இரட்டைக் குழந்தைகளில் யார் மூத்தவன்? குழாயும் பால்ரஸ் குண்டுகளும் மாற்றிய தீர்ப்பு!

இரட்டைக் குழந்தைகளில் யார் மூத்தவன் என்ற குழப்பத்தை தீர்க்க வழக்கறிஞர் சொன்ன விசித்திரமான வாதமும், நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பும் என்ன தெரியுமா?
இரட்டையர்கள் | twins first born legal dispute
இரட்டையர்கள் | twins first born legal disputeImage credit: Gemini AI
என்.எஸ்.வி.குருமூர்த்தி

ஐம்பது வருடங்களுக்கும் மேலான எழுத்துலக அனுபவம். 1970 முதல் சிறு துணுக்குகள் எழுதி, கல்கி, குமுதம், விகடன், சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம், தினமணி கதிர், காமதேனு, இந்து தமிழ் திசை இவற்றிலும், சிறுவர்மணி இதழில் கடந்த 8 வருடங்களாக சுமார் 90 நாடகங்கள் அரங்கம் என்ற பகுதியிலும் பிரசுரமாகி உள்ளன. கல்கி ஆன்லைனில் இது வரை சுமார் 45 கதைகள், கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஒரு cartoon படத்துக்கு வசனம் எழுதும் போட்டியில் (இடம் சோழா ஹோட்டல் function - Overseas SANMAR...குழுமம்) ரைட்டர் சுஜாதா அவர்கள் கையால் இரண்டாம் பரிசு ஒரு விழாவில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது .

Updated on
MM strip
MM strip

இரட்டைக் குழந்தைகளில் யார் அண்ணன்? முதலில் பிறப்பவர்தானே மூத்தவர் என்ற பல வருட நம்பிக்கையை, ஒரு எளிய டெஸ்ட் ட்யூப் சோதனைக் மூலம் நீதிமன்றத்தில் தலைகீழாக மாற்றிய விசித்திரமான சொத்து வழக்கு பற்றியும், அதன் பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் வரலாற்று உண்மைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வம் உள்ளதா? இங்கிலாந்து ராணி எலிசபெத் முதல் உலக நாடுகளின் அரசியல் அரங்கம் வரை கலக்கிய ஆற்காடு சகோதரர்களின் பெருமைகளும், ஒரே பிரசவத்தில் ஐந்து மற்றும் ஒன்பது குழந்தைகள் பிறந்த அரிய உலக சாதனைகளும் இந்தப் பதிவில் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. முழுமையாகத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

“இரட்டைக் குழந்தைகளில் யார் மூத்தவன் யார் இளையவன் ?” என தன் மனைவி கமலாவிடம் கேட்டார் குப்புசாமி.

“இது என்ன கேள்வி.. முதலில் பிறந்தவன் அண்ணன்.. இரண்டாவதாகப் பிறந்தவன் தான் தம்பி.”

“ஒரு உயர் நீதி மன்ற வழக்கில் அப்படி தீர்ப்பாகவில்லை தெரியுமா. மாறி தீர்ப்பு வந்தது.. தெரியுமா.?”

“அது என்ன வழக்குங்க..?”

“ஒரு சொத்து தொடர்பான வழக்கில் இரட்டைக் குழந்தைகளில் யார் மூத்தவன், யார் இளையவன் என வாதம் வந்த போது, நீ சொன்ன மாதிரிதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் பிரபல இரட்டையர்கள் ஆற்காடு ஏ.ராமசாமி முதலியார், ஏ லட்சுமணசாமி முதலியார் இவர்களில் அட்வகேட் இராமசாமி முதலியார் ஒரு சோதனைக் குழாயில் இரு பால்ரஸ் குண்டுகளைப் போட்டு விளக்கி தீர்ப்பையே மாற்றி விட்டார்.”

“கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க..”

“அட்வகேட் இராமசாமி முதலியார் ஒரு டெஸ்ட் ட்யூபில் ஜட்ஜ் முன்னால் இரு பால்ரஸ் குண்டுகளைப் போட்டார் ஒவ்வொன்றாக.

இதையும் படியுங்கள்:
நிறப் பாகுபாடு தரும் வலி தெரியுமா? நம் அறியாமையில் உடையும் மனித மனங்கள்!
இரட்டையர்கள் | twins first born legal dispute

இப்போது ஒவ்வொன்றாக வெளியே எடுத்தார். தன் வாதத்தைச் சொன்னார். முதலில் நான் குழாயில் இருந்து எடுத்த குண்டு முதலில் பிறந்த குழந்தை. அதற்குப் பின் எடுத்த குண்டு இரண்டாவது குழந்தை.. முதலில் பிறந்தவன் தான் அண்ணன் எனச் சொல்வது தவறு. ஏனெனில் அந்த குழாயில் முதலில் சென்றது தான் முதல் குழந்தை உருவானது. அவன் இரண்டாவதாகப் பிறந்தாலும் தாயின் கர்ப்பத்தில் முதலில் உருவான குழந்தை. அவனே மூத்தவன் என வாதிட்டார். வழக்கும் இரண்டாவதாகப் பிறந்தவனே அண்ணன் என முடிவானது. தீர்ப்பும் வெளியானது.

அட்வகேட் ஏ இராமசாமி முதலியாரும் ஏ லட்சுமணசாமி முதலியாரும் இரட்டையர்கள்.

இரட்டையர்கள் | The twins Mr. A. Ramaswami Mudaliar and Mr. A. Lakshmanaswami Mudaliar.
The twins Mr. A. Ramaswami Mudaliar and Mr. A. Lakshmanaswami Mudaliar.

லட்சுமணசாமி முதலியார் பிரபல டாக்டர்.. மகப் பேறு மருத்துவத்தில் நிபுணர். இன்றும் குழந்தை பிறப்பு பற்றி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிக்கும் பாடப் புத்தகம் Clinical Obstetrics அவர் எழுதியதே. பைபிள் போல் ஒரு வழிகாட்டி நூல் ஆகும்.

இங்கிலாந்து இராணி எலிசபெத் அவர்களுக்கு மகப்பேறு பார்த்த டாக்டர்கள் குழுவின் தலைவராக லட்சுமணசாமி முதலியார் இருந்தார்.

மன்னர் சார்லஸ், அவர் சகோதரி பிறந்த போது இவர் அந்த டாக்டர்கள் குழுவுக்கு தலைவர்.

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு பெண்ணும் வளர்த்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியத் திறமைகள்!
இரட்டையர்கள் | twins first born legal dispute

சென்னை தரமணி ஐ ஐ டி இவர் முயற்சியால் உருவானது.”

“ஆச்சரியமா இருக்குங்க.”

“இவர் இப்படி என்றால் திரு இராமசாமி முதலியார் எப்படிப்பட்ட சட்ட நிபுணர் தெரியுமா.. மைசூர் சமஸ்தானத்தில் முதலமைச்சர் பொறுப்பு வகித்தவ்ர். 1945ல் ஐ நா சபை உருவானபோது இந்தியாவின் பிரதிநிதியாகச் சென்றார். சர்தார் வல்லபாய் படேல் ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க செய்த முயற்சிக்கு அவர் ஆலோசனைப் படி ஐ நாவில் வாதாடி இணைப்புக்கு வழி வகுத்தவர்.”

கமலா கேட்டாள்.. ”இரட்டையர்கள் உண்டு.. சில ட்ரிப்ளெட்ஸ்ன்னு மூணும் பிறந்திருக்கு.. அதுக்கு மேல் உண்டாங்க..?”

“ஏன் இல்லாமல்.. க்வாட்ருப்லெட்ஸ்.. 4 குழந்தைகள்”

க்விண்டுப்லெட்ஸ் – 5 குழந்தைகள்

இரட்டையர்கள் | Five babies in a single delivery
Five babies in a single delivery

28.05.1934 கனடாவில் பிறந்த ஒரே பிரசவத்தில் ஐந்து பெண் குழந்தைகள்.

அப்பா .. எல்ஸயர்

அம்மா- ஒலிவா டயோன்

குழந்தைகள் பெயர்.

யுவோன், அனட்டி, செஸிலி, எமிலி, மேரி

டயோன் சகோதரிகள்.. 5 பேர்.

இரட்டையர்கள் | Nine babies in a single delivery
Nine babies in a single delivery

மொரோக்காவில் மே 2023 ல் ஹலிமா சிஸ்ஸி என்ற பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்றாள்.

“படிக்காத மேதை சினிமாவில், ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை என சிவாஜி பாடுவார்.. அது சரிதான் போலிருக்கு.”

என்றாள் கமலா..!

logo
Kalki Online
kalkionline.com