
திருமணம் செய்யும்போது அக்னி சாட்சி முக்கியத்துவம் மிகுந்தது, ஏனெனில் அது ஒரு புனிதமான உறவு ஏற்பட ஆரம்பத்திற்கு அடிப்படை காட்டும் வழிமுறையாகும். என் முன்னிலையில் வைக்கப்படும் சாட்சியை தெய்வீக சக்தியை மனதில் கொண்டு திருமண உறவின் இறுதிப்பாட்டையும் நம்பிக்கையையும் பெருக்கும்.
மட்டுமல்லாமல் சமுதாயத்தில் அந்த உறவின் புனிதத் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆகையால் அக்னி சாட்சி திருமணத்தின் முதன்மையான பகுதியாகவும், அதனால் எதிர்காலத்தில் உறவின் வலிமையும், அமைதியும் மேம்படும்.
அக்னி முக்கியத்துவம்
தூய்மை மற்றும் தெய்வீக அருளின் அடையாளமாகும். திருமணம் என்ற புனிதமான சடங்கின்போது அக்னியைச் சாட்சியாக வைப்பதன் மூலம் தெய்வீக சக்தியின் அருள் மணமக்களின் வாழ்வில் கிடைக்கப்பெறும் என முன்னோர்களால் கூறப்படுகிறது.
சடங்கின் பாரம்பரியம்
இது இந்து மதத்தின் பாரம்பரிய சடங்குகளில் ஒன்றாகும். பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் இந்த சடங்கு அன்பும், பக்தியும் நிறைந்த உறவின் தொடக்கத்தை அடையாளப்படுத்துகிறது.
அக்னியை வலம் வருதல்
மனங்களில் மிகவும் முக்கியமான சடங்குகளில் ஒன்று சுற்றி வருவது. இந்த சடங்கை 'சப்தபதி' என்று கூறுகிறார்கள். அதாவது ஏழு அடிகள் என்பது மாப்பிள்ளையும் மணப்பெண்ணின் ஒன்றாக சேர்ந்து நடக்கின்ற அடிக்கு பெயர்தான். இந்த ஏழு அடிகள் நடப்பதற்கு பின்னால் ஆழமான ஆன்மீக மற்றும் சமூக அர்த்தங்கள் உள்ளன. இதன் பின்னால் உள்ள காரணத்தால் புரிந்து கொள்ளலாம்.
ஏழு அடிகளின் தாத்பரியம்
முதல் அடி- வஞ்சம் இல்லாமல் வாழவேண்டும்.
இரண்டாம் அடி -ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உறுதிமொழி
மூன்றாம் அடி -நற்காரியங்கள் எப்போதும் நடக்க வேண்டும் என்று வேண்டுகோள்.
நான்காவது அடி
முகத்தையும் செல்வத்தையும் அளிக்க வேண்டும்.
ஐந்தாவது அடி
ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற உறுதிமொழி.
ஆறாவது அடி
குழந்தை பாக்கியம் வேண்டும் என்ற வேண்டுகோள்.
ஏழாவது அடி - குடும்ப உறவுகள் மற்றும் பாசங்களின் நலனை பாதுகாத்தல்.
அக்னியின் முக்கியத்துவம் ஒரு புனித சக்தியாக பார்ப்பதால் இது வாழ்க்கை முழுவதும் மணமக்கள் எடுக்கிற உறுதிகளை சாட்சியாக ஏற்கிறது. அக்னியைச் சுற்றி நடப்பதால் அவர்கள் உறவிற்கு ஒரு புனிதமான தொடக்கம் கிடைக்கிறது. இந்த ஏழு அடிகள் மணமக்களின் மனதில் ஒரு ஆன்மீக பந்தத்தை உருவாக்குகிறது .
இது வாழ்வின் மகத்தான அம்சங்களை புரிந்துகொண்டு அதற்காக இணைந்து வாழ அனுமதிக்கிறது. இது மாதிரியான பாரம்பரிய திருமண முறைகள் நம் கலாச்சாரத்தின் பெருமையை காட்டுகின்றன.
உறவின் உறுதிப்பாடு
திருமண உறவின் புனிதன்மையை வலுப்படுத்துவதற்கும் இரண்டு நபர்களின் ஆண், பெண் வாழ்க்கைக்கு ஆன்மீக பலத்தையும் உறுதிப்பாட்டையும் வழங்குவதற்கும் அக்னியை சாட்சியாக கருதப்படுகிறது. இந்த அக்னியை சாட்சியாக வைத்துத்தான்.
மணமகன், மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார். அங்கு இருவருமே ஒருவருக்கொருவர் இன்பம், துன்பம், கர்மா இவைகளை கூறுவர் பங்கு ஏற்பதாகவும் என்ற உறுதிமொழியுடன் திருமணம் நடக்கும். வாழ்க்கையில் யாராவது ஒருவர் ஒருவருக்கு துரோகம் செய்தால் அவரை பஞ்சபூதங்களில் ஒன்றான அந்த அக்னி சுடும் என்பதால்தான் அக்கினியை சாட்சியாக வைத்து திருமணம் நடைபெறுகிறது.