வெளிநாடுகளில் இருக்கும் உங்கள் குழந்தை தமிழில் பேசவேண்டுமா? இந்த 10 வழிகள் போதும்!

வெளிநாடுகளில் வளரும் உங்கள் குழந்தைகளை எளிமையாகத் தமிழ் பேச வைப்பது எப்படி? 10 எளிய வழிமுறைகள் இதோ.
Tips to teach tamil to kids in america
தமிழ் மொழி | Tips to teach tamil to kids in americaImage credit: AI Image
Updated on
MM strip
MM strip

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் வம்சாவளி பெற்றோருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், தங்கள் குழந்தைகளை தாய்மொழியான தமிழில் பேச வைப்பதுதான். ஆங்கிலச் சூழலில் வளர்ந்தாலும், நம் கலாச்சாரத்தை அவர்கள் உணர, தமிழ் மொழி புரிதல், பேசுதல், கற்றல், மிக அவசியம். அந்த வகையில், உங்கள் குழந்தைகளை வீட்டில் இயல்பாகத் தமிழில் பேச வைப்பதற்கான 10 எளிமையான வழிமுறைகள் இதோ..!

1. வீட்டிற்குள் இருக்கும்போது தமிழில் மட்டுமே பேச வேண்டும்:

வீட்டிற்குள் ஒரு சிறு விதியை உருவாக்குங்கள். அதாவது, 'வீட்டிற்குள் இருக்கும்போது நாம் தமிழில் மட்டுமே பேச வேண்டும்' என்பதை ஒரு அன்பான கட்டளையாக மாற்றலாம். ஆரம்பத்தில் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினாலும், நீங்கள் தொடர்ந்து தமிழில் பதில் சொல்லுங்கள். இது அவர்களுக்குத் தமிழில் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழலை உருவாக்கும்.

2. அன்றாட உரையாடலில் தமிழ்:

குழந்தைகளிடம் பேசும் சாதாரண விஷயங்களை தமிழில் சொல்லப் பழக்குங்கள். 'சாப்பிட்டாயா?', 'பள்ளி எப்படி இருந்தது?', 'உன் பொம்மை எங்கே?' போன்ற எளிய வாக்கியங்களை தினமும் பயன்படுத்துங்கள். இது அவர்களுக்கு தமிழைப் புரிந்து கொள்ளும் திறனை வளர்க்கும்.

3. தமிழ் கதைகளும் புத்தகங்களும்:

தூங்கச் செல்லும் முன் தமிழ் கதைகளைச் சொல்லுங்கள். நீதிக்கதைகள், ஊர் நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றைக் கூறுவது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். அமேசான் போன்ற தளங்களில் கிடைக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் சிறுவர் கதைகளையும் வாசித்துக் காட்டுங்கள்.

இதையும் படியுங்கள்:
உதட்டுக்கு மட்டுமல்ல... வீட்டுக்கும் உதவும் வாஸ்லின்: இதோ 10 ஆச்சரியமூட்டும் பயன்கள்!
Tips to teach tamil to kids in america

4. தமிழ் அனிமேஷன் மற்றும் படங்கள்:

தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான தமிழ் கார்ட்டூன்களைக் காட்டலாம். தற்பொழுது யூடியூபில் ஏராளமான தரமான தமிழ் குழந்தை பாடல்கள் மற்றும் கதைகள் கிடைக்கின்றன. வார இறுதி நாட்களில் குடும்பத்தோடு ஒரு நல்ல தமிழ் திரைப்படத்தைப் பார்த்து அதைப் பற்றி விவாதிக்கலாம்.

5. உறவினர்களுடன் வீடியோ அழைப்பு:

குழந்தைகளை இந்தியாவில் இருக்கும் தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசச் செய்யுங்கள். அவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களாகவோ அல்லது தமிழை மட்டுமே பேசுபவர்களாகவோ இருந்தால், குழந்தைகள் கட்டாயம் அவர்களுடன் தமிழில் தான் பேச வேண்டிய சூழல் ஏற்படும். இது அவர்களின் மொழித்திறனை இயற்கையாகவே மேம்படுத்தும்.

Tips to teach tamil to kids in america
தமிழ் மொழி | Tips to teach tamil to kids in americaImage credit: AI Image

6. சிறு சிறு பரிசுகள்:

குழந்தைகள் தமிழில் ஒரு முழு வாக்கியத்தைப் பேசினாலோ அல்லது ஒரு தமிழ் வார்த்தையைக் கற்றுக் கொண்டாலோ அவர்களைப் பாராட்டுங்கள். அவர்களுக்குப் பிடித்தமான சிறிய பரிசுகளைக் கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். இந்த ஊக்கம் அவர்கள் மீண்டும் தமிழைப் பேசத் தூண்டும்.

7. விளையாட்டு மூலம் கற்றல்:

விளையாட்டுகள் மூலம் மொழியை கற்றுக் கொடுங்கள். தமிழ் எழுத்துக்களைக் கொண்ட புதிர் விளையாட்டுகளை விளையாடலாம். பெயர்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு (உதாரணமாக: காய்கறிகள், பழங்கள் பெயர்களைத் தமிழில் கூறுதல்). அவர்களைச் சிரிக்க வைத்து, அதே சமயம் மொழியையும் கற்க வைக்கும்.

8. தமிழ் வகுப்புகள் மற்றும் AI:

அமெரிக்காவில் பல இடங்களில் தமிழ் பள்ளிகள் மற்றும் தமிழ் சங்கங்கள் செயல்படுகின்றன. வார இறுதி நாட்களில் அங்கு குழந்தைகளைச் சேர்த்து விடுங்கள். மேலும், இன்றைய டிஜிட்டல் உலகில் AI தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ் கற்றுக்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
சமையலறை பிசுக்கை நொடியில் நீக்க பெண்களின் பழைய துணிக்கு மாற்று இதோ!
Tips to teach tamil to kids in america

9. கலாச்சாரத்தோடு கற்றல்:

மொழியைப் பாடமாகப் பார்க்காமல், உணர்வாகப் பார்க்கச் சொல்லுங்கள். நம் ஊர் பண்டிகைகளான பொங்கல், தீபாவளி போன்றவற்றை வீட்டில் கோலாகலமாகக் கொண்டாடுங்கள். அந்தப் பண்டிகைகளின் பின்னணியில் இருக்கும் கதைகளைத் தமிழில் சொல்லிக் கொடுங்கள். கலாச்சாரத்தோடு இணைந்த மொழி, குழந்தைகளுக்கு எப்போதும் நெருக்கமாக இருக்கும்.

10. பொறுமையும் தொடர்ச்சியும்:

எல்லாவற்றிற்கும் மேலாக, மிக முக்கியமான ஒன்று பொறுமை. குழந்தை ஆங்கிலத்தில் பேசும்போது கோபப்படாமல், மென்மையாக அதை எப்படித் தமிழில் சொல்வது என்று திருத்துங்கள். கற்றல் என்பது ஒரே நாளில் நடப்பதல்ல, இது தொடர்ச்சியான முயற்சி.

அமெரிக்கச் சூழலில் தமிழைப் பேசுவது குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றலாம். ஆனால், பெற்றோர்களாகிய நீங்கள் வீட்டில் ஒரு ஆரோக்கியமான தமிழ் சூழலை உருவாக்கினால், நிச்சயம் உங்கள் குழந்தைகளும் தாய்மொழியின் இனிமையை உணர்ந்து அழகாகத் தமிழில் பேசுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com