சிறுகதை; முன்னுதாரணம்!

Short Story in Tamil - Munnuradhanam!
Short Story in Tamil!
Published on

பைரவனுக்கு தன் தம்பி காமேஸ்வரன் என்ற காமேஷூடன் அன்று மீட்டிங். கிளப்பில் எப்போதும் உட்காரும் இடத்தில் கையில் கிளாஸோடு  பைரவன் காமேஷை வரவேற்க, “ரொம்ப சீக்கிரம் ஆரமிச்சுட்டியா?”,  என்றவாறு உட்கார்ந்தார்  காமேஷ்.  தனக்கென  வைக்கப்பட்டிருந்த விஸ்கி வகையறாக்களை லேசாக ஒதுக்கிவிட்டு, வெள்ளரிக்காய், வேர்க்கடலை முதலியவற்றை தன் பக்கம் இழுத்து, “ஹாட் கப் ஆஃப் காஃபி, நோ ஷுகர் “, என்று ஆர்டர் செய்வதுவிட்டு, நிதானமாக பைரவனைப் பார்த்தார். 

தன் மனதை ஊடுருவிய அந்தப் பார்வையால் சற்று அசைக்கப்பட்டவராய், ”யூ ஹாவ் ஸீன் மீ பிஃபோர் !”, என்று நக்கலடித்த பைரவன், “நேராக விஷயத்துக்கு வந்துடறேன், காமேஷ். நம்ப  விஷ்வா இப்ப கொஞ்ச காலமா சரியாகப் படிக்கிறதில்லை.  போன மாதம் ஸ்கூல்ல இருந்து வார்னிங் நோட்டீஸ் வந்தது. பள்ளியில் ப்ளஸ் ஒன் டு ப்ளஸ் டூ ஸ்டூடென்ட்ஸை ரெவ்யூ செய்வார்கள். 100% பாஸ் ரிசல்ட் வரவேண்டும் என்பதால், பின்தங்கிய மாணவர்களின் வீட்டுக்கு எச்சரித்துக் கடிதம் போடுவார்கள். வீட்ல அவளும் சொன்னா. அவன் கிளாஸ் டீச்சர் ரண்டு மாசம் முன்பு ஒரு நாள் நேரில் கூப்பிட்டு படிப்பில் எக்ஸ்ட்ரா கவனம் தேவை என்றாளாம். உடனே எங்கிட்ட சொல்லாம, வார்னிங் லெட்டர் வந்தப்புறம் சொல்றா. சத்தம் போட்டேன். அது கிடக்கட்டும், விஷ்வா மேட்டர் கவலையா இருக்கு”, என்று நிறுத்தினார்.

பின் மேலும் தொடர்ந்து, ”சற்று எபவ் ஆவரேஜ் ஸ்டுடென்ட், திடீர்னு பின்தங்கிட்டானே, எப்படி…? எதாவது கெட்ட பழக்கம்…”, குரல் நடுங்க நிறுத்தினார் பைரவன்.  

“இரு, இரு.. டோன்ட் பீ ஹேஸ்டி! பேசிப் பார்த்தியா?”

“ ம்ம்… ஒண்ணும் தெரிஞ்சுக்க முடியல. டாக்டர் பத்ராசலம் இருக்காரே, லீடிங் சைகையாட்ரிஸ்ட், அவரை ஒரு நடை போய் பார்த்தோம். இன்னும் ஓரிரு சிட்டிங் பார்த்துட்டுதான் சொல்லமுடியுமாம்”.

“பேசிக்கிட்டே ரொம்ப ஜாஸ்தியா போயிட்டுதே“, என்றவாறு, காமேஷ் பைரவனிடமிருந்து கோப்பையை வாங்கி நகர்த்தினார்.

“நான் பேசிப் பார்க்கறேன்.”

பைரவன் சிறிது கண்ணை மூடி யோசித்து, பின் நிமிர்ந்தார். டேபிளைத் தட்டி, “எஸ்! தட்ஸ் இட்! திஸ் மே வொர்க், காமேஷ்! விஷ்வாவுக்கும்  உன்னை ரொம்பப் பிடிக்கும்,  நல்ல பான்டிங் உண்டு உன்னோடு. நாளைக்கே பேசிடு.”  சட்டென்று தெளிந்து விட்டார்.

மறுநாள்… ஏற்கனவே பேசிக்கொண்டபடி, கணவனும், மனைவியும் வெளியே கிளம்பினர். ஜோடியாக அப்பா அம்மா சென்ற காட்சி மிக ரம்மியமாக இருந்தது விஷ்வாவுக்கு. ரொம்ப நாள் கழிச்சு இப்படிச் சேர்ந்து போவதாலேயா? அவனைச் சித்தப்பாவுடன் தனியே விடத்தான் இந்த ஏற்பாடு என்பது அவனுக்குத் தெரியாதே.

படிக்க வேண்டியது நிறைய இருக்கு, புதிதாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள ட்யூஷன் டீச்சர் இன்று லீவு. படிப்பு ஓட வில்லை.

வாயில் மணியடித்தது. வாட் எ சர்ப்ரைஸ்… சித்தப்பா! அவனுடைய ஃபேவொரிட்  பிஸ்தா ஐஸ் க்ரீம் மற்றும் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் சகிதம்….  “வாங்க, வாங்க“   வரவேற்று, அவர் தடுத்தும் கேளாமல் மிக்ஸியில் டொமேடோ ஜுஸ் அடித்துக் கொடுத்தான்.  

டைனிங் டேபிளில் உட்கார்ந்த படி, காமேஷ், “என்னப்பா, ஹௌ ஆர் யூ? லாஸ்ட்டா நான் பார்த்ததுக்கு இப்போ, மீசை முளைத்து, நல்லா உசந்து ஜோரா ஆயிட்டியே!”

“ம்ம்…”

“ஃபுட்பால் பிராக்டிஸ் எப்படிப் போயிட்டிருக்கு?”

“ம்ம்…”

“லேட்டஸ்ட்டா என்ன படம் பார்த்தே?”

“ம்ஹூம்…”

“ஏதாவது புது கேர்ள்ஸ் ஸ்கூல்ல ஜாயின் பண்ணியிருக்காங்களா? யூ நோ யூ கேன் டெல் மீ,” என்று சிநேகமாய் அவன் தோளைத் தட்டினார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: விடுதலை, விடுதலை, விடுதலை!
Short Story in Tamil - Munnuradhanam!

“ம்ம்..”

“என்ன விஷ்வா, பதில் ஒற்றை வார்த்தையா வருது? வாய் ஓயாம பேசுவியே..  எல்லாம் ஓகே தானே?” 

“வந்து, எனக்கு பயம்மா இருக்கு சித்தப்பா!”

சட்டென அருகில் வந்து, “பயமா? அது எப்படி இருக்கும்? கருப்பா, சிவப்பான்னு கேட்கும் விஷ்வாவுக்கு பயமா? என்னடா பயம்?” என்றார் ஹாஸ்யம் கலந்த ஆதூரத்துடன்.

“சித்தப்பா. கொஞ்ச காலமா அப்பா குடிக்கிறார். தினம் ஈவ்னிங் வீட்டுக்கு வரதில்லை. நடு ராத்திரி வரார். எனக்குத் தெரியும். அம்மா அழுது, கெஞ்சி, சண்டையும் போட்டுப்  பாத்தாச்சு. நோ யூஸ். இப்ப ரண்டு பேரும் பேசிக்கறதே இல்லை. அதுவும் எனக்குத் தெரியும். ஏதாவது டிவர்ஸ் அப்படி இப்படின்னு...”

“சீச்சீ, என்ன பேசறே நீ!”

“அது மட்டுமல்ல என் பயம். அப்பாவுக்கு திடீர்னு லிவர் ஃபெய்லியர், மல்டி ஆர்கன் டிஸ்ஃபங்ஷன் என்று வந்துட்டா? எனக்கு எதுவுமே ஓடமாட்டேங்குது. மனசை ஒருமுகப்படுத்த பாடுபடவேண்டி இருக்கு.“

“விஷ்வா, இப்ப என்ன, உங்கப்பா குடிப்பழக்கத்தை விடணும், அதானே?” என்றார் காமேஷ்.

“நடக்குமா?”

“நடந்துடுச்சுன்னு நெனச்சுக்க”

“எப்படி சித்தப்பா?”

“லீவ் இட் டு மீ”

மறு நாள். பைரவனின் ஆபீஸ், அவரது காபின். 

“அவன் சின்னப் பையன், ஏதோ சொல்கிறான்…” மழுப்பிய பைரவனை,

“ஆல்ரைட், பைரவ்! அவனுக்கு உங்கிட்ட உயிர். பெரிய உசரத்துல உன்ன வச்சிருக்கான். அந்த உயரத்திலிருந்து நீ இறங்கிட்டே”

“ஓ! அதான்  நல்லா படிக்கணும்னு நா சொன்ன பேச்சை கேக்காம, அவன் எனக்கு உபதேசம் பண்ண வந்திட்டானா? நான் அவனுக்கு அப்பாவா, இல்லை அவன் எனக்கு அப்பாவா?” படபடத்தார் பைரவன்.

“நிறுத்து பைரவ்! பெற்று, வளர்த்து, வசதியான வாழ்க்கை தருவது, இதைவிட ரொம்ப முக்கியம் நல்ல ஒழுக்கமா வாழக் கத்துகொடுப்பதுதான். அது உங்கிட்ட இருந்துதானே வரும்.  நீதானே எக்ஸாம்பிள். நீதானே ஹீரோ. நீயே தவறினால்?“

சாட்டையடியாகத் தாக்கிய கேள்விகள் பைரவனை உருக்குலைத்தன. குனிந்த தலை நிமிரவில்லை. சவுக்கடி தொடர்ந்தது. “குடிப்பழக்கத்த விட முடியாதுன்னு நீ நெனச்சா என்னவெல்லாம் நடக்கலாம்னு யோசி. அவன் பயந்தாற்போல் வீட்ல டிவோர்ஸ் ஆகலாம். விஷ்வாவின் படிப்பு கெட்டுப் போய், நீ பயந்த மாதிரி கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகலாம். நல்ல சுபிட்சமாக வளர்ந்து வர குடும்பம்…”

“போதும், போதும். நான் என்ன செய்யணும்? ஹாபிட்டை நிறுத்துவது ஈஸியா என்ன?”

இதையும் படியுங்கள்:
பக்திக்குரிய மாதமான கார்த்திகை மாதம் சிறப்புகள்!
Short Story in Tamil - Munnuradhanam!

“ஒப்புக்கறேன். பள்ளத்துல சறுக்கி விழுவது ஈஸி... அதிலிருந்து மீண்டு வரது கஷ்டம்தான். அதுக்கான அழுத்தமான காரணம் விஷ்வா. அவன் நான் பெறாத பிள்ளை. அவனை நாம இழந்துவிடலாமா? எல்லா ஜீவ ராசியும் தன் குட்டிகளுக்கு வாழும் முறையை மட்டுமே கத்துக் கொடுக்குது. ஆனா மனுஷன்… ஹீ கான் பீ எ பேட் எக்ஸாம்பிள் டூ... சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.”

பத்து நாட்களாக  மாலை ட்யூஷன் முடிந்து விஷ்வா நன்  ரூமிலிருந்து வெளியே வரும் நேரம் அப்பா வீட்டில் இருக்கிறார். அம்மாவுடன் மொக்கை ஜோக் அடித்து, எல்லோரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு ஒரே கோலாகலம்தான்.  

அன்று டின்னர் முடிந்ததும் கணக்கு புக்கை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான் விஷ்வா. பைரவன் கணக்கு மட்டுமின்றி, வாழ்க்கையும் கற்றுக்கொடுத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com