்டிலே வழக்கமில்லை. ஃபோனை வைச்சுட்டு ஆபீஸ் வேலையைப்பார். வந்துட்டான் அங்கேயிருந்து சர்டிபிகேட் கொடுக்க என்று திட்டினாள் ரத்னா.
ரமா ஆபீஸ் கிளம்பலையா? அதான் போட்டுக்கொடுத்தாச்சே. உன் வேலை முடிஞ்சிருச்சே, கிளம்பிக்கிட்டேயிருக்கேன் என்று கிளம்பிய ரமா ஃப்ரிட்ஜில் பாலிருக்கு. எழுந்ததும் குழத்தைக்கு கொடுங்க என்று சொல்ல, எங்களுக்கு தெரியும். நீ ஒன்னும் சொல்லித்தர வேண்டாம் முகத்தை திருப்பிக்கொண்டாள் மாமியார்.
மாலையில் வந்த மாது, அம்மா குழந்தையின் பெயரில் ஒரு நகைச்சீட்டு போட வேண்டாங்கறா ரமா என்றான்.
அவ கிடக்கா. நீ அவ சொல்றதை கேட்காதே. நகைச்சீட்டு போடு என்றாள் அம்மா.
ரமா நான் எப்ப அப்படி சொன்னேன் என்று யோசித்தாள்.
இந்த பேஸ்ட் யார் போட்டா. நல்லாவே இல்லை. வேற பேஸ்ட் ஆர்டர் போடுங்கனு ரமா அடம் பிடிக்கறா. நீங்க என்னம்மா சொல்றீங்க, மளிகை சாமான் லிஸ்டில் சேர்க்கனும். அவளிடம் என்னடா கேள்வி? இதையே போடு. என் பல்வலியே இந்தப்பேஸ்டாலே தான் போச்சு. அவ வேண்ண்டாங்கறாளே. வேண்டாம்னா விரலாலே வெறுமனே தேய்க்கட்டும். ஏதாவது பிரச்சனை பண்ணனும்னே அலையறா.
கணவன் சொல்றதெல்லாம் பொய், ஏனிப்படி பேசறீங்கனு கேட்கனும் என்று முடிவெடுத்தாள் ரமா. டின்னர் சாப்பிட்டு மாடிக்கு வந்ததும் பிடி பிடினு பிடித்தாள்.
நான் சொன்னேனு நீங்க ஏன் பொய் பொய்யா சொல்றீங்க. இல்லாததையும் பொல்லாததையும் பொய் பொய்யா அடுக்கறீங்க?
சிரித்தான் மாது, என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு? எரிந்து விழுந்தாள் ரமா.
பொய் தான் சொன்னேன். என்னாச்சு நீ விரும்பினபடி நகைச்சீட்டும், பேஸ்டும் ஓ.கே ஆனதா? இல்லையா? அம்மாவுக்கு ஈகோ. நீ சொன்னா அதை ஒத்துக்க மாட்டாங்க. நீ வேணாம்னு சொன்னா உடனே வேணும்பாங்க. அதே கரெக்டா ஃபாலோ செஞ்சேன். உனக்கும் ஓகே அம்மாவுக்கும் ஓகே எனக்கும் பிரச்சனை இல்லை. எப்படி? கண் சிமிட்டினான்.
நீங்க புத்திசாலிங்க பாராட்டினாள் ரமா.
நாளைக்கு பாரு வேடிக்கையை. உங்க வீட்டிலும் விசேஷம். அம்மா சொந்தக்காரங்க வீட்டிலும் விசேஷம். நீ வீட்டு விசேஷத்துக்கு போகனும்னு சொல்வே. அம்மா அவங்க வீட்டு விசேஷத்துக்கு தான் போகனும்னு சொல்வாங்க. எப்படி உன் சாய்ஸுக்கு ஓகே வாங்கறேன் பாரு. என்று தானே பூஸ்ட பண்ணிக்கொண்டான்...
காலையில் அம்மாவிடம் உங்க வீட்டிலும் விசேஷம். ரமா சொந்தக்காரங்க வீட்டிலும் விசேஷம் ரமா உங்க வீட்டு விசேஷம் அம்மா சொந்தக்காரங்க வீட்டிலும் விசேஷம். ரமா உங்க வீட்டு விசேஷத்துக்கு தான் போகனம்னு சொல்றா? என்ன இருந்தாலும் புகுந்த வீட்டு விசேஷத்துக்கு தான் போகனம்னு சொல்றா? என்ன செய்ய? என்று கேட்க சரிடா அவ சொல்றபடியே செயவோம்னு சொன்னதும் அதிர்ச்சியாய் மரம் போல் நின்றான்
என்னடா செல்ஃபோனை கான்ஃப்ரன்சில் போட்டா பேசுவே. நான் கேட்டுட்டேன் உன் தில்லு முள்ளை. இனிமேலாவது எது சரியோ அதை பேசு. என்று வெற்றிச்சிரிப்பு சிரித்தாள் அம்மா