சிறுகதை: உயிருள்ளவரை உ(மா)ப்புமா!

பஸ் ஸ்டாப்பில் தொடங்கிய மோதல்... திருமண மேடையில் முடிந்த சுவாரசியம்: உமாவின் 'உப்புமா' புராணம்!
Boya and Girl | Tamil short story
Boy and Girl | Tamil short storyAI Image
கே. அசோகன்

கவிஞர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் . மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கிய சிந்தனை செம்மல் திருவிக பேச்சரங்க திருவிக விருது தமிழக ஜோக் எழுத்தாளர்கள் குழும விருது வெளியிட்டுள்ள நூல்கள் அம்மா , சின்னசைக்காலாஜி நீங்களும் அம்பானிதான் தமிழ் இந்துவில் சிறுவர் கதைகள் வெளியானது தொகுப்பு ஆந்தைக்குகையில் இளவரசி, பீட்ஸா சாப்பிட்ட காகம் மற்றும் காதல் முதல் கடவுள் வரை கவிதை ஆகிய நூல்களின் ஆசிரியர்

Updated on: 

"ஆ.. அம்மா"வென அலறினான். எதிரே பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவள் காதில்… என்ன விழுந்ததோ… ஸ்மார்ட்போனில்… இலாகவமாய் விரல்களால் விளையாடினாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம்… சைரன் ஒலி கேட்டது. ஏதோ, ஆம்புலன்ஸ் என்று பார்த்தால் போலிஸ் ஜீப்… காலோரம் உரசியபடியே நின்றது.

”ஏன்டா! ராஸ்கல்!” பஸ் ஸ்டாப்பில நிக்குற பொம்பள புள்ளைகளை டீஸ் பன்றீயா? ஏறுடா வண்டியில” மிரட்டினார் சப்-இன்ஸ்பெக்டர்.

”ஸார்! நா என்ன தப்பு செய்தேன்?”

”ஸ்டேஷனுக்கு வா சொல்றேன்.." கொத்தாக சட்டையைப் பிடித்து ஜீப்பில் ஏற்றினார்.

காலையில்தான் அயர்ன் பண்ண இஸ்திரி கடைக்காரரிடம் கொடுத்து.. கையோடு வாங்கி போட்ட ஷர்ட் கசங்கியது. அது கூட பரவாயில்லே காரணமே இல்லாமல் மனசைக் கலங்கடித்து விட்டாரே! காரணம் என்னவாயிருக்கும்… யோசித்து கொண்டிருக்கும் போதே…

”மிஸ், மேடம், வர்றீங்களா? இந்த ராஸ்கல்தானே!” உறுதி செய்து கொண்டார்.

அப்பொழுதுதான் முழுதாய் அவளைப் பார்த்தான். 'ச்சும்மா அரிஞ்சு வைச்ச ஆப்பிளை பிரிட்ஜில் வைத்து அப்போதுதான் எடுத்து வெளியே எடுத்து வைத்தது போல ஜிவ்வென்றிருந்தாள்.'

”ஸார்! நா எதிர்க்க பஸ் ஸ்டாப்பில நிற்குறபோது… இவர் என்னை கிண்டல் செய்தார்" என்றாள்.

”ஐயோ, ஸார், நான் 'அம்மா'ன்னுதான் அலறினேன். கால்ல முள் குத்திக்கிச்சி” என்றான்.

”ஏன்டா! மவுண்ட் ரோடுல ஏதுடா? முள்…?" முள்ளாய் நெஞ்சில் குத்தினார்.

ஜீப் கிளம்பும்போது… ”மேடம்! நீங்க ஆட்டோவுல ஸ்டேஷன் வந்திடுங்க…" ஸ்டேட்மென்ட் வாங்கணும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com