சிறுகதை: துணிச்சல்!

Women in Ration Shop
Women in Ration ShopAI Image
பாலமுருகன்.லோ

பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம்.

Updated on
MM strip
MM strip

“ஏண்டி வத்சலா, ஒண்ணு கேள்விப்பட்டியா?”

“என்னன்னு சொன்னாதானே தெரியும்? உங்க மனசுல இருக்கிறது எனக்கு எப்படித் தெரியும்?”

“நம்ம காம்ப்ளெக்ஸே அல்லோலப்பட்டு இருக்கு, உனக்குத் தெரியலைன்னு சொல்றியா?”

“தெரியலைங்கிறதை வேற எப்படிச் சொல்றது? வழவழன்னு இழுக்காம நேரா விஷயத்துக்கு வாங்க.”

“நம்ம காம்ப்ளெக்ஸ்ல மேல மாடியில இருந்தாங்களே, ரேகாவும் அவ புருஷன் சங்கரும்... அவங்க இப்ப ஒண்ணா இல்லையாம். அதைப்பத்தி ஏதாவது உனக்குத் தெரியுமான்னுதான் கேட்டேன்.”

“ஏன் இப்ப அதைக் கேட்டு என்ன சாதிக்கப்போறீங்க? உங்க வேலையையே உங்களால ஒழுங்கா பார்த்துக்க முடியலை. இதுல ஊர்ல இருக்கிறவங்களைப் பத்தி தெரிஞ்சு என்ன சாதிக்கப்போறீங்க?”

“அதுக்கில்ல... ஒரு காம்ப்ளெக்ஸ்ல இருந்துகிட்டு இதுகூட தெரியலைன்னா எப்படி?”

“ஏதோ சண்டைன்னு கேள்விப்பட்டேன், என்னவாம்?"

“அந்தப் பொண்ணு இருக்கா இல்ல, அவ அவனை, அதான் சங்கரை, வேண்டாம் என்கிறாளாம்!”

“ஏனாம்? என்னவாம்? ரெண்டு பேரும் நல்லாதானே குடும்பம் நடத்தினாங்க. அஞ்சு வயசுல ஒரு குழந்தை வேற. ஏன் இப்படி முடிவெடுக்கிறாங்க?”

"இல்லை, ரெண்டாவது பிளாக்ல நம்ம காய்கறிக் கடை வச்சிருக்கிறாரே கந்தசாமி, அவர் தான் நம்ம வீட்டுக்கு வர்றப்ப இதைச் சொன்னாரு..."

கந்தசாமிக்கு தனக்கும் நடந்த உரையாடலை அப்படியே விவரித்தார் கணேசன்.

***********

“ஏம்பா கணேசா, விஷயமே தெரியாதா? உங்க வீட்டு மாடியில இருக்காங்க இல்ல, ரேகா - சங்கர் தம்பதி, அவங்கவங்க வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டுப் போயிட்டாங்களாம்."

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com